எனர்ஜி ட்ரிங்க்ஸ் குடித்தால் ஆபத்தா? இத்தனை பிரச்னை வருமாம்.. மருத்துவர் அலர்ட்'

Energy Drinks Health Risks: எனர்ஜி குளிர் பானங்கள் குடித்தால் உண்மையில் சக்தி கிடைக்குமா என்பது குறித்து மருத்துவர்கள் அருண்குமார் விளக்கம் அளித்துள்ளார்.   

Written by - Umabarkavi K | Last Updated : Mar 6, 2026, 03:33 PM IST
  • எனர்ஜி ட்ரிங்க்ஸ்
  • எனர்ஜி ட்ரிங்க்ஸ் குடித்தால் என்னென்ன பிரச்னைகள் வரும்
  • மருத்துவர் விளக்கம்
எனர்ஜி ட்ரிங்க்ஸ் குடித்தால் ஆபத்தா? இத்தனை பிரச்னை வருமாம்.. மருத்துவர் அலர்ட்'

Energy Drink: இன்றைய காலத்தில் உடல் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியம்.  உடலை கட்டுக்கோப்பாக வைக்க பலரும் ஜிம், உடற்பயிற்சி, டயர்ட் போன்றவற்றை பின்பற்றி வருகின்றனர். அதே நேரத்தில், சிலர் விளம்பரங்களை பார்த்து எனர்ஜி ட்ரிங்க்ஸ் போன்றவற்றை குடித்து வருகின்றனர். குறிப்பாக, டயட் எனர்ஜி ட்ரிங்க்ஸ் என்று கூறி, சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை பலரும் குடித்து வருகின்றர்.  எனர்ஜி ட்ரிங்க்ஸ் குடித்தால் எனர்ஜி வரும் என்ற எண்ணத்தில் பலரும் எனர்ஜி குடித்து வருகின்றனர். 

Add Zee News as a Preferred Source

கூல் ட்ரிங்க்ஸ் குடிக்கலாமா?

ஆனால், எனர்ஜி ட்ரிங்க்ஸ் குடித்தால் உடலில் சில பிரச்னைகள் ஏற்படலாம். எனவே, எனர்ஜி ட்ரிங்க்ஸ் குடித்தால் எந்தெந்த பிரச்னைகள் ஏற்படும் என்று மருத்துவர் அருண்குமார் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவர் அருண்குமார் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறுகையில், "நடிகர் அஜித் குமார் சமீபத்தில் பிரபலமாக கூல் ட்ரிங்க்ஸ் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்திருந்தார். அதனை அவர் ப்ரோமொட் செய்கிறார். நடிகர்கள் இந்த மாறி விளம்பரம் செய்வது புதிது கிடையாது. 

சச்சின், தோனி, விராட் கோலி உள்ளிட்டோர்  விளம்பர செய்தனர். அவர்களை மாறி நாமும் அந்த பானத்தை பருகினால், அவர்களை போன்று சச்சின், விராட் கோலி ஆகிடலாம் என நினைத்து அதனை குடித்து வருகின்றனர். அதேபோல, கூல் ட்ரிங்க்ஸை நடிகர்கள் விளம்பரப்படுத்தி வருகின்றனர். பிரபலமானவர்கள் வந்து, அதனை விளம்பரத்திட்டாலே அது ஆரோக்கியமாக  இருக்கும் என யாரும் நம்ப வேண்டாம்.  நடிகர்கள் அந்த விளம்பரத்திற்கான பணத்தை பெற்றுக் கொண்டு, அந்த பொருள் நல்லது என விளம்பரப்படுத்தி வருகின்றனர். 

மருத்துவர்  விளக்கம்

எனவே, நாம் அதனை நம்பாமல், மருத்துவர், நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று, அதனை பருகலாம்.  எனர்ஜி ட்ரிங்க்ஸில் எதுவும் கிடையாது. அதிகமாக சர்க்கரை மற்றும் caffeine தான் அதிகம் உள்ளன.  caffeine என்பது நாம் காபி, டீக்கு பயன்படுத்தும் பொருள் தான். நம் மூளையை சுறுசுறுப்பாக வைக்கும் ஒரு கெமிக்கல் தான் caffeine. 100 மில்லி லிட்டர் கூல் ட்ரிங்க்ஸில் 9.5 மில்லி கிராம் caffeine மற்றும் கொஞ்சம் சர்க்கரை இருக்கும். 

100 மில்லி லிட்டர் காபியில் 50 முதல் 60 மில்லி கிராம் caffeine இருக்கிறது. கூட் ட்ரிங்க்ஸில் கொஞ்சம் கம்மியாக இருக்கும்.  இதனை குடித்த பிறகு நம் மூளைக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். சுறுசுறுப்பாக வைக்க உதவும். சர்க்கரை அதிகமாக இருப்பதால் குடித்த முடித்த உடனே சர்க்கரையும் நமக்கு எனர்ஜி கிடைக்கும். அப்புறம் சோர்வாக ஆகிடுவோம். எனவே, கூல் ட்ரிங்க்ஸ் சாப்பிட்டால் எனர்ஜி வரும் என்பதெல்லாம் கிடையாது. நீங்கள் உடற்பயிற்சி, ஆரோக்கியமான சாப்பாடு சாப்பிட்டாலே ஆரோக்கியமாக இருப்பீர்கள். இதுபோன்ற விளம்பரங்களை நீங்கள் நம்ப வேண்டாம்" என்று கூறினார்.

கூல் ட்ரிங்க்ஸ் குடித்தால் என்னென்ன பிரச்னைகள் வரும்?

கூல் ட்ரிங்க்ஸ் குடிப்பதால் அதில் உள்ள சர்க்கரை, கெமிக்கல் காரணமாக உடல் எடையை அதிகரிக்கும். மேலும், டைப் 2 நீரிழிவு நோயை உண்டாக்கும். குளிர் பானங்களில் உள்ள அமிலம் பற்களின் எனாமலை அரித்து பற்களை சொத்தையாக வைக்கும். அடிக்கடி கூல் ட்ரிங்க்ஸ் குடிப்பதால் உடலில் உள்ள கால்சியத்தை உறிஞ்சி, எலும்புகளை பலவீனமாக வைக்கும். வயிற்று வலி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, பசியின்மை போனற்வற்றையும் ஏற்படுத்தும். அதிகமான சர்க்கரை கூல் ட்ரிங்க்ஸில் இருப்பதால் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து இதய பாதிப்புகளை உண்டாக்கும். 

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க: வளர்சிதை மாற்றம் மேம்பட, சீரான செரிமானம் பெற ஆயுர்வேதம் சொல்லும் டிப்ஸ் இதுதான்

 

மேலும் படிக்க: கர்ப்ப காலத்தில் பித்தப்பை கற்கள் ஏற்படும் அபாயம் ஏன் அதிகரிக்கிறது? மகப்பேறு மருத்துவர் விளக்குகிறார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

About the Author

Trending News