Morning Health Tips: தினமும் காலையில் வெறும் வயிற்றில் சியா விதைகள், ஆப்பிள் சைடர் வினிகர் இரண்டையும் சேர்த்து குடித்தால் கிடைக்கும் நன்மைகளை இங்கு காணலாம்.

Apple Cider Vinegar And Chia Seeds: ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தொடர்ச்சியாக உங்களின் உணவுப்பழக்கவழக்கத்தில் வைத்துக்கொள்வதே ஆரோக்கியமான வாழ்வுக்கு அடிப்படையான ஒன்றாகும். காய்கறிகள், பழங்கள், இறைச்சி, கீரைகள் என சமமான ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்ளுதல் மிக முக்கியமாகும்.
Morning Health Tips: சியா விதையுடன் ACV
அதில், சியா விதைகள் மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர் (ACV) ஆகிய இரண்டும் ஊட்டச்சத்துகள் நிறைந்த, மருத்துவ குணங்கள் கொண்டவை எனலாம். சியா விதைகளில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் மட்டுமின்றி நார்ச்சத்து, புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் உள்ளன. மேலும் அதில் ஆண்டிஆக்ஸிடன்ட்ஸ் அதிகம் உள்ளன.
ஆனால் இதற்கு நேர்மாறானது, ஆப்பிள் சைடர் வினிகர். ACV என சுருக்கமாக அழைக்கப்படும் இது நொறுக்கப்பட்ட ஆப்பிள்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ஒரு புளித்த திரவமாகும். இதில் அசிட்டிக் அமிலம், பாலிபினால்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உள்ளிட்டவை ஏராளமாக உள்ளன. மேலும், வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் இதிலும் நிறைந்துள்ளது. இது சமையல், இயற்கை வைத்தியங்களில் பிரபலமான மூலப்பொருளாக இருந்து வருகிறது.
Morning Health Tips: தினமும் இந்த பானத்தை குடித்தால்...
ஆனால், இவை இரண்டையும் சேர்த்து ஒரு குடிபானமாக உட்கொண்டால் உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் போதுமான அளவில் கிடைக்கும். அதிலும் தினமும் காலையில் அதுவும் வெறும் வயிற்றில் சியா விதைகள், ஆப்பிள் சைடர் வினிகர் இரண்டையும் சேர்த்து குடிபானமாக குடித்து வந்தால் கிடைக்கும் நன்மைகளை இங்கு காணலாம்.
Morning Health Tips: ரத்த சர்க்கரை அளவு
சியா விதைகள், ACV இரண்டையும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வதால் உங்களின் ரத்த சர்க்கரை அளவு சீராகவும், கட்டுப்பாட்டிலும் இருக்கும். இதில் உள்ள அசிட்டிக் அமிலம் கார்போஹைட்ரேட்ஸ் செரிமானம் ஆவதை மெதுவாக்கும். இதனால் ரத்த சர்க்கரை அளவு திடீரென உயராது. மேலும், சியா விதைகளில் நார்ச்சத்து இருப்பதால் அது தேவையற்ற கூடுதல் சர்க்கரையை எடுத்துவிடும்.
Morning Health Tips: நச்சு நீக்கம்
இதை காலையிலேயே குடிப்பதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்களையும் நீக்கலாம். இதில் இருக்கும் அசிடிட்டி நிணநீர் வடிகாலை தூண்டும். மேலும், இதில் இருக்கும் நார்ச்சத்து நச்சுக்களுடன் ஒன்றிணைந்துவிடும். இதனால் எளிமையாக உடலின் நச்சுக்கள் வெளியேறும்.
Morning Health Tips: செரிமானம் சீராகும்
இந்த குடிபானத்தை குடிப்பதன் மூலம் செரிமான நொதிகளை தூண்டி, குடல் இயக்கத்தையும் ஆரோக்கியமாக மாற்றலாம், இதனால் செரிமான அமைப்பே சீராகும். ஆப்பிள் சைடர் வினிகரில் உள்ள அசிட்டிக் ஆமிலம் புரதத்தையும், கொழுப்பையும் உடைத்து செரிமானத்திற்கு உதவும். அதே நேரத்தில் சியா விதைகளில் உள்ள நார்ச்சத்து ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்களை ஆதரிக்கும். இதனால் செரிமான அமைப்பும் ஒட்டுமொத்தமாக ஆரோக்கியமாகும்.
Morning Health Tips: உடல் எடை குறைப்பில் உதவும்
இந்த குடிபானத்தை தினமும் குடித்து வருவதால் உடல் எடை குறைப்பில் பெரிய மாற்றத்தை எதிர்கொள்வீர்கள். ஆப்பிள் சைடர் வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம் வயிறுக்கு நிறைவை தரும். இதனால் நீங்கள் அதிக கலோரிகளையும் உட்கொள்ள மாட்டீர்கள். மேலும், சியா விதைகளில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம் உங்களின் தசை வளர்ச்சிக்கு உதவும். வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டும். நீங்கள் நிதானமாகவும் ஆரோக்கியமாகவும் உடல் எடையை குறைக்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ