கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும் 2 சூப்பர் மசாலாக்கள்: இப்படி உட்கொள்ள வேண்டும்

Masala For Cholesterol Control: கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமானால் பல வித உடல் உபாதைகளை நாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பதால், இதை இயற்கையான வழியில் கட்டுக்குள் வைப்பது மிக நல்லதாக இருக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 18, 2025, 07:18 PM IST
  • இலவங்கப்பட்டை மற்றும் மருதம் மரப்பட்டை நீர் கொழுப்பைக் குறைப்பது மட்டுமல்லாமல் செரிமான அமைப்பையும் பலப்படுத்துகிறது.
  • இதை உட்கொள்வதன் மூலம், மலச்சிக்கல், வீக்கம், வாயுத்தொல்லை போன்ற செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்த முடியும்.
  • இதய நோய்களின் ஆபத்தும் இதனால் குறையும்.
கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும் 2 சூப்பர் மசாலாக்கள்: இப்படி உட்கொள்ள வேண்டும்

Masala For Cholesterol Control: இன்றைய காலகட்டத்தில், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால், பெரும்பாலான மக்கள் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொலஸ்ட்ரால் அதிகரித்தால், இரத்த நாளங்கள் அடைக்கப்படலாம். இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். கொழுப்பைக் குறைக்க, மருத்துவரின் ஆலோசனையின் பேரில், அவர் பரிந்துரைக்கும் மருந்து மற்றும் உணவுமுறையை பின்பற்றலாம்.

Add Zee News as a Preferred Source

கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமானால் பல வித உடல் உபாதைகளை நாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பதால், இதை இயற்கையான வழியில் கட்டுக்குள் வைப்பது மிக நல்லதாக இருக்கும். நாம் தினசரி உணவில் பயன்படுத்தும் சில மசாலாக்கள் மூலமாகவே கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கலாம். கெட்ட கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்க உதவும் இரு மசாலாக்களின் தண்ணீர் பற்றி இந்த பதிவில் காணலாம்.

கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் இரண்டு மசாலாப் பொருட்களின் நீர்

கெட்ட கொழுப்பைக் குறைக்க, இந்த இரண்டு மசாலாப் பொருட்களின் சாற்றை உட்கொள்வது நன்மை பயக்கும். மருத மரப்பட்டை, இலவங்கப்பட்டை ஆகிய மசாலாக்கள் கொலஸ்ட்ராலை குறைக்க பெரிய வழியில் உதவும். இந்த மசாலாக்களின் நீரை குடிப்பது அடாவடி கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவும். இந்த நீரை தயாரிக்க, அரை டீஸ்பூன் மருத மரப்பட்டை, சிறிது இலவங்கப்பட்டை மற்றும் ஒரு கிளாஸ் தண்ணீர் போதுமானது. இந்த மசாலாக்களின் நீர் உடல்  ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

மசாலா தண்ணீரை தயாரிப்பது எப்படி?

முதலில் ஒரு பாத்திரத்தில், ஒரு கிளாஸ் தண்ணீரைச் சேர்த்து சூடாக்கவும். இந்த தண்ணீரில் மருதம் பட்டை மற்றும் இலவங்கப்பட்டையை சேர்க்கவும். தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதியாகக் கொதித்ததும், அதை வடிகட்டிக்கொள்ளவும். இதற்குப் பிறகு இதை தேநீர் போல குடிக்கவும். இந்த தண்ணீரை குடிப்பதால் விரைவாக கொழுப்பைக் குறைக்கலாம்.

இதய நோய்களின் ஆபத்து குறையும்

மருதம் மரப்பட்டை மற்றும் இலவங்கப்பட்டையில் பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. அவை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து நம்மை பாதுகாக்கின்றன. இதை உட்கொள்வதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவு குறைகிறது. மருதம் மரப்பட்டை மற்றும் இலவங்கப்பட்டை உட்கொள்வது இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தையும் குறைக்கும்.

செரிமானம்

இலவங்கப்பட்டை மற்றும் மருதம் மரப்பட்டை நீர் கொழுப்பைக் குறைப்பது மட்டுமல்லாமல் செரிமான அமைப்பையும் பலப்படுத்துகிறது. இதை உட்கொள்வதன் மூலம், மலச்சிக்கல், வீக்கம், வாயுத்தொல்லை போன்ற செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்த முடியும்.

இந்த மசாலாக்கள் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன. 

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தினமும் இதை குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

மேலும் படிக்க | குழந்தைக்கு இன்னும் ஒரு வயதாகவில்லையா? அப்போ இந்த உணவுகளை தவிர்க்கவும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News