Weight Loss Drink: உடல் எடையைக் குறைக்க ஆரோக்கியமான உணவை உட்கொண்டு, சமமான ஊட்டச்சத்துகளை எடுத்துக்கொண்டு, தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபடுவது அவசியம். ஆனால், இவை எல்லாவற்றையும் முறையாக செய்தாலும் உடல் எடையை குறையவில்லையா...
Weight Loss Drink: கொழுப்பை குறைக்க உதவும் தேநீர்
கவலைப்படாதீர்கள், இந்த பிரச்னை உங்களுக்கு மட்டுமானதில்லை. பல பேருக்கு இந்த பிரச்னை உடல் எடை குறைப்பு பயணத்தின்போது ஏற்படும். பலருக்கும் உடல் எடை குறைப்பின்போது, தொப்பை குறையவே குறையாது, சில நேரங்களில் வயிற்றில் உப்புசம் ஏற்பட்டு அசௌகரியமான உணர்வை அளிக்கும். இதில் இருந்து நிச்சயம் வெளிவரலாம். அதற்கான தீர்வைதான் இங்கு பார்க்கப்போகிறோம்.
இந்த பிரச்னைக்கு உணவியல் நிபுணர் ரிச்சா கங்காணி எளிய மற்றும் இயற்கையான தீர்வு ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். உடல் கொழுப்பை குறைக்க உதவும் இந்த 5 முக்கிய பொருள்கள் அடங்கிய தேநீரை நீங்கள் தினமும் காலையில் குடித்து வந்தால் நீங்கள் ஆச்சர்யப்படும் அளவிற்கு பலன்கள் உங்களை தேடி வரும்.
Weight Loss Drink: 21 நாள்கள் தினமும் காலையில்...
ரிச்சா கங்கானி இந்த தேனீரை தொடர்ந்து 21 நாள்கள் தினமும் காலையில் குடிக்கும்படி அறிவுறுத்துகிறார். இதில் இஞ்சி, இலவங்கப்பட்டை, எளுமிச்சை, மஞ்சை, மிளகு ஆகிய இயற்கை பொருள்களால் இந்த தேநீர் செய்யப்படுகிறது. தேவையென்றால் ஆப்பிள் சைடர் வினிகரையும் சேர்த்துக்கொள்ளலாம். இது ஒட்டுமொத்தமாக இணைந்து உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும். மேலும், செரிமானத்தை சீராக்கும், உப்புசத்தை குறைக்கும், சரும ஆரோக்கியத்தையும் மீட்டெடுக்கும். இதனால் உங்களின் வளர்ச்சிதை மாற்றம் கூட வேகமெடுக்கலாம்.
Weight Loss Drink: இந்த தேநீரை செய்வது எப்படி?
1 கப் தண்ணீரில் சில துண்டுகள் புதிய இஞ்சி, பாதியாக உடைக்கப்பட்ட ஒரு இலவங்கப்பட்டை, சில எலுமிச்சை துண்டுகளை தோலுடன் சேர்த்து சுமார் 5-7 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
அதன்பின் ஒரு கோப்பையில், 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து, அதில் சூடான அந்த தண்ணீரை ஊற்றி வடிகட்டவும். ஒரு சிட்டிகை அளவிற்கு மிளகை சேர்க்கவும். விருப்பப்பட்டால் 1 டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை சேர்க்கலாம். பச்சையாகவும், வடிகட்டாமலும் இருக்கும் ACV-க்கு முன்னுரிமை அளிக்கலாம். இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.
Weight Loss Drink: இந்த பொருள்கள் ஏன்...? எதற்கு...?
இதில் இடம்பெற்றுள்ள அனைத்து பொருள்களுக்கும் தனித்தனிச் சிறப்புகள் உள்ளன. இஞ்சி செரிமான உதவிகரமானதாகவும் இருக்கும், ஒவ்வாமை பிரச்னைகளுக்கும் தீர்வாக இருக்கும். இலவங்கப்பட்டை ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும், மேலும் அது பசியைக் குறைத்து கொழுப்பை குறைக்கவும் உதவும். எலுமிச்சை பழம் கல்லீரலுக்கு அதிக நன்மைகளை தரும், இது நச்சு நீக்கத்தை உதவும். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும் வகையில் வைட்டமின் சி இதில் உள்ளது.
மஞ்சளில் உள்ள குர்குமின் உடல் வீக்கத்தை குறைக்கிறது, வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டுகிறது. மிளகு உங்களுக்கு இதை குடிக்கும்போது ஒரு காரத்தன்மையை அளிக்கும், அதில் நார்ச்சத்தும் இருக்கிறது. ஆப்பிள் சைடர் வினிகர் உடல் எடையை குறைப்புக்கு உதவியாக இருக்கும், குறிப்பாக பசியை அடக்குகிறது, செரிமானத்தை மேம்படுத்தும். ரத்த சர்க்கரை அளவையும் சீராக வைத்திருக்கும்.
Weight Loss Drink: தினமும் குடிங்க
இது பெரிய மாயாஜாலத்தை நிகழ்த்திவிடாது. ஆனால் சீரான உணவு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன் இந்த தேநீர் இணையும்போது இது வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டும். பல்வேறு தடைகளை தகர்த்து உடல் எடையை குறைக்க உதவும். உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருந்தலாம். 21 நாள்கள் அருந்த வேண்டும். இது எளிமையான மற்றும் ஆரோக்கியமான பானமாகும்.
(பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கப்பட்ட அனைத்தும் ரிச்சா கங்கானி என்பவரின் கருத்தாகும். இதனை பின்பற்றுவதற்கு முன் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (ZEE Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | 31 கிலோவை குறைத்த பெண்... உடல் எடையை குறைக்க அவர் கடைபிடித்த 8 'நச் டிப்ஸ்'
மேலும் படிக்க | 154 கிலோ to 65 கிலோவுக்கு வந்த இளம் பெண்! அவருக்கு உதவிய சிம்பிளான 5 பழக்கங்கள்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









