கொலஸ்ட்ராலை எரிக்க... தொப்பையை கரைக்க... தினமும் தக்காளி ஜூஸ் தவறாம குடிங்க

தக்காளியில் எண்ணற்ற வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் ஆக்ஸிடெண்டுகளும் உள்ளது. இதனை தினமும் அருந்துவதால், கொலஸ்ட்ரால் மற்றும் வெயிட்லாஸ் இரண்டிற்கும் உதவும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 11, 2025, 05:46 PM IST
  • தக்காளி ஜூஸை தினமும் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.
  • உடல் பருமனும் தொப்பையும் கரைய உதவும் ஜீஸ்.
  • புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் கொண்ட உணவு.
கொலஸ்ட்ராலை எரிக்க... தொப்பையை கரைக்க... தினமும் தக்காளி ஜூஸ் தவறாம குடிங்க

தக்காளியில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, வைட்டமின் ஏ, கால்சியம், பாஸ்பரஸ், கந்தகம், மக்னீஷியம், பொட்டாசியம், சோடியம், இரும்பு, பொட்டாசியம், ஃபோலிக் அமிலம் மற்றும் கால்ஷியம் போன்ற சத்துகளும் ஆண்டி ஆக்ஸிடெண்டுகளும் அடங்கியுள்ளன. தினமும் தக்காளி ஜூஸ் குடிப்பதால், கொலஸ்ட்ரால் மற்றும் வெயிட்லாஸ் இரண்டிற்கும் உதவும்.

Add Zee News as a Preferred Source

 சிறந்த கோடை கால பானம்

தக்காளி உங்கள் எடையைக் குறைப்பதிலும், உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதிலும் பயனுள்ளதாக இருக்கும். இதனுடன், தக்காளியில் நார்ச்சத்தும் நல்ல அளவில் காணப்படுவதால் செரிமானத்தை மேம்படுத்தும். அன்றைய நாள் முழுதும் புத்துணர்ச்சியாக இருக்க தேவையான சத்துகள் இதன் மூலம் கிடைக்கின்றன. இது தவிர, தக்காளி சாற்றில் 95% தண்ணீர் சத்தும் உள்ளது. எனவே சிறந்த கோடை கால பானமாக இருக்கும்.

தக்காளி ஜூஸை தினமும் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

தக்காளி ஜூஸ் சுவையானது மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். தக்காளி ஜூஸை தினமும் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. இந்நிலையில், தினமும் தக்காளி ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை விரிவாக இங்கே தெரிந்து கொள்ளலாம்.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காய்கறி

உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க, நீங்கள் தினமும் தக்காளி சாறு குடிக்கலாம். தக்காளியில் உள்ள லைகோபீன் கலவை உங்கள் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே தக்காளி ஜூஸ் இதயத்திற்கு நன்மை பயக்கும். இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும். எனவே, மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய் அபாயத்தையும் பக்கவாதாம் ஏற்படும் ஆபத்தையும் பெருமளவு குறைக்கலாம்.

உடல் பருமனும் தொப்பையும் கரைய உதவும் ஜீஸ்

உடல் பருமனையும், தொப்பை கொழுப்பையும் குறைக்க முயற்சி செய்பவர்களுக்கு, தக்காளி ஜூஸ் சிறந்த தேர்வாக இருக்கும். இதில் கலோரிகள் மிகவும் குறைவு. அதே நேரத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது தவிர, தக்காளி ஜூஸ் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.  கொழுப்பு கரைய மெட்டபாலிஸம்  என்னும் வளர்சிதை மாற்றம்  சிறப்பாக இருக்க வேண்டும். அதோடு, தக்காளி ஜூஸை தினமும் குடிப்பதால் அடிக்கடி படி எடுக்காமல் பசி கட்டுப்படுத்தப்படும். 

முதுமையை தடுத்து இளமையை காக்கும் தக்காளி ஜூஸ்

நீண்ட காலம் இளைமையாக இருக்க விரும்புபவர்கள், தக்காளி ஜூஸை தினம் டயட்டில் சேர்க்க வேண்டும். சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுவதோடு, மாசு மரு இல்லாத அழகான சருமத்தை பெற மிகவும் உதவும். இது சருமத்தில் நீர்சத்தை பாதுகாத்து, சருமத்தின் பளபளப்பை அதிகரிக்கிறது. இதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் முதுமையின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. தொடர்ந்து தக்காளி ஜூஸ் குடிப்பதால் முகப்பரு போன்ற பிரச்சனைகளும் குறையும்.

புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் கொண்ட உணவு

உடலில் செல்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும், ஃப்ரீ ரேடிக்கல்களை நீக்க உதவும் லைகோபீன் என்னும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றம் தக்காளியில் உள்ளது. குறிப்பாக லைகோபீன் புரோர்ஸ்டேட் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது.எனவே, தக்காளி ஜூஸை தினமும் குடிப்பதால் புற்றுநோய் அபாயத்தை பெருமளவு குறைக்கலாம். 

மேலும் படிக்க | 180 கிலோவில் இருந்து... 97 கிலோவை குறைந்த இன்ஸ்டா பிரபலம் - 'நோ' குறுக்கு வழி!

மேலும் படிக்க | ஹீமோகுளோபின் குறைவுக்கு இயற்கையான தீர்வு...ரத்த சோகையை எளிதில் விரட்டும் மேஜிக் டிரிங்க்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News