)
Weight Loss Journey: துபாயைச் சேர்ந்த ஜுபைர் சவுத்ரி என்பவர் வெறும் 5 மாதங்களில் 40 கிலோ உடல் எடையை குறைத்திருக்கிறார். 135 கிலோவில் இருந்த சவுத்ரி அடுத்த 5 மாதங்களில் 95 கிலோவுக்கு வந்துவிட்டாராம். 2024ஆம் ஆண்டின் இறுதியில் அவர் உடல் எடை குறைப்பு பயணத்தை தொடங்கி உள்ளார். அப்போது முதல் அவர் வாழ்க்கைமுறையில் பல மாற்றங்களை செய்துள்ளார்.
Weight Loss Journey: ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை
ஜுபைர் சவுத்ரி பல மணிநேரங்கள் உட்கார்ந்த நிலையிலேயே வேலையை செய்யும் வாழ்க்கை முறையில் இருந்துள்ளார். மேலும், உணவு டெலிவரி செயலிகள் மூலம் துரித உணவுகளை அதிகம் ஆர்டர் போட்டு சாப்பிடும் பழக்கத்தையும் வைத்திருக்கிறார். இதனாலேயே அவரது உடல் எடை அதிகரித்திருக்கிறது.
அந்த வகையில், உடல் எடை குறைப்பு பயணம் குறித்து ஜுபைர் சவுத்ரி Gulf News ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "எனது உடல் எடை மிகவும் அதிகமாக இருந்தது. அது வெறும் எடை சார்ந்தது மட்டமில்லை. மனரீதியாகவும் சரி, உடல் ரீதியாகவும் சரி என்னை எனக்கே பிடிக்கவில்லை. என் மருத்துவர் சொன்னார், நானே என்னை சரிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும்...
Weight Loss Journey: ஜுபைர் சவுத்ரியின் எடை குறைப்பு பயணம்
நான் துபாயில் தனியாக வசித்து வருகிறது. நான் பல மணிநேரங்கள் அலுவலக மேசையில் உட்கார்ந்தே வேலை பார்ப்பவன். அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வந்ததும் செயலிக்குள் சென்று உணவை ஆர்டர் செய்து சாப்பிடுவேன். அதில் எப்போதும் ஆப்பர்கள் இருந்துகொண்டே இருக்கும். நான் பர்கர், பிட்சா போன்ற ஃபாஸ்ட் ஃபுட்களையே அதிகம் சாப்பிடுவேன். அவை ஆரோக்கியமானதே கிடையாது. நான் மிகைப்படுத்திக் கூறவில்லை, நான் எனது வீட்டில் உள்ள சமையலறைக்குள் கடைசி 2 ஆண்டுகளில் வெறும் 5 முறைதான் சென்றிருப்பேன்" என தெரிவித்தார். தொடர்ந்து அவரது உடல் எடை குறைப்பு பயணம் குறித்தும் கூறியுள்ளார்.
அந்த பயணத்தில், சவுத்ரி துரித உணவுகளை தவிர்த்துவிட்டு வீட்டில் சமைத்து சாப்பிட தொடங்கி உள்ளார். மேலும் ஆரோக்கிய உணவுகளான சாலட்கள், காய்கறிகள், சிக்கன் உள்ளிட்டவற்றை சாப்பிடத் தொடங்கி உள்ளார். இதன்மூலம் உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுத்துள்ளார். உடல் எடையை குறைப்பு சவாலில் இணைந்த ஜுபைர், 12 வாரங்களில் 34.6 கிலோவை குறைத்துள்ளார். அவர் தொடர்ச்சியாக ஒருநாள் விடாமல் இந்த செயல்முறையை செய்து வந்துள்ளார். அவரது பிறந்தநாளில் மட்டுமே கட்டுப்பாட்டை கொஞ்சம் தளர்த்தியிருக்கிறார்.
Weight Loss Journey: அடுத்த இலக்கு இதுதான்...
இதுகுறித்து அவர் கூறுகையில், "இப்போது எனக்கு எதையும் சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற உணர்வு வருவதில்லை. தற்போது இந்த வாழ்க்கைமுறையை நான் மிகவும் நேசிக்கிறேன். உடல் ரீதியாகவும் சரி, உணர்வு ரீதியாகவும் சரி, மன ரீதியாகவும் சரி நான் அற்புதமாக உணர்கிறேன். எனது தன்னம்பிக்கை இப்போது வளர்ந்துள்ளது" என்றார். மேலும் அவரது உடல் எடை குறைப்பு அவருடன் பணிபுரிவோருக்கு பெரிய பங்கிருப்பதாகவும், அவர்கள் தொடர்ந்து ஊக்கம் அளித்ததாகவும் ஜுபைர் கூறினார். தற்போது 95 கிலோவில் இருக்கும் அவர் இந்தாண்டுக்குள் 80 கிலோவுக்குள் வர முயற்சிப்பதாக தெரிவித்தார்.
உடல் எடையை நிர்வகிப்பதில் நீங்கள் சாப்பிடுவதும் முக்கிய பங்காற்றும். நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் ஓடலாம், உடற்பயிற்சியை செய்யலாம், உணவில் கோட்டைவிட்டால் ஆற்றில் மூழ்கிகொண்டிருக்கும் படகில் உட்கார்ந்துகொண்டு ஸ்பூனை வைத்து துடுப்பு போடுவது போன்றது. எனவே உடல் எடை குறைப்பு என்பது ஆரோக்கியமான வாழ்க்கைமுறை சார்ந்ததாகும்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் ஜுபைர் சவுத்ரி என்பவரின் தனிப்பட்ட அனுபவமாகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ