பெண்களே உஷார்.. தோள்பட்டையில் ஓவர் வலியா? அப்போ ஹார்ட் அட்டாக் ஆ இருக்கலாம்

Symptoms of Heart Condition in Women: பல பெண்கள் இதய நோயின் அறிகுறியை புறக்கணித்து வருகின்றனர், இது மிகவும் கடுமையான பிரச்சினையை ஏற்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில், பெண்களில் காணப்படும் இதய நோய்களின் ஆரம்ப அறிகுறிகளைப் பற்றி இன்று காண்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 1, 2025, 03:46 PM IST
  • மார்பில் அழுத்தம் அல்லது அசௌகரியம்.
  • தொண்டை, தாடை, முதுகு அல்லது தோள்களில் வலி.
பெண்களே உஷார்.. தோள்பட்டையில் ஓவர் வலியா? அப்போ ஹார்ட் அட்டாக் ஆ இருக்கலாம்

Heart Conditions in Women: இதய நோய் என்பது இதயத்தின் செயல்பாடுகளில் ஏற்படும் குறைபாடுகள் மற்றும் திணறல்களைக் குறிக்கும். தற்போது ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்தவகையில் பெண்கள் தற்போது இதய நோயின் ஆரம்ப அறிகுறிகளை புறக்கணித்து வருவதை நாம் காண முடிகிறது. இதன் காரணமாக மருத்துவர்கள் சரியான சிகிச்சை கொடுப்பதில் சிரமப்படுகின்றனர். இது தொடர்பாக டாக்டர் ராஜு வியாஸ் (இருதயநோய் நிபுணர், ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் இயக்குநர்) கூறுகையில், பெண்களில் காணப்படும் இதய நோய் அறிகுறிகள் எப்போதும் குறைவான தீவிரத்தன்மை கொண்டது என்கிறார். இத்தகைய சூழ்நிலையில், பெண்களில் இதய நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது முக்கியம் ஆகும், இதன் மூலம் நாம் சரியான நேரத்தில் சிகிச்சை செய்துக் கொண்டு, அசம்பாவித்ததை தவிர்க்கலாம்.

Add Zee News as a Preferred Source

சோர்வு (Fatigue): 
இதயத்தில் பிரச்சினை உள்ளவர்கள் உடல் செயல்பாடுகளை கையாள்வதில் சிக்கலாக இருந்து சோர்வை ஏற்படுத்தலாம். அதேபோல் இதய நிறைவு போன்ற பிரச்சினைகளில், உடலில் இரத்த ஓட்டம் குறைவதால், சோர்வு அதிகரிக்கக்கூடும். சரியான ஓய்வுக்கு பிறகும் சோர்வாக உணர்ந்தால், இதயப் பிரச்சினையாக இருக்கலாம். அதே நேரத்தில், அன்றாட வேலைகளால் நீங்கள் விரைவாக சோர்வடைந்து, உடலில் சக்தியின்மையை உணர்ந்தால் அதுவும் இதய நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

மூச்சுத்திணறல் (Shortness of Breath):
இதயம் சரியாக வேலை செய்யவில்லை என்றால், மூச்சுத் திணறல் ஏற்படலாம். இதயப் பிரச்சனை ஏற்பட்டால், சுவாசப் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், லேசாக வேலை செய்யும்போதோ அல்லது ஓய்வெடுக்கும்போதோ சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் அவை இதய நோயைக்கான அறிகுறியாக இருக்கலாம்.

மார்பில் அழுத்தம் அல்லது அசௌகரியம் (Chest Pain or Discomfort):
பெண்களுக்கு இதயப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மார்பில் அழுத்தம் அல்லது அசௌகரியத்தை உணர்லாம். அத்தகைய சூழ்நிலையில், பெண்களுக்கு மார்பில் இறுக்கம், அழுத்தம் அல்லது அசௌகரியத்தை உணரலாம். இந்த அசௌகரியம் தொடர்ந்து ஏற்பட்டால் கட்டாயம் மருத்துவரை அணுகவும்.

தொண்டை, தாடை, முதுகு அல்லது தோள்களில் வலி (Pain In throat, jaw, back, or shoulders):
இதயத்தில் பிரச்சனை இருந்தால், ​​மார்பில் மட்டும் வலி ஏற்படாது. இதயப் பிரச்சினைகள் உள்ள பெண்களுக்கு தொண்டை, தாடை, முதுகு அல்லது தோள்களிலும் வலி ஏற்படலாம்.

வாந்தி, வாயு அல்லது வயிற்றுப் பிரச்சினைகள் (Vomiting, gas, or stomach problems):
பல பெண்களுக்கு செரிமானம் பிரச்சனைகள் ஏற்படலாம். வயிற்றில் கனத்தன்மை, நெஞ்செரிச்சல், வாந்தி அல்லது வாயு ஏற்படலாம். இவை இதய நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | சீரகம் முதல் ஏலக்காய் வரை... நலம் தரும் மசாலாக்களின் மருத்துவ பண்புகள்

மேலும் படிக்க | கை, கால்களில் தெரியும் இந்த புற்றுநோய் அறிகுறிகள்; புறக்கணிப்பது ஆபத்தானது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

...Read More

Trending News