ஓட்ஸை நைட் ஊறவைத்து... காலையில் இப்படி சாப்பிடுங்க - தொப்பை பட்டுனு கரையும்!

Healthy Breakfast: இரவு முழுவதும் பால் அல்லது யோகர்டில் ஊறவைத்த ஓட்ஸை காலை உணவாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 7, 2025, 06:57 AM IST
  • உடல் எடை குறைப்பில் இது முக்கிய பங்காற்றும்.
  • மேலும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் கைக்கொடுக்கும்.
  • இதில் பழம், நட்ஸ், தேன் கலந்தும் சாப்பிடலாம்.
ஓட்ஸை நைட் ஊறவைத்து... காலையில் இப்படி சாப்பிடுங்க - தொப்பை பட்டுனு கரையும்!

Healthy Breakfast For Weight Loss: உடல் எடை குறைக்கும் போது சில உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியமாகும். அந்த உணவுகளே உங்களுக்கு உடல் எடை குறைப்பில் பயனளிக்கும். உணவுப் பழக்கவழக்கம் உடல் எடை குறைப்பில் மிக முக்கியமான ஒன்று.

Add Zee News as a Preferred Source

அந்த வகையில் ஆரோக்கியமான காலை உணவுக்கு ஓட்ஸ் எப்போதுமே பலராலும் பரிந்துரைக்கப்படும் உணவாக உள்ளது. அதுவும் அந்த ஓட்ஸை இரவு முழுவதும் ஊறவைத்து சாப்பிடுவதால் நன்மைகளும் அதிகம் என்கின்றனர்.

Healthy Breakfast: இரவு முழுவதும் ஊறவைத்த ஓட்ஸ்

இரவு முழுவதும் பால் அல்லது யோகர்ட் ஊற்றி, ஓட்ஸை ஊறவைக்கலாம். நீங்கள் அதை ஃப்ரிட்ஜில் வைத்து காலையில எடுத்து சாப்பிடலாம். காலையில் தேவைப்பட்டால் இனிப்பிற்கும், சுவைக்கும் தேன் அல்லது பழங்களை சேர்த்து சாப்பிடுங்கள், இது காலை உணவுக்கும் ஆரோக்கியமானதாக இருக்கும், சுவையும் அளிக்கும்.

மேலும் படிக்க | ஆண்களின் அழகை கெடுக்கும் குடல் அசுத்தம்... காரணமும் தீர்வும் முழு விவரம்..!

ஓட்ஸில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருக்கின்றன. நீங்கள் அதனை காலையில் சாப்பிடுவதால் உங்களின் முழு நாளுமே சிறப்பானதாக அமையும். அந்த வகையில் நீங்கள் இரவு முழுவதும் ஊறவைத்த ஓட்ஸை, காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இங்கு விரிவாக காணலாம்.

Healthy Breakfast: வயிறு நிரம்பிய உணர்வை தரும்

கார்போஹைட்ரேட்ஸ், புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவை இருப்பதால் செரிமானம் மெதுவாக நடைபெறும். மேலும், நீடித்த ஆற்றல் கிடைக்கும். இவை எல்லாவற்றையும் விட வயிறு நிரம்பிய உணர்வையும் உங்களுக்கு கொடுக்கும். வயிறு நிரம்பிய உணர்வு இருப்பதால் மதிய உணவிற்கும் காலை உணவிற்கும் இடையே பசியே எடுக்காது. இது உடல் எடை குறைப்பில் சிறப்பாக கை கொடுக்கும்.

Healthy Breakfast: நார்ச்சத்து நிறைந்தவை

இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இதனை காலை உணவாக எடுத்துக் கொள்வது சரியான முடிவே ஆகும். இதில் இருக்கும் ஓட்ஸ், பால் அல்லது யோகர்ட் ஆகியவற்றில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. இவை அனைத்தும் செரிமான அமைப்பின் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். உங்களின் ரத்தச் சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கவும் உதவும். செரிமான ஆரோக்கியம் உடல் எடை குறைப்புக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஒன்றாகும்.

Healthy Breakfast: ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவு

இதில் ஊட்டச்சத்து நிரம்பியிருக்கின்றன. நார்ச்சத்து புரதச்சத்து மட்டுமின்றி உடலுக்கு தேவையான கனிமங்கள், வைட்டமின்கள் இதில் நிரம்பி உள்ளன. ஓட்ஸ், பால், யோகர்ட் ஆகியவற்றின் கலவை உங்களுக்கு கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் ஆகியவற்றை வழங்குகிறது.

இதில் நீங்கள் பழங்கள் மற்றும் நட்ஸ் ஆகியவற்றை சேர்த்து சாப்பிடுவதால் ஆன்டிஆக்சிடென்ட்ஸ் அதிகமாக கிடைக்கும். மேலும் இவற்றில் ஆரோக்கியமான கொழுப்புகளும் உள்ளன. எனவே இத்தனை ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய காலை உணவு எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதுதான்.

Healthy Breakfast: இதயத்திற்கு ரொம்ப நல்லது

இதில் கரையக்கூடிய நார்ச்சத்து, ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், பொட்டாசியம் ஆகியவை இருப்பதால் இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை விளைவிக்கும். ஏனென்றால் இதில் குறைந்த கொலஸ்ட்ரால் அளவே இருக்கின்றன. ரத்த சர்க்கரை அளவும் சீராக இருக்கும், இதன் மூலம் உங்களுக்கு இதய நோய் வரும் ஆபத்து குறையும், இதய ஆரோக்கியமும் நலமுடன் இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான கருத்துகளின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை)

மேலும் படிக்க | உடல் பருமனுக்கு உடனடி தீர்வளிக்கும் உணவுகள்: ட்ரை பண்ணி பாருங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News