இந்த 5 உணவுகளை... ஊறவைத்து சாப்பிட்டால் நோய் அண்டாது - குளிர்காலத்திலும் ஜம்முனு வாழலாம்!
Soaked Foods In Winter: குளிர்காலத்தில் இந்த 5 உணவுகளை ஊறவைத்து உண்பதன் மூலம் காய்ச்சல், சளி போன்றவை உங்களை அண்டாது, உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
Health Benefits Of Soaked Foods In Winter: குளிர்காலத்தில் எளிதாக ஒருவருக்கு சளி, காய்ச்சல் ஆகிய உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுவதை பார்த்திருப்போம். காரணம், குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு அமைப்பு சற்று பலவீனமாகும். அந்த வகையில் நீங்கள் ஆரோக்கியமான உணவுமுறையை கடைபிடிக்கும்பட்சத்தில் நிச்சயம் உடல்நலன் பாதிக்கப்படாது. எனவே, சில ஊறவைத்த உணவுகளை இந்த குளிர் காலங்களில் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் உங்களுக்கு நீர்ச்சத்து மட்டுமின்றி அதிக வைட்டமிண் கிடைக்கும். மேலும், இந்த உணவுகளை ஊறவைத்து உண்பதன் மூலம் கால்சியம், இரும்புச்சத்து, மேக்னீஸியம் ஆகிய ஊட்டச்சத்துகளும் கிடைக்கும்.
மேலும், குளிர்காலத்தில் ஊறவைத்த உணவுகளால் உடலுக்கு வெப்பம் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் பலம் பெறும். அந்த வகையில், குளிர் காலத்தில் எந்த உணவுகளை ஊறவைத்து சாப்பிட்டால் அதிக ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பது இங்கு விரிவாக காணலாம்.
சியா விதைகள்
குளிர்காலத்தில் சியா விதைகளை ஊறவைத்து தினமும் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதனால், செரிமானம் சீராகும். குடல் இயக்கம் ஆரோக்கியமாக இருக்கும்.
பயிர்கள்
பச்சை பயிர் உள்ளிட்ட பயிர் மற்றும் பருப்புகளை ஊறவைத்து சாப்பிடுவதன் மூலம் அதில் உள்ள நார்ச்சத்து, வைட்டமிண், கனிமங்கள், புரதங்கள் ஆகியவை முழுவதுமாக கிடைக்கும். இதில் குறைந்த கிளைசிமிக் இன்டெக்ஸ், ரத்த சர்க்கரை அளவை திடீரென உயர்த்தாது. மேலும் அதில் உள்ள இரும்புச்சத்து உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கும். அலர்ஜிகளுடன் போட்டியிடும். இதனால், குளிர்காலத்தில் உங்களை நோய் அண்டாது.
வால்நட்ஸ்
வால்நட்ஸை ஊறவைத்து சாப்பிடுவது நல்லது. அதுவும் குளிர்காலத்தில் அப்படி சாப்பிடுவது கூடுதல் நன்மையை அளிக்கும். குறிப்பாக, இதில் உள்ள புரதங்கள், ஒமேகா-3 ஃபேட்டி அமிலங்கள், ஆண்டிஆக்ஸிடன்ட்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். குறிப்பாக செரிமானம் சீராகும். இதய ஆரோக்கியம் பலம் பெறும், அறிவாற்றலும் பிரகாசமாகும்.
ஓட்ஸ்
இரவில் ஓட்ஸை ஊறைவைத்து அதனை காலையில் சாப்பிடுவதன் மூலம் செரிமானம் எளிமையாகும். இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை சீராக்குவது மட்டுமின்றி, கொலஸ்ட்ராலை குறைக்கும், ரத்த சர்க்கரை அளவை சீராக்கும், இதயத்தை ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
பாதாம்
பாதாமையும் நீங்கள் இரவு முழுவதும் ஊறவைத்து அடுத்த நாள் காலையில் சாப்பிடுவதால் செரிமானம் சிறப்பாக இருக்கும். கால்சியம், மேக்னீசியம் ஆகியவை உடலால் எளிமையாக உறிஞ்சப்படும். பாதாமை ஊறவைப்பதால் இதில் உள்ள பைடிக் அமிலம் இதில் கரைந்து, கனிமங்கள் எளிமையாக உடலில் சேர உதவும்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் வீட்டு வைத்தியங்கள் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை பின்பற்றும் முன்னர் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | அத்திப்பழத்தை ஊறவைத்து சாப்பிட்டால் ஆயிரம் நன்மைகள்: பட்டியல் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ