)
உடல் எடையையும் தொப்பையும் குறைத்து, பிட் ஆக இருக்க அனைவருமே விரும்புகிறார்கள். தொப்பை கொழுப்பு அழகுக்கும் ஆரோக்கியத்திற்கும் ஒரு பிரச்சனையாக உள்ளது. பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி, தொப்பை கொழுப்பை அகற்றுவது எளிதல்ல. பலர் ஜிம்மில் மணிக்கணக்கில் பயிற்சி செய்கிறார்கள், ஆனால் குறிப்பிடத்தக்க வித்தியாசம் எதுவும் தெரிவதில்லை. வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பு எளிதில் குறையாது. ஆனால், சில எளிதான மற்றும் பயனுள்ள பயிற்சிகள் உங்கள் தொப்பை கொழுப்பை எரிக்கும்.
தொப்பை கொழுப்பின் இரண்டு வகைகள்
சில உடற்பயிற்சிகளை நீங்கள் தொடர்ந்து செய்தால், 21 நாட்களில் வித்தியாசத்தை உணர முடியும் என்று உடற்பயிற்சி நிபுணர்கள் கூறுகின்றனர். வயிற்றில் படிந்திருக்கும் கொழுப்பு இரண்டு வகைகளாகும் - ஒன்று சருமத்தின் கீழ் இருக்கும், மற்றொன்று குடலுக்கு அருகில் உடலுக்குள் படிந்திருக்கும். சருமத்தின் கீழ் உள்ள கொழுப்பை விட மிகவும் ஆபத்தானது குடல்களுக்கு இடையில் படிந்திருக்கும் கொழுப்பு. இது உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களை வெளியிடுகிறது மற்றும் பல நோய்களை ஏற்படுத்துகிறடு.
ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் தொப்பை கொழுப்பு
தொப்பை கொழுப்பை சரியான நேரத்தில் குறைக்கவில்லை என்றால், அது பல கடுமையான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. இதில் மாரடைப்பு, வகை 2 நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் கூட அடங்கும். அதனால்தான் உடலை பிட் ஆல வைத்திருப்பதும் மற்றும் தொப்பை கொழுப்பை கட்டுக்குள் வைத்திருப்பதும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம்.
பிளாங்க் (Plank) பயிற்சி
உடல் பருமனையும் தொப்பையை கரைக்க, பிளாங்க் (Plank) என்னும் பயிற்சி சிறந்த பலன் கொடுக்கும். பிளாங்க் பயிற்சி , வயிற்று தசைகளுக்கு அதிக வேலை கொடுத்து வலுவாக்குவதால் தொப்பை வெண்ணெய் போல் கரையும். இந்த பயிற்சியை செய்வதன் மூலம், உங்கள் வளர்சிதை மாற்றம் துரிதமடைந்து, அதிக கலோரிகள் எரிக்கப்படுவதால், உடல் பருமனும் குறையும். முதலில் தரையில் வயிறு நெற்றி அனைத்தும் தரையில் படும்படி குப்புற படுக்க வேண்டும். கால் விரல்கள் தரையில் பதித்தபடி ஊன்றிக் கொண்டு, முழங்கையை தரையில் பதித்தபடி உடலை மேலே உயர்த்த வேண்டும். இதனை தினம் செய்து வந்தால் தொப்பை கரைவதோடு மாட்டுமல்லாமல், மூட்டு, முதுகு வலி ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும்.
முழங்கால் பயிற்சி (High Knee Clap)
High Knee Clap என்னும் முழங்கால் பயிற்சி என்பது வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பை விரைவாகக் குறைக்கும் ஒரு விரைவான மற்றும் எளிதான பயிற்சியாகும். இதைச் செய்யும்போது, முழங்கால்களை மார்புக்கு கொண்டு வர வேண்டும், அதே நேரத்தில், முழங்க்காலுக்கு கீழே கைகளை கொண்ட்ய் சென்று கைதட்ட வேண்டும். இந்த பயிற்சியை தினமும் 50 முறை செய்வது சிறந்த பலனைத் தரும்.
பக்கவாட்டு க்ரஞ்ச் (Side Crunch)
பக்கவாட்டு க்ரஞ்ச் சாய்ந்த படுத்திருக்கும் நிலையில் தசைகளை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், உடலின் மைய தசைகளையும் டோன் செய்கிறது. இதை தினமும் செய்வதன் மூலம், இடுப்பு படிப்படியாக மெலிந்து, தொப்பை கொழுப்பையும் குறைக்கிறது. வலது மற்றும் இடது புறம் சாய்ந்து என, இருபுறமும் 25 முறை இதை செய்யலாம்.
கிராஸ் க்ரஞ்ச் (Cross Crunch)
இடுப்பை மெலிதாக்கி, இருபுறமும் உள்ள கொழுப்பைக் குறைக்க விரும்பினால், கிராஸ் க்ரஞ்ச் சிறந்த வழி. இந்தப் பயிற்சி இடுப்பை வடிவமைப்பது மட்டுமல்லாமல், அதை வலிமையாக்கவும் செய்கிறது. இதை ஒரு நாளைக்கு 50 முறை செய்வது நன்மை பயக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ