உடல் பருமனை குறைக்க வாழ்க்கை முறையை மாற்றுவது அவசியம். இதற்கு, நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள், என்ன பானங்கள் அருந்துகிறீர்கள் என்பது மிக முக்கியம். உணவு பழக்கம் உங்கள் ஆரோக்கியத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது கொழுப்பைக் கரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களுடன் இணைந்து உடல் எடையைக் குறைக்க மெட்டபாலிஸத்தை தூண்டும் ஆற்றல் கொண்ட சில பானங்கள் உங்களுக்கு பெரிதும் உதவும். இவை வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டி கூடுதல் கலோரிகளை எரித்து உடல் பருமனை குறைக்கும்.
தொப்பை கொழுப்பை கரைக்க உதவும் சில பானங்கள் (Weight Loss Drinks)
உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையின் குறைபாடுகளால், உடல் பருமன் இன்று மக்களுக்கு ஒரு பிரச்சனையாக மாறி வருகிறது. உடல் பருமன் என்பது பல உடல்நல பிரச்சனைகளையும் (Health Tips) கொண்டு வருகிறது. இந்நிலையில் தொப்பை கொழுப்பை கரைக்க, அதிக எடையை குறைக்க வீட்டில் தயாரிக்கப்பட்ட சில பானங்கள் உங்களுக்கு பெரிதும் கை கொடுக்கும்.
மெட்டபாலிஸம் தூண்ட உதவும் சில பானங்கள் ( Drinks To Boost Metabolism)
இன்று இங்கே குறிப்பிட்டுள்ள சில ஆரோக்கியமான பானங்கள், பல வகைகளில் ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியவை. இது உங்கள் எடை இழப்புக்கு பெரிதும் உதவும். இந்த பானங்களை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், மெட்டபாலிஸம் தூண்டப்பட்டு, அதிக கொழுப்பு எரிக்கப்படும். சில நாட்களிலேயே நல்ல பலன் கிடைக்கும். உடல் எடையை குறைக்க பயனுள்ள வீட்டில் தயாரிக்கப்பட்ட பானங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்...
நெல்லிக்காய்-அலோ வேரா சாறு (Amla Aloe Vera Drink)
நெல்லிக்காயை விட சிறந்ச்த ஆண்டி ஆக்ஸிடெண்ட் கொண்ட சிறந்த உணவு எதுவும் இல்லை என்கின்றனர் ஆயுர்வேத நிபுணர்கள். இதில் உள்ள வைட்டமின் சி நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதோடு, நீங்கள் தினமும் 20-20 மில்லி ஆம்லா மற்றும் கற்றாழை சாற்றை சேர்த்து உட்கொண்டால், அது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. ஏனெனில் இந்த சாறு உங்கள் வளர்சிதை மாற்றத்தையும் தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சீரக நீர் (Cumin Water)
சீரகத்தில் மெட்டபாலிஸத்தை தூண்டும் ஆற்றல் கொண்டது. மேலும், சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு குணங்கள் காரணமாக, சீரக விதைகள் கொழுப்பை எரிக்க உதவும். மேலும், இரத்தத்தை சுத்தம் செய்வதன் மூலம் செரிமானம் மேம்படும். சீரக நீர், சிறந்த டீடாக்ஸ் பானமாக செயல்பட்டு, சருமப் பொலிவு மற்றும் எடை குறைப்பு இரண்டிற்கும் பெரிதும் உதவுகிறது.
இஞ்சி எலுமிச்சை பானம் (Ginger - Lemon Drink)
உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும், எடையை விரைவாக குறைக்கவும் இஞ்சி - எலுமிச்சை நீர் ஒரு சிறந்த பயனுள்ள பானமாகும். வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சையுடன் 1 கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை குறையும். இஞ்சி - எலுமிச்சம்பழ நீர் உடல் கொழுப்பை எரிக்கும் செயல்முறையை மேம்படுத்துகிறது.
க்ரீன் டீ (Green Tea)
தினமும் காலையில் காபி டீக்கும் பதிலாக கிரீன் டீ குடிப்பது உங்கள் எடையை அதிகரிக்க உதவுகிறது. தினமும் காலையில், மெட்டபாலிஸத்தை தூண்டும் ஆற்றல் கொண்ட கிரீன் டீயை உட்கொண்டால், அது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும். கிரீன் டீ உங்கள் உடலை டீடாக்ஸ் செய்து வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் எடை இழப்பு செயல்முறையை துரிதப்படுத்துகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | கார்போஹைட்ரேட்: வில்லனாக பார்க்காதீங்க... இவரும் ஹீரோ தான்... 5 நன்மைகள் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









