Coriander and Mint Water: நாம் நமது சமையலில் பயன்படுத்தும் பல வகையான உணவுப் பொருட்கள் நமது உணவின் சுவையை அதிகரிப்பதோடு உடலுக்கும் பல வித ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கின்றன. பல வித ஆரோக்கிய நன்மைகள் கொண்ட உணவுப்பொருட்களில் கொத்தமல்லி மற்றும் புதினா இலைகள் மிக முக்கியமானவை.
புதினா மற்றும் கொத்தமல்லி இலைகள் பெரும்பாலும் சட்னி செய்வதற்கும் பல்வேறு உணவு வகைகளின் சுவை மற்றும் மணத்தை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன. கொத்தமல்லியில் வைட்டமின் ஏ, சி, கே, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் ஆகிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
புதினா இலைகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் உள்ளன. இந்த கூறுகள் அனைத்தும் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் புதினா மற்றும் கொத்தமல்லி சாற்றைக் குடித்தால், பல சிறந்த நன்மைகளைப் பெறலாம். கொத்தமல்லி மற்றும் புதினா இலை சாறை தினமும் குடித்தால் கிடைக்கும் ஆரோக்கியமான நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
புதினா மற்றும் கொத்தமல்லி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
- தினமும் புதினா மற்றும் கொத்தமல்லி சாறு குடித்து வந்தால், அது உங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
- இந்த சாறை குடித்தால் வயிற்று பிரச்சனைகள் நீங்கும்.
- இந்த சாறு உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கும்.
- இந்த இரண்டு இலைகளின் சாற்றைக் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கும்.
- கோடைக்காலத்தில், இதன் சாறு குடிப்பது உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும் ஒரு சஞ்சீவியாக இருக்கின்றது.
- இந்த சாறு எடை இழப்புக்கும் நல்லது.
- இந்த சாறு கொழுப்பு மற்றும் கலோரிகளை வேகமாக எரிக்கிறது.
- இந்த சாற்றைக் குடிப்பதால் முகப்பருக்கள் மற்றும் புள்ளிகள் நீங்கும்.
- இது முகத்திற்கு பொலிவைத் தரும்.
- கொத்தமல்லி மற்றும் புதினா சாறு செரிமான அமைப்புக்கு மிகவும் நன்மை பயக்கும்.
- இந்த ஜூஸை குடிப்பதால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியும் பலப்படும்.
- கோடையில் புதினா மற்றும் கொத்தமல்லி உட்கொள்வது பல உடல்நலப் பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
புதினா மற்றும் கொத்தமல்லி சாறு தயாரிப்பது எப்படி?
தேவையான பொருட்கள்
- 1 கப் புதினா இலைகள்
- 1 கப் கொத்தமல்லி இலைகள்
- 1/2 கப் தண்ணீர்
- 1/2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
- 1/2 தேக்கரண்டி தேன் (விரும்பினால்)
- ஐஸ் கட்டிகள் (விரும்பினால்)
சாறு செய்யும் செய்முறை
- முதலில், புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை நன்கு கழுவவும்.
- மிக்ஸியில் புதினா, கொத்தமல்லி, தண்ணீர், எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்க்கவும்.
- இப்போது மிகசியில் அனைத்து பொருட்களையும் அரைக்கவும்.
- ஒரு கிளாஸில் சாற்றை ஊற்றி, ஐஸ் கட்டிகளைச் சேர்க்கவும்.
- ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சாறு தயார்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை குறைக்கனுமா? அப்போ இத ஃபாலோ பண்ணுங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









