)
பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்வதால் நம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அளவிற்கு அதிகமானால், அமிர்தமும் நஞ்சு என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவதை நாம் நிச்சயம் கேட்டிருப்போம். அது பருப்புகள் காய்கறிகளுக்கும் பொருந்தும். ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களும், உடல் எடையை குறைக்க நினைப்பவர்களும், பருப்புகள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொண்டு, அரிசி, கோதுமை போன்ற கார்போஹைட்ரேட் உணவுகளை முற்றிலும் தவிர்த்து விடுகின்றனர். இது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று உணவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பருப்புகள் மற்றும் காய்கறிகள் நிச்சயம் ஊட்டச்சத்தின் களஞ்ச்சியங்கள்
புரதச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், எண்ணற்ற ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் என அனைத்தும் நிறைந்திருக்கும் பருப்புகள் மற்றும் காய்கறிகள் நிச்சயம் ஊட்டச்சத்தின் களஞ்ச்சியங்கள் என்றாலும், அதனை அளவிற்கு அதிகமாக சாப்பிடுவதும், அதனை சுவைக்காக அதிக அளவு எண்ணெய் அல்லது நெய் சேர்த்து சமைத்து சாப்பிடுவதும் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். காய்கறிகள் மற்றும் பருப்பில், சுவைக்காக சேர்க்கப்படும் எண்ணெய் மற்றும் நெய் வகைகள் அல்லது பிற கிரீம் வகைகள், நமது கலோரி உட்கொள்ளலை மிகவும் அதிகரிக்கின்றன என்பதையும் மறந்து விடக்கூடாது.இதனால் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு (Weight Loss Tips) உள்ளது.
ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்படும் ஆபத்து
நமது உடலுக்கு அனைத்து ஊட்டச்சத்துகளும் தேவை என்பதை மறந்து விடக்கூடாது. இதனால் காய்கறி மற்றும் பருப்புகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டு, பிற உணவுகளை புறக்கணிப்பது, சில ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்பட வழிவகுக்கும். இதனால், வாயு வயிற்றில் வீக்கம் உள்ளிட்ட செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். பருப்பு வகைகளில் உள்ள ஒலிகோசாக்கரைடுகள் அளவிற்கு அதிகமாகும் போது, அஜீரணம், வாயு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். எனவே, இதனை தவிர்க்க அதனை ஊற வைத்து பயன்படுத்துவதுடன், இஞ்சி, பெருங்காயம் மற்றும் சீரகம் போன்ற செரிமானத்தை தூண்டும் மசாலாக்களை சேர்க்க வேண்டும்.
காய்கறி மற்றும் பருப்புகளில் உள்ள ஊட்டச்சத்தை முழுமையாக பெற செய்ய வேண்டியவை
பருப்புகளிலும் காய்கறிகளிலும் உள்ள ஊட்டச்சத்தை முழுமையாக பெற, அதனை அரிசி, கினோவா, அல்லது பருப்பு அரிசியுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். இதனால் முழுமையான புரதம் உடலுக்கு கிடைக்கும். ஏனெனில் பருப்புகளில் உள்ள சில அமினோ அமிலங்கள் அரிசியில் காணப்படுவதில்லை. அதே சமயம் அரசியல் உள்ள சில அமினோ அமிலங்கள் பருப்புகளில் இருப்பதில்லை. எனவே இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடுவது, அதிகபட்ச பலனை பெற உதவும். அதேபோன்று காய்கறிகளை சமைக்கும் போது அளவிற்கு அதிகமாக சமைப்பதையும், அதிக எண்ணெய் பயன்படுத்தி சமைப்பதையும் தவிர்க்க வேண்டும். அளவிற்கு அதிகமாக சமைப்பதால் ஊட்டச்சத்துக்களை இழக்க நேரிடும். மறுபுறம் அளவிற்கு அதிக எண்ணெய் பயன்படுத்தும் போது, அதிலுள்ள ஆரோக்கியமற்ற கொழுப்புகளின் அளவும் அதிகரிக்கிறது.
உடல் ஆரோக்கியத்திற்கு சமச்சீர் உணவு அவசியம்
உடல் ஆரோக்கியத்திற்கு அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த, சமச்சீர் உணவு அவசியம். புரதம் வைட்டமின் மினரல்களைப் போலவே, கார்போஹைட்ரேட்டுகளும் உடலுக்கு தேவை. அதேபோன்று குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க நார்ச்சத்து தேவை. பருப்புகள், காய்கறிகளை மட்டும் சாப்பிடுவது, பிற உணவுகளை சாப்பிடாமல் இருப்பது ஆகியவை பல நுண்ணூட்டச் சத்துக்கள் உடலுக்கு கிடைக்காமல் போக வழி வகுக்கலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ