இந்தியாவில் புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்படுபவர்களின் எண்ணிக்கையும், புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான புற்றுநோய்கள் இப்போது சிகிச்சையளிக்கக்கூடியவை என இருந்தாலும் கூட, புற்றுநோயிலிருந்து தப்பிப்பது ஒரு அதிசயமாகவே கருதப்படுகிறது. இந்த நோயை எதிர்த்துப் போராடுவதில் மருத்துவம் 100% வெற்றி அடையவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது. இந்நிலையில், புற்றுநோய் நோயாளிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் செய்தி வெளிவந்துள்ளது.
புற்றுநோய் மீண்டும் வருவதற்கான வாய்ப்பு கணிசமாக குறைகிறது
அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், கனடா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஒரு சர்வதேச ஆய்வில், புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் வழக்கமான உடற்பயிற்சி திட்டத்தை பின்பற்றி வந்தால், இறப்பு ஆபத்து மூன்றில் ஒரு பங்கு குறைவது மட்டுமல்லாமல், புற்றுநோய் மீண்டும் வருவதற்கான அல்லது புதிய புற்றுநோய் உருவாகும் வாய்ப்புகளும் கணிசமாகக் குறைகின்றன (Health Tips) என்பதைக் கண்டறியப்பட்டுள்ளது.
மருத்துவத்தை விட மிகவும் பயனுள்ளதாக உள்ள உடற்பயிற்சி
மருத்துவ ஆய்வின் முடிவுகள் அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் கிளினிக்கல் ஆன்காலஜி (ASCO) வருடாந்திர கூட்டத்தில் வழங்கப்பட்டன. மேலும் நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்டுள்ளன. பல மருந்துகளை விட உடற்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை ஒரு மருத்துவ ஆராய்ச்சி தெளிவாகக் காட்டுவது இதுவே முதல் முறை.
ஆய்வில் வெளியான ஆச்சர்ய தகவல்
மருத்துவ ஆராய்ச்சியில் 2009 மற்றும் 2023 என்ற காலகட்டத்தில் 889 பெருங்குடல் புற்றுநோய் நோயாளிகள் பங்கேற்றனர். அவர்களில் 90% பேர் 3, நிலையில் உள்ள நோயாளிகள். அவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர் - முதல் குழு (445 நோயாளிகள்) ஒரு உடற்பயிற்சி திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். இரண்டாவது குழுவிற்கு (444 நோயாளிகள்) ஆரோக்கியமான வாழ்க்கை முறை புத்தகம் மட்டுமே வழங்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு, உடற்பயிற்சி செய்த நோயாளிகளில் புற்றுநோய் மீண்டும் வருவதற்கான அல்லது புதிய புற்றுநோய் உருவாகும் ஆபத்து 28% குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களின் இறப்பு விகிதம் 37% குறைந்துள்ளது கண்ட்டறியப்பட்டது.
ASCO தலைமை மருத்துவ அதிகாரியின் அறிக்கை
புற்றுநோய் ஆய்வில் பங்கேற்காத ஆனால் ASCO இன் தலைமை மருத்துவ அதிகாரியான டாக்டர் ஜூலி கிராலோ, இந்த ஆராய்ச்சியை "மிக உயர்ந்த அளவிலான சான்றுகள்" என்று விவரித்தார். இந்த அமர்வை நாங்கள் மருத்துவ ரீதியாக நல்ல முயற்சி என்று பெயரிட்டோம். ஆனால், நான் அதை ஒரு மருந்தை விட சிறந்தது என்று அழைக்கிறேன். ஏனெனில் இது எந்த மருந்தையும் போல பக்க விளைவுகளை ஏற்படுத்தாது. புற்றுநோய் சிகிச்சையின் போது மற்றும் அதற்குப் பிறகு மருத்துவத்தைப் போலவே உடல் செயல்பாடுகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நேரம் இப்போது வந்துவிட்டது என்று அவர் கூறினார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | எச்சரிக்கை... இந்தத் தவறுகள்... நடைப்பயிற்சியை பலன் இல்லாமல் ஆக்கிவிடும்
மேலும் படிக்க | தீராத தலைவலியை தீர்க்க ஒரே வழி! தினமும் காலையில எழுந்து..‘இதை’ பண்ணுங்க..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ