செரிமான ஆரோக்கியம் பாதிக்கப்படும் போது ஏற்படும் முக்கிய அஜீரண பிரச்சனைகளில் ஒன்று அசிடிட்டி. நமது வயிறு அதிகப்படியான இரைப்பை அமிலத்தை உற்பத்தி செய்யத் தொடங்கும் போது அசிடிட்டி பிரச்சனை ஏற்படுகிறது. அமிலத்தன்மை அல்லது அசிடிட்டி காரணமாக நெஞ்செரிச்சல், அஜீரணம், புளித்த ஏப்பம், வயிற்றுப் பகுதியில் எரிச்சல் மற்றும் அசௌகரியம் போன்ற பிரச்சனைகளும் அடிக்கடி உண்டாகும்.
அசிடிட்டி பிரச்சனையை தவிர்க்க மருத்துவரை கலந்தாலோசிக்காமல், தானாகவே, சந்தையில் கிடைக்கும் ஆண்டிஆசிட் மருந்துகளை எடுத்துக் கொள்ளும் வழக்கம் உள்ளது. ஆனால், இது நல்லதல்ல. அதோடு, நெட்சிம், நெக்ஸ்ப்ரோ, ஓமேஸ் அல்லது சோம்ப்ராஸ் (Netsim, NexPro, Omez or Sompraz ) போன்ற அமில எதிர்ப்பு மருந்துகள் நன்மையை செய்யக்கூடியதை விட அதிக சேதத்தை ஏற்படுத்தும் என்று பிரபல ஊட்டச்சத்து நிபுணர் பூஜா மகிஜா கூறுகிறார். இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஒரு வீடியோவில், "2022ம் ஆண்டும்பிஎம்சி மெடிசின் வெளியிட்ட ஆய்வில், அசிடிட்டி மருந்துகளிலன் நீண்ட கால பயன்பாடு டிஸ்பயோசிஸ் பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில் இது ஊட்டச்சத்து உறிஞ்சும் திறனை பாதிக்கிறது" எனக் கூறுகிறார்.
ஆண்டி ஆசிட் மருந்துகள் வயிற்றில் உள்ள அமிலத்தை மட்டுமல்ல, ஊட்டச்சத்துக்கள், பி12, மெக்னீசியம் உறிஞ்சும் திறனையும் குறைக்கிறது. எனவே, குடல் பாதிப்பு, ஆஸ்டியோபோரோசிஸ், எலும்பு முறிவுகள், சிறுநீரக பாதிப்பு, டிமென்ஷியா போன்ற நரம்பியல் அறிகுறிகள், அத்துடன் அல்சைமர் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என உணவியல் நிபுணர் கூறுகிறார்.
அமில எதிர்ப்பு மருந்துகளை எப்போதாவது ஒரு முறை பயன்படுத்துவதால் சிக்கல் இல்லை. அதை ஒரு வாழ்க்கை முறையாக தினமும் பயன்படுத்துவது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று பூஜா குறிப்பிட்டார். "அசிடிட்டி பிரச்சனையிலிருந்து முழுமையாக விடுதலை பெற மூல காரணத்தை கண்டறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும். இதற்கு உங்கள் உணவு, உங்கள் பழக்கவழக்கங்கள், உங்கள் மன அழுத்தம் மற்றும் பல காரணங்கள் இருக்கலாம்," என்று அவர் கூறுகிறார்.
அசிடிட்டி ஏற்படுவதற்கான சில முக்கிய காரணங்கள்
1. காரமான மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகள்
2. மன அழுத்தம்
3. டீ மற்றும் காபி அளவிற்கு அதிகமாக குடிப்பது
4. மது அருந்துதல்
5. இரவில் தாமதாக உண்ணுதல்
6. புகைபிடித்தல்
7. சாப்பிட்ட உடனே தூங்கும் வழக்கம்
8. உடல் செயல்பாடுகள் இல்லாமை
9. தண்ணீர் குறைவாக குடிக்கும் பழக்கம்.
அசிடிட்டி பிரச்சனை ஏற்படாமல் இருக்க செய்ய வேண்டியவை
1. அதிக எண்ணெய் மற்றும் காரம் கொண்ட உணவுகளை அளவோடு உண்ணுதல்
2. தயிர் போன்ற புரோபயாடிக்குகளை உணவுகளிய தினமும் எடுத்துக் கொள்ளுதல்
3. இரவு படுக்கைக்கு செல்வதற்கு 2-3 மணி நேரத்திற்கு முன்பாக உணவு உண்ணுங்கள்
4. வெறும் வயிற்றில் டீ அல்லது காபி குடிப்பதை தவிர்த்தல்.
5. உடற்பயிற்சியை தவறாமல் செய்தல்
6. சாப்பிட்ட பிறகு 15 நிமிடங்கள் எளிய நடைபயிற்சி மேற்கொள்ளுதல்
7. தினமும் குறைந்தது 7 - 8 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | டூத் பேஸ்டுடன் கறித்தூளை சேர்த்து பல் துலக்குவது ஆரோக்கியமானதா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ