முடி அடர்த்தியாக வளர வேண்டுமா? பிரபல ஹேர் ஸ்டைலிஷ் பகிரும் சீக்ரெட்!

பிரபல சிகை அலங்கார நிபுணரான ஜாவேத் ஹபீப், முடி வளர்ச்சிக்கு உதவும் ஓர் இயற்கையான வழியை நம்மிடம் பகிர்ந்துள்ளார்.

Written by - R Balaji | Last Updated : Apr 1, 2025, 05:08 PM IST
  • இன்றைக்கு முடி உதிர்தல் பலருக்கு பெரிய பிரச்சனையாக உள்ளது
  • இந்நிலையில், முடி வளர இயற்கையான வைத்தியத்தை பகிர்ந்துள்ளார் ஜாவேத் ஹபீப்
முடி அடர்த்தியாக வளர வேண்டுமா? பிரபல ஹேர் ஸ்டைலிஷ் பகிரும் சீக்ரெட்!

இன்றைய காலத்தில் முடி உதிர்தல் ஓர் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இந்த பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்று முடி வளர்வதை ஊக்கப்படுத்த பல கிரீம்களை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இயற்கையாக அதனை சரி செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தாலும்,  அதற்கான சரியான வழிகள் நமக்கு தெரிவதில்லை. இந்த நிலையில், பிரபல ஹேர் ஸ்டைலிஷ் ஜாவேத் ஹபீப், முடி உதிர்தலை தடுக்க ஓர் இயற்கையான வழியை நம்மிடம் பகிர்ந்துள்ளார். அது குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம். 

Add Zee News as a Preferred Source

10 நிமிட தீர்வு 

இது தொடர்பாக கடந்த மார்ச் 15ஆம் தேதி தனியார் ஊடகம் ஒன்றில் பேசிய ஜாவேத் ஹபீப், ஹேர் ஆயில் மூலம் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம் என்ற விளம்பரங்கள் மோசடி ஆகும். iது போன்ற ஹேர் ஆயில்களுக்கு பணம் செலவழித்து அதனை பயன்படுத்துவதற்கு பதிலாக உங்கள் வீட்டில் உள்ள சமையல் பொருட்களையே பயன்படுத்தலாம். அதாவது, நீங்கள் சமைக்க பயன்படுத்தும் வெங்காயத்தை முடி வளர்ச்சிகு பயன்படுத்தலாம். அதன் சாற்றை எடுத்து, தலையில் தேய்க்கும் எண்ணெய்யுடன் சேர்த்து உங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்யலாம். வாரத்திற்கு இரண்டு முறை செய்யுமாறு அவர் பரிந்துரைத்தார். 

அதாவது வெங்காயத்தை எடுத்து அதில் இருந்து சாற்றை பிரித்தெடுக்கவும். அதை உங்கள் உச்சந்தலையில் தேய்த்து, ஒரு 10 நிமிடங்கள் ஊற வைத்தப்பின் குளிக்கலாம். வெங்காயத்தில் உள்ள கந்தகம், உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை தூண்டும். மேலும், மயிர்கால்களுக்கு ஊக்குவிப்பதோடு, முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. இது முடி வளர்வதற்கு ஓர் இயற்கையான வழியாகும். நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியவை என்வென்றால், ஒவ்வொரு முறையும் புதிதாக வெங்காயத்தில் இருந்து சாற்றை எடுத்து தேய்த்துக்கொள்ள வேண்டும் என்பது தான். 

மேலும் படிங்க: இரவில் இந்த இரண்டையும் சாப்பிட்டால் போதும், உடல் ஆரோக்கியம் ஓஹோன்னு இருக்கும்

தலைமுடிக்கு எண்ணெய் தேய்க்கும் சரியான வழி 

வெங்காய சாறு முடி வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்றாலும், ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்கு உங்கள் தலைமுடிக்கு எண்ணெய் தடவுவது எந்த அளவிற்கு முக்கியம் என்பதை நிபுணர் ஹபீப் பகிர்ந்து கொண்டார். நீங்கள் உலர்ந்த கூந்தலுக்கு எண்ணெய் தடவுவது அந்த அளவிற்கு சிறப்பான பலனை தராது. பதிலாக உங்கள் தலைமுடியை மிகவும் சூடான தண்ணீரோ அல்லது குளிரான தண்ணீரோ இல்லாமல் இரண்டிற்கு நடுநிலையான ஓரளவிற்கு சூட்டிருக்கும் தண்ணீரில் நனைத்து, அந்த ஈரமான தலைமுடியில் மசாஜ் செய்யலாம். இது ஊட்டச்சத்துக்கள் இழைகளில் திறம்பட ஊடுருவ அனுமதிக்கிறது. 

வெங்காய சாறு உண்மையில் சிறந்ததா?  

இந்த இயற்கையான வழி 99 சதவீத மக்களுக்கு உதவும். முடிவுகள் ஒருவருக்கொருவர் மாறுபடலாம் என்றாலும், வெங்காய சாறு முடியை வலுப்படுத்துகிறது. ஆக்ஸிஜனேற்றிகள், சல்பர் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு சேர்மங்கள் நிறைந்த வெங்காயம், ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் வளர்ச்சியை தூண்டவும் பயன்படுத்தப்படுகிறது. 

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிங்க: பெண்களே உஷார்.. தோள்பட்டையில் ஓவர் வலியா? அப்போ ஹார்ட் அட்டாக் ஆ இருக்கலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News