Adnan Sami Weight Loss Journey: இந்தியாவின் பிரபல இசைக் கலைஞர் மற்றும் பாடகரான அட்னான் சாமி (Adnan Sami) அவரது உடல் எடை குறைப்பு அனுபவம் குறித்து சில மாதங்கள் முன்னர் பொதுவெளியில் பேசியிருந்தார். அவரின் அனுபவத்தை தெரிந்துகொள்வதன் மூலம் உடல் எடை குறைப்பில் ஈடுபடுவோருக்கு பெரும் ஊக்கம் கிடைக்கும்.
Weight Loss Journey: 230 கிலோவில் இருந்த பாடகர்
ஒரு கட்டத்தில் அவர் 230 கிலோவில் இருந்தாராம். 2006ஆம் ஆண்டில் அவருக்கு மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை ஒன்று விடுத்திருக்கிறார்கள். உடல் எடையை குறைக்க அவர் விரைவாக முயற்சிக்கவில்லை என்றால் ஆறு மாதங்கள் மட்டுமே அவர் உயிருடன் இருக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். இது அவரது வாழ்க்கையையே புரட்டிப்போட்டுள்ளது. அப்போது இருந்து உயிர் வாழ்வதற்காகவே அவர் உடல் எடையை குறைக்க முயற்சித்துள்ளார்.
உடல் எடை குறைப்பு பயணம் குறித்து அட்னான் சாமி Humans Of Bombay எனும் பாட்காஸ்டில் சில மாதங்களுக்கு முன் கூறுகையில்,"2006 ஆம் ஆண்'டில் நான் மிகவும் அதிக உடல் எடையுடன் இருந்தேன். இதனால் ஆறு மாதங்கள் மட்டுமே உயிர்வாழ முடியும் என்று மருத்துவர்கள் எனக்கு இறுதி எச்சரிக்கை விடுத்தனர். நான் 230 கிலோ எடை இருந்தேன். 'நீ எதுவும் செய்யப் போவதில்லை என்றால், நீ உயிரிழந்துவிடுவாய்' என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இது எனக்கு 'வாழ்வா? சாவா?' சூழ்நிலை... திடீரென்று ஏன் இந்தளவிற்கு உடல் எடையை குறைத்தேன் என்று பலரும் யோசிக்கத் தொடங்கினர்" என்றார்.
Weight Loss Journey: 130 கிலோவை குறைத்த பாடகர்
மேலும் தொடர்ந்து அதில், "எனக்குத் தெரிந்த பலர், என்னால் அதைச் செய்ய முடியாது என்று நினைத்தார்கள். நான் அவர்களைக் குறை கூறவில்லை. இது கடினமான பணி, பெரிய மலையின் மீது ஏறுவது போலானது... அந்த குறிப்பிட்ட நேரத்தில் அது சாத்தியமற்றதாகத் தோன்றியதால், என்னால் அதைச் செய்ய முடியுமா என்று கூட எனக்குத் தெரியவில்லை" என பேசினார். மேலும், அவரது உடல் எடை குறைப்பு வெற்றிகரமாக நிறைவேறியதற்கு அவரது ஊட்டச்சத்து நிபுணரே காரணம் என்று அவருக்கு புகழாரம் சூட்டினார். மேலும் அவரை சந்தித்தது தனது அதிர்ஷ்டம் என்றும் அவர் பேசினார்.
இதுமட்டுமின்றி 2022ஆம் ஆண்டில் ஊடகம் ஒன்றில் உடல் எடை குறைப்புக்கு அவர் பின்பற்றியவை என்னென்ன என்பதையும் அவர் விளக்கி பேசியிருந்தார். அதில், "நான் ஒரு பழக்கவழக்கத்தை வைத்திருந்தேன். ரொட்டி, அரிசி, சர்க்கரை, எண்ணெய் போன்றவற்றை எனது உணவுப்பழக்கவழக்கத்தில் சேர்க்காமல் அதிக புரதச்சத்துள்ள உணவை உட்கொண்டேன். உடல் எடையை கொஞ்சமாவது குறைக்க வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் ஒருகட்டத்தில் 130 கிலோ எடையைக் குறைத்துவிட்டேன்.
Weight Loss Journey: அறுவை சிகிச்சை செய்யவில்லை...
இதை நான் திட்டமிடவே இல்லை, ஆனால் அது தன்னிச்சையாக நிகழ்ந்தது. நான் என்ன உணவுகளை எடுத்துக்கொள்கிறேன் என்பதில் இப்போது மிகவும் கவனமாக இருக்கிறேன். நான் அதிகமாக சாப்பிட மாட்டேன். பெரிய அளவில் சாப்பிடுவதற்குப் பதிலாக குறைந்த அளவிலேயே உணவை எடுத்துக்கொள்கிறேன், இதுவே மகிழ்ச்சி அளிக்கிறது.
நான் உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக சில வதந்திகள் பரவுகின்றன. அதுபோன்ற அறுவை சிகிச்சை ஓரளவு குண்டாக இருப்பவர்களுக்கு மட்டுமே செய்வார்கள், 230 கிலோ எடையுள்ள ஒருவருக்கு செய்ய மாட்டார்கள்" என கூறி அவரது உடல் எடையை குறைக்க எவ்வித அறுவை சிகிச்சையையும் மேற்கொள்ளவில்லை என்பதை தெளிவுப்படுத்தினார்.
Weight Loss Journey: உடல் எடையை குறைத்தது இப்படிதான்...
அதிக கார்போஹைட்ரேட்களை கொண்ட அரிசி மற்றும் ரொட்டியை அட்னான் கைவிட்டிருக்கிறார். தொடர்ந்து புரதச்சத்து கொண்ட உணவில் கவனம் செலுத்தி, உணவுப்பழக்கவழக்கத்திலும் கவனம் செலுத்தியதால் உடல் எடை தானாக குறைந்திருக்கிறது. அவர் 130 கிலோவைக குறைத்திருக்கிறார். ஆரோக்கியமான உணவுமுறை மூலமே உடல் எடையை குறைக்கலாம் என்பதை அவர் நிரூபித்திருக்கிறார்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் அட்னான் சாமியின் தனிப்பட்ட அனுபவங்கள் ஆகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | 31 கிலோவை குறைத்த பெண்... உடல் எடையை குறைக்க அவர் கடைபிடித்த 8 'நச் டிப்ஸ்'
மேலும் படிக்க | 154 கிலோ to 65 கிலோவுக்கு வந்த இளம் பெண்! அவருக்கு உதவிய சிம்பிளான 5 பழக்கங்கள்..
மேலும் படிக்க | 91 கிலோவில் இருந்து 35 கிலோவை குறைத்த இளம்பெண்... அவர் தவிர்த்த உணவுகள் என்னென்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ