Fast Walking Vs Slow Jogging : உடலை கச்சிதமாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள வேண்டுமென நினைப்பவர்கள், ஜாக்கிங் அல்லது வாக்கிங் செய்வது வழக்கம். அவர்கள் மட்டுமல்ல, உடல் எடையை குறைக்க வேண்டுமென நினைப்பவர்கள், மன நிலையை மேம்படுத்த வேண்டுமென நினைப்பவர்கள் என பலர் வாக்கிங் அல்லது ஜாக்கிங் செல்வர். அது மட்டும் கிடையாது, வாக்கிங் அல்லது ஜாக்கிங்தான் இருப்பதிலேயே மிகவும் இலகுவான உடற்பயிற்சிகளும் கூட. இதில் ஒரு சில பேருக்கு குழப்பம் வரலாம். ஜாக்கிங் செய்வதா, வாக்கிங் செய்வதா என்று..இதில் எது பெஸ்ட் தெரியுமா?
பயன்கள்:
உடல் நலனையும் மனநலனையும் பார்த்துக்கொள்ள, கண்டிப்பாக உடற்பயிற்சி என்பது முக்கியமான விஷயமாகும். வாழ்வில், வயதானதற்கு பின்பு வரும் பல்வேறு உயிர்க்கொள்ளி நோய் பாதிப்புகளையும் இதனால் தடுக்கலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக இதய பிரச்சனைகள், பக்கவாதம், டைப் 2 டயாபிட்டீஸ் உள்ளிட்டவை. அது மட்டுமல்ல, உடற்பயிற்சி இளமைகாலத்தில் உயிரிழப்பதை 30 % குறைப்பதாகவும் கூறப்படுகிறது.
உலக சுகாதார மையத்தின் கணிப்பின் படி, வயது வந்தவர்கள், ஒரு வாரத்தில் 150 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி மேற்கொண்டால், உடல் நலனுக்கு நல்லது என கூறப்படுகிறது.
வேக நடைப்பயிற்சி செய்தால் என்ன ஆகும்?
வாக்கிங் செல்வது, சிம்பிளான உடற்பயிற்சிகளுள் ஒன்றாகும். உடலை ஆக்டிவாக வைத்துக்கொள்ள, இதைவிட ஒரு எளிமையான உடற்பயிற்சி இருக்க முடியாது என்று சிலர் கூறுகின்றனர். இது, உடல் எடையை குறைக்க உதவுவதோடு, உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ளவும் வழிவகுக்கிறது. வேக நடைப்பயிற்சி மேற்கொள்கையில் இதன் நன்மைகள் அப்படியே இரட்டிப்பாவதாக கூறப்படுகிறது.
இது, உடலில் ஸ்டாமினாவை அதிகரிப்பதோடு, கலோரிகளை எரித்து உங்களின் இதயத்தையும் ஆரோக்கியத்துடன் வைக்க உதவுகிறது. சராசரியாக மணிக்கு 3-4 மைல்கள், 45 நிமிடங்கள் நடந்தால் உடலில் இருந்து 150-250 கலோரிகள் குறையும் என கூறப்படுகிறது.
ஜாக்கிங் செய்தால் என்ன ஆகும்?
மெதுவாக ஜாக்கிங் செய்வது உங்களின் மனம் மற்றும் உடல் நிலையை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலில் சகிப்புத்தன்மையை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால் கொழுப்பு எரிந்து, மன நிலை கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும் என கூறப்படுகிறது. 15 நிமிடங்களுக்கு, 4-5 மைல் கணக்கில் ஜாக்கிங் செய்தால் 100-150 கலோரிகள் வரை எரிக்கலாமாம்.
எது நல்லது?
நீங்கள், மேற்கூறிய இரண்டில் எந்த உடற்பயிற்சியை தேர்வு செய்தாலும் அவை உங்கள் உடல் நிலையை மேம்படுத்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இப்போதுதான் ஃபிட்னஸ் பயணத்தை தொடங்குகிறேன் என்பவர்கள், ஓடினால் மூட்டு வலிக்கும். எனவே, அவர்கள், 45 நிமிட நடைப்பயிற்சியை முதலில் மேற்கொள்வது நல்லது. அதன் பிறகு, உங்கள் உடல் நிலையை பொறுத்தும், வயது, மற்றும் விருப்பத்தை பொறுத்து ஜாக்கிங்கை தேர்ந்தெடுக்கலாம்.
இவை இரண்டில் எதை செய்தாலும் உங்களது உடல் எடை குறைவதாேடு, மன நிலையும் மேம்படும் என்பதை மறந்து விடாதீர்கள்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









