ஆண்கள் vs பெண்கள்: இருவரில் யார் உடற்பயிற்சி அதிகமாக செய்ய வேண்டும்?

Female Vs Male Who Needs To Workout More : அனைவருமே உடற்பயிற்சி செய்வது நல்லதுதான். ஆனால், ஆண்கள்-பெண்களில் யாருக்கு அதிகம் உடற்பயிற்சி தேவைப்படுகிறது தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : May 19, 2025, 01:51 PM IST
  • ஆண்கள் vs பெண்கள்
  • யாருக்கு உடற்பயிற்சி அதிகம் தேவை?
  • இதோ பதில்..
ஆண்கள் vs பெண்கள்: இருவரில் யார் உடற்பயிற்சி அதிகமாக செய்ய வேண்டும்?

Female Vs Male Who Needs To Workout More : சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ஆண்கள்-பெண்கள் என அனைவருமே தினசரி உடற்பயிற்சி செய்வதால், அவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இது, ஆரோக்கிய ரீதியாகவும் பலருக்கு நன்மை அளிக்குமாம்.

Add Zee News as a Preferred Source

உடற்பயிற்சி செய்வது என்று வந்துவிட்டால், அது பெண்களுக்கு அதிகம் தேவைப்படுகிறதா, அல்லது ஆண்களுக்கு அதிகம் தேவைப்படுகிறதா என்கிற விவாதம் எப்போதும் எழுவதுண்டு. இதற்கு அறிவியல் சொல்லும் பதில் என்ன? 

ஆண்களின் உடற்பயிற்சி..

ஆண்களைப் பொறுத்தவரை ஜிம்மிற்கு செல்வதோ உடற்பயிற்சி செய்வது பெண்களை ஒப்பிடும்போது எளிதானதாகி போகிறது. பலர் உடற்பயிற்சி செய்து தங்களின் மனச்சோர்வை நீக்குவதுண்டு. அதனை ஒரு சிறு வெற்றியாகவும் பார்க்கின்றனர். இதனுடன் சேர்த்து அவர்களால் டயட்டிலும் இருக்க முடியும். காரணம், பெரும்பாலான ஆண்களுக்கு அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுக்க ஒருவர் வீட்டில் இருப்பார். அதனால் அவர்கள் ஜிம்மிற்கு சென்று தனக்கு தேவையான உடற்பயிற்சிகளை செய்வது, இதுதானதாக உள்ளது. 

பெண்களின் உடற்பயிற்சி..

இரு பாலினர்கள் வரும் ஜிம்மை எடுத்துக் கொண்டால் அதில், உடற்பயிற்சி செய்யும் பெரும்பாலானவர்கள் ஆண்களாக இருப்பர். பெண்கள் மிக சொற்ப அளவிலேயே இருப்பர். காரணம், அவர்கள் காலையில் எழுந்ததிலிருந்து இரவு உறங்க செல்வது வரை “வேலை, வேலை, வேலை” என்று ஓடிக்கொண்டே இருப்பர். அது மட்டுமல்ல, பெண்களுக்கு மாதவிடாய், எலும்பு வலுவில்லாமல் இருப்பது, அதிக நேரம் வேலை செய்ய வேண்டும் என்கிற சமூகத்தின் எதிர்பார்ப்பு உன்கிட்ட பல தடைகள் இருக்கின்றன. அதைத் தாண்டி அவர்கள் ஜிம்மிற்கு வந்தாலும் அவர்கள் நினைத்ததை பல சமயங்களில் நடத்த முடியாமல் போகிறது.

சில ஆராய்ச்சிகளின் படி, ஆண்களுக்கு தான் இதய நோய் பாதிப்பு வருவது அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதுபோல எலும்பு நோய்களும், ஆஸ்டியோபோரோசிஸ் என்கிற குறைபாடும் பெண்களுக்கு அதிகமாக வருவதாக கூறப்படுகிறது. எனவே இவர்கள் இருவரில் யாருக்கு உடற்பயிற்சி அதிகம் தேவைப்படுகிறது? என்ற கேள்வி இப்போது எழுகிறது.

இருவருக்கும் தேவை..

ஆண் பெண் இன பேதம் இன்றி, இருவருமே ஒரு வாரத்திற்கு 300 நிமிடங்கள் ஏரோபிக் உடற்பயிற்சிகளின் ஈடுபட வேண்டும் என்று சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இது இவர்கள் உடலை ஆரோக்கியமாக பாதுகாக்க பயன்படுமாம். 

ஆண்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில் உடற்பயிற்சி செய்தால் இளம் வயதில் உயிரிழப்பு ஏற்படுவது, 24 சதவீதம் குறைவதாக கூறப்படுகிறது. இதுவே ஆண்களுக்கும் 18 சதவீதமாக இருக்கிறது. 

உடற்பயிற்சி செய்கையில், ஆண் பெண் என இருவருக்குமே உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால், இருவருக்கும் இதய நோய் பாதிப்புகள் மற்றும் பக்கவாதம் மூன்றும் நூல் பாதிப்புகள் குறையும் என்று சில ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உடற்பயிற்சி செய்யும் போது ஆண்களுக்கு வேகமாக தசை வளர்ச்சி ஏற்படும். அதேபோல இவர்களுக்கு உடல் எடை குறைப்பதும் எளிதாக இருக்குமாம். ஆனால் பெண்களுக்கு குறைந்த அளவிலான உடற்பயிற்சியுடன் கூடிய தினசரி உடற்பயிற்சிகளால் மட்டுமே உடல் எடையை குறைக்க முடியும் என்றும், கொழுப்பு கரை மற்றும் கூறப்படுகிறது. 

யாருக்கு அதிகம் தேவை?

உடற்பயிற்சி இருவருக்குமே பலன் அளிக்கும் என்றாலும், பெண்களுக்கு இன்னும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்தால் கண்டிப்பாக அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியத்துடன் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | எச்சரிக்கை... அசிடிட்டி மருந்துகளை அடிக்கடி எடுத்துக் கொள்வது ஆபத்து... தவிர்க்க செய்ய வேண்டியவை

மேலும் படிக்க | முத்துபருக்கள் உங்கள் அழகைக் கெடுக்கிறதா? தொடர்ந்து 2 வாரம் இதனை இரவில் தடவுங்கள்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News