Weight Loss Journey: எடை இழப்பு, நோயியல் நிபுணரான டாக்டர் காஷ்மி சர்மா, உங்கள் எடையை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க எளிய வழி என்றால் அது சீராகவும் ஒழுக்கமாகவும் இருப்பதுதான் என்கிறார். அவர் 3 ஆண்டுகளில் 37 கிலோ எடையை குறைத்துள்ளார். இந்த நிலையில், நம்மிடம் எடை இழப்பு பயணம் குறித்தும் தான் பின்பற்றிய உணவுமுறைகள் குறித்தும் பகிர்ந்துள்ளார்.
சிறிய மாற்றம் பெரிய தாக்கம்
அவர் முழுக்க முழுக்க உடற்பயிற்சியையோ அல்லது தனது உணவு கட்டுப்பாட்டையோ நம்பி இருக்கவில்லை. மாறாக அவர் சிறிய மாற்றங்களை தனக்குள்ளேயே செய்துக்கொண்டார். அதாவது, தனது மனநிலையில் கவனம் செலுத்தினார். அதனை சமநிலையாக வைத்திருக்க முயற்சித்தார். மனநிலை அமைதியாக எந்த அழுத்தமும் இன்றி இருப்பது மிகவும் முக்கியம் என்கிறார்.
உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி
டாக்டர் காஷ்மி சமநிலையை உறுதியாக நம்பினார். அவர் தனது ஊட்டச்சத்தை கண்காணித்ததோடு, போதுமான புரதம் (Protien) கிடைப்பதை உறுதி செய்தார். பீட்சா, மோமோஸ், பிரியாணி, ஐஸ்கிரீம் போன்றவற்றை தவிர்த்தார். அதேபோல் வெளியில் சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு வீட்டில் சமைத்த உணவுகளை மட்டுமே சாப்பிட்டார். அதில் அவர் மிக கவனமாக இருந்தார்.
அவரது உடற்பயிற்சியானது குறுகியதாகவும் பயனுள்ளதாகவும் இருந்தன. தினமும் 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்தார். தீவிரமாக உழைத்தார். அவரது பயிற்சியாளரின் ஆலோசனைகளை சரியாக பின்பற்றினார்.
அவரது அறிவுரை
எந்த ஒரு சூழ்நிலைகளில் இருந்தாலும், துவண்டுபோகாமல் அதில் இருந்து மீண்டுவருவதே உங்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும். பரபரபான வேலை நாட்களாக இருந்தாலும் சரி, விடுமுறையாக இருந்தாலும் சரி நிலைத்தன்மையே முன்னேற்றத்தை நிலையாக வைத்திருக்கும் என்கிறார். அதேபோல், இந்த நீண்ட பயணம் என்பது மற்றவர்களுடன் போட்டிப்போடுவது பற்றியது அல்ல. அது உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருப்பது பற்றியது என கூறுகிறார்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் வனேசா வோங் என்பவரின் தனிப்பட்ட அனுபவமாகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிங்க: நல்ல உணவுமுறையால் 18 கிலோவை குறைத்த பிரபலம்... அவர் செய்தது என்ன?
மேலும் படிங்க: தினமும் 15 நிமிட நடைபயிற்சி இத்தனை நன்மைகளை தருகிறதா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









