வெந்தயம் அல்லது வெந்தய விதைகள் உணவின் சுவையையும் மணத்தையும் அதிகரிப்பதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும் ஒரு மசாலா. ஆயுர்வேதத்தில் அதிகம் பயன்படுத்தும் பொருட்களில் வெந்தயமும் ஒன்று. வெந்தயத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம் என்பதை சொல்லி தெரிய வேண்டியது இல்லை. எனினும் சில உடல் நலப் பிரச்சினைகள் இருப்பவர்கள், வெந்தயத்தை தவிர்ப்பது நல்லது.
வெந்தயம் ஆரோக்கிய நன்மைகள்
வெந்தயம் பல நோய்களுக்கு அருமருந்தாகிறது. சர்க்கரை நோய், இதய நோய்கள், கொலஸ்ட்ரால், வயிற்று வலி, சரும ஆரோக்கியம், கூந்தல் ஆரோக்கியம் என பலவிதமான நோய்களுக்கு மருந்தாவதோடு, ஆரோக்கியமான உடலை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த உணவுகளில் ஒன்றான வெந்தயம், நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் அருமருந்து. இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், பல வகைகளில் உடலுக்கு நன்மைகளை கொடுக்கின்றன.
வெந்தயம் பக்க விளைவுகள்
வெந்தயத்தில் எண்ணற்ற ஆரோக்கிய நலன்கள் உள்ளது என்பதை மறுக்க இயலாது. ஆனால் சில குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகள் இருப்பவர்கள் அதனை தவிர்க்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் மற்றும் உணவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
குறைவான இரத்த சர்க்கரை அளவு
வெந்தயம் நீரழிவு நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் அதே நேரத்தில், குறைவான இரத்த சர்க்கரை அளவு இருப்பவர்களுக்கு விஷமாகலாம். வெந்தயம் ரத்த சர்க்கரை அளவு குறைக்கும் ஆற்றல் கொண்டதால், சர்க்கரை அளவு மேலும் குறைந்து, பல ஆபத்தான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். தலைசுற்றல் பலவீனம் மற்றும் மயக்கம் ஏற்படலாம்.
ரத்தப்போக்கு பிரச்சனை
வெந்தயம் ரத்தத்தை மெலிதாக்கும் ஆற்றல் கொண்டது. இது பலவித வலிகளுக்கு நிவாரணம் அளித்தாலும், ரத்தத்தை மெலிதாக்கும் மருந்தை எடுத்துக் கொள்பவர்கள் அல்லது ரத்தப்போக்கு அதிகம் இருக்கும் பிரச்சனை கொண்டவர்கள் வெந்தய நீரை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது அவர்களது பிரச்சினையை மேலும் தீவிரமாக்கும்.
ஒவ்வாமை
வெந்தயம் எல்லோருக்கும் ஒத்துக் கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை. சிலர் உடலுக்கு வெந்தயம் ஒத்துக் கொள்ளாமல் இருக்கலாம். இதனால், வெந்தயத்தை அளவிற்க்கு அதிகமாக உட்கொள்ளும் போது, சருமத்தில் அரிப்பு, வீக்கம் அல்லது சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம்.
மேலும் படிக்க | வெயிட் லாஸ் செய்ய சுகருக்கு பதில் ‘இதை’ எடுத்துக்கோங்க..
கர்ப்பிணி பெண்கள்
பொதுவாகவே கர்ப்பிணிகள் தங்கள் உணவு விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். மருத்துவர் ஆலோசனை இன்றி உணவுகளையும் மருந்துகளையும் உட்கொள்வது கருவில் பாதிப்பை ஏற்படுத்தலாம். அந்த வகையில், அளவிற்கு அதிகமான வெந்தயம், கருவுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடும் என்பதால், மருத்துவர் ஆலோசனை பெற்று அதன் அளவை நிர்ணயித்து சாப்பிடுவது நல்லது.
மூச்சு திணறல்
மூச்சு திணறல் அல்லது சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் இருப்பவர்கள், வெந்தயத்தை தவிர்ப்பது நல்லது. வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது என்பதால், மருத்துவர் ஆலோசனையை பெற்ற பிறகு சாப்பிடுவது நல்லது.
குழந்தைகள்
பிறந்த குழந்தைகளுக்கு அல்லது வயதில் சிறிய குழந்தைகளுக்கு, எந்த வகையான உணவுகளுக்கு வேண்டும் என்பதை, மருத்துவரிடம் கலந்து ஆலோசித்த பின் முடிவு செய்ய வேண்டும். அந்த வகையில் வெந்தயத்தை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா கூடாதா என்பதை மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகு முடிவு செய்வது நல்லது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | எடை சட்டுன்னு குறைய அரிசிக்கு பதில் ‘இதை’ சாப்பிடலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









