பருப்புகளை நொதிக்க செய்வதால்... இரட்டிப்பாகும் ஊட்டச்சத்துக்கள்... ஆய்வில் வெளியான ஆச்சரிய தகவல்

பருப்பு வகைகள் ஆரோக்கியத்தின் களஞ்சியங்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதனை நொதிக்க வைப்பதால் அதன் ஊட்டச்சத்து மிகவும் அதிகரிக்கும் என்றும், செரிமானம் மிகவும் எளிதாகும் என்றும் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 9, 2025, 05:35 PM IST
  • ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பீன்ஸ் மற்றும் பிற பருப்பு வகைகள்.
  • நொதித்தல் செயல்முறை பருப்புகளில் உள்ள ஆன்ட்டி நியூட்ரியன்ட்களை அழிக்கின்றன.
  • பருப்பு வகைகளை, அரிசி உணவுகளோடு சேர்ந்து சாப்பிடுவதால் முழுமையான புரதச்சத்தை உடல் பெறலாம்.
பருப்புகளை நொதிக்க செய்வதால்... இரட்டிப்பாகும் ஊட்டச்சத்துக்கள்... ஆய்வில் வெளியான ஆச்சரிய தகவல்

பருப்பு வகைகள் ஆரோக்கியத்தின் களஞ்சியங்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதனை நொதிக்க வைப்பதால் அதன் ஊட்டச்சத்து மிகவும் அதிகரிக்கும் என்றும், செரிமானம் மிகவும் எளிதாகும் என்றும் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அமெரிக்காவின் இல்லினாய்ஸ் அர்பானா-சாம்பெய்ன் பல்கலைக்கழகத்தின் (University of Illinois Urbana-Champaign, US,) உணவு விஞ்ஞானிகள், மேற்கொண்ட ஆய்வில், இந்த தகவ்ல வெளியாகியுள்ளது.

Add Zee News as a Preferred Source

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பீன்ஸ் மற்றும் பிற பருப்பு வகைகள்

பீன்ஸ் மற்றும் பிற பருப்பு வகைகளை நொதிக்க செய்வதால் அதன் ஆக்சிஜனேற்ற பண்புகள் மற்றும் நீரழிவு எதிர்ப்பு பண்புகள் மிகவும் மேம்படுகின்றன என்றும் அதனை நொதிக்க செய்வதால் அதில் உள்ள புரதங்களின் அளவு அதிகரிக்கின்றன என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பீன்ஸ் வகை பருப்புகள், குறிப்பாக பச்சைப்பட்டாணி சிவப்புப் பயறு உள்ளிட்ட வகை பருப்புகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்த பருப்புகள் குளிக்க வைக்கப்பட்டு நொதித்தல் செயல்முறைக்கு உட்படுத்தப்பட்ட போது அதன் புரதத்தின் அளவு அதிகரித்தது. அதோடு அதன் ஆக்ஸிஜனேற்று எதிர்ப்பு செயல்பாடு சதவீதம் வரை அதிகரித்ததும், நீரழிவு நோயை கட்டுப்படுத்தும் திறன் 70% அதிகரித்ததும் தெரிய வந்துள்ளது.

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் LP299V நுண்ணுயிரி

பருப்பு வகைகளை நொதிக்க LP299V  என்னும் லாக்டிபிளாண்டிபாசிலஸ் பிளாண்டாரம் பாக்டீரியா நுண்ணுறியாக பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நுண்ணுயிரிகளைக் கொண்ட ப்ரோபயோடிக் என்னும் நல்ல பாக்டீரியாவின் திரிபு வகையாகும். ப்ரோபயோடிக் உணவுகள் செரிமானத்தை மீம்படுத்தி ஜீரண சக்தியை மேம்படுத்த உதவும். நொதிக்க வைக்கப்படும் உணவுகள் ப்ரோபாயோடிக் பண்புகளை (Health Tips) கொண்டிருக்கின்றன.

நொதித்தல் செயல்முறை பருப்புகளில் உள்ள ஆன்ட்டி நியூட்ரியன்ட்களை அழிக்கின்றன

பொதுவாகவே பீன்ஸ் வகை பருப்புகளை, பயன்படுத்தும் போது அதனை குறைந்தது 8 மணி நேரம் ஊற வைத்து பயன்படுத்துமாறு உணவியல் வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஏனெனில் இவ்வாறு செய்யும் போது ஏற்படும் நொதித்தல் செயல்முறை, அதில் உள்ள ஆன்ட்டி நியூட்ரியன்ட்களை அழிக்கின்றன. ஆன்ட்டி நியூட்ரியன்ட்கள் என்பது, பிற ஊட்டச்சத்துக்களை உடல் கிரகிக்கும் திறனை பாதிக்கும் ஒரு கலவை ஆகும். மேலும், புளிக்க வைப்பதால் அல்லது நொதிக்க வைப்பதால் செரிமானம் எளிதாகும்.

பருப்பு வகைகளை, அரிசி உணவுகளோடு சேர்ந்து சாப்பிடுவதால் முழுமையான புரதச்சத்தை உடல் பெறலாம்

பருப்பு வகைகளில் அதிலும் பீன்ஸ் வகை பருப்புகளில் 18 முதல் 25 % வரை தரமான புரதம் உள்ளது. சைவ உணவு பிரியர்கள் புரதச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்க, இதனை தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் பருப்பு வகைகளை, அரிசி உணவுகளோடு சேர்ந்து சாப்பிடுவதால் முழுமையான புரதச்சத்தை உடல் பெறலாம். பருப்பில் உள்ள அமினோ அமிலங்கள் அரிசி அல்லது பிற தானிய உணவுகளில் காணப்படுவதில்லை. அதே சமயம் தானிய வகைகளில் உள்ள சில அமினோ அமிலங்கள், பருப்பு வகைகளில் காணப்படுவதில்லை. எனவே இவை இரண்டையும் சேர்த்து உண்ணும்போது, உடலுக்கு முழுமையான புரதம் கிடைக்கிறது.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | காலில் அதிக வலியா? சிறுநீரக பாதிப்பாக இருக்கலாம்! ஜாக்கிரதை!

மேலும் படிக்க | 230 கிலோவில் இருந்த பிரபலம்... உயிருக்கு பெரிய ஆபத்து - உடனே 130 கிலோவை குறைத்தது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News