30 நாள்களில் 15 கிலோவை குறைக்க... பிட்னஸ் பயிற்சியாளர் கொடுக்கும் முக்கிய டிப்ஸ்!

Weight Loss Journey: வெறும் 30 நாட்களில் 15 கிலோ உடல் எடையை குறைப்பதற்கு எப்படி என்பது குறித்து பிட்னஸ் பயிற்சியாளர் தெரிவித்த டிப்ஸை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jul 20, 2025, 07:25 AM IST
  • இன்ஸ்டாகிராமில் அவர் ஜூலை 17இல் பதிவிட்டுள்ளார்.
  • மேலும் உணவுமுறை குறித்தும் அவர் டிப்ஸ் கொடுத்துள்ளார்.
  • இவரை இன்ஸ்டாவில் 10 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர்.
30 நாள்களில் 15 கிலோவை குறைக்க... பிட்னஸ் பயிற்சியாளர் கொடுக்கும் முக்கிய டிப்ஸ்!

Weight Loss Journey And Tips: உடல் எடையை குறைப்பது என்பது பலருக்கும் சற்று கடினமான விஷயமாக இருக்கலாம். காரணம், மிக கடினமான உணவு கட்டுப்பாடு, சில நேரங்களில் பட்டினி கிடப்பது மற்றும் அதிதீவிரமான உடற்பயிற்சிகள் ஆகியவை உங்களுக்கு சோர்வையும் வெறுப்பையும் உண்டாக்கலாம்.

Add Zee News as a Preferred Source

Weight Loss Journey: சரியான உடல் எடை குறைப்பு திட்டம் தேவை

உடல் எடை குறைப்பை நீங்கள் ரசித்து மேற்கொள்ளும் போது அது நீண்ட காலத்திற்கு நிலைபெற்றிருக்கும், மேலும் ஆரோக்கியமான வாழ்விற்கும் வழிவகுக்கும். இருப்பினும் ஒருவர் தனக்கேற்ற உடல் எடை குறைப்பு திட்டத்தை தேர்ந்தெடுப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. எனவே தான் ஊட்டச்சத்து நிபுணர்கள், உடற்பயிற்சி வல்லுநர்கள் ஆகியோரை ஆலோசித்து அவரவர் உடல் நிலைக்கு ஏற்ப திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். நீங்கள் சுயமாகவோ அல்லது ஆன்லைனில் படித்தோ உடல் எடை குறைப்பை மேற்கொள்வது ஆபத்தில் கூட போய் முடியலாம். எனவே மருத்துவ வல்லுநர்களை முறையாக ஆலோசித்து உடல் எடை குறைப்பை மேற்கொள்ளுங்கள்.

 

Weight Loss Journey: 30 நாட்களில் 15 கிலோவை குறைக்கலாம்

அந்த வகையில், பிட்னஸ் பயிற்சியாளர் சுப் அகர்வால் என்பவர் மிகவும் நுட்பமான மற்றும் நேரத்தை சேமிக்கும் உடல் எடை குறைப்பு திட்டம் குறித்து கடந்த ஜூலை 17ஆம் தேதி இன்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அதில், எவ்வித கடினமான உணவு கட்டுப்பாடுகள் இன்றி வெறும் 30 நாட்களில் 15 கிலோ உடல் எடையை குறைப்பதற்கு எப்படி என்பது குறித்து விளக்கியிருந்தார். அதிலும் முக்கியமாக அவர் குறிப்பிட்டது என்னவென்றால், 'உங்களின் இரவு உணவை தயவுசெய்து தவறவிடாதீர்கள்' என்பதுதான். அதுதான் முக்கியமானது என்றும் கூறுகிறார். உடல் எடையை குறைப்பதற்கான அவரின் எளிமையான டிப்ஸ் பின்வருமாறு:

Weight Loss Tips: உடல் எடையை குறைப்பதற்கான டிப்ஸ்

காலையில் 7-8 மணிக்கு, எழுந்த உடன் வெந்நீரில் எலுமிச்சை சாறு, சிறிதளவு உப்பு கலந்து குடிக்கவும். 

காலையில் வேகமாக நடக்கம் பழக்கவழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். அதாவது வேகமாக நடக்கும் பயிற்சியை தினமும் காலையில் 30-40 நிமிடங்கள் செய்யுங்கள். குறைந்தபட்சம் 6000 ஸ்டெப்ஸை உறுதிசெய்யுங்கள்.

தினமும் 2 வேளை முழுமையான சாப்பாடு, 1 வேளை குறைந்தளவு நொறுக்குத்தீனி, 1 வேளை முழுவதும் புரோட்டீன் பானம் ஆகியவற்றை அவர் பரிந்துரைக்கிறார். மேலும், புரதத்தை அதிகப்படுத்தி, கார்போஹைட்ரேட்டை குறைத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்.

உடற்பயிற்சி தேவைப்பட்டால் செய்யலாம். வாரத்திற்கு 3 நாள்கள் 15 நிமிடங்கள் HIIT பயிற்சி மேற்கொள்ளலாம் அல்லது தினமும் 10 ஆயிரம் - 15 ஆயிரம் ஸ்டெப்ஸ் நடக்கலாம். 

தினமும் குறைந்தபட்சம் 7 மணிநேரம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க வேண்டும்.

Weight Loss Journey: உடல் எடையை குறைக்க அவர் தவிர்த்த விஷயங்கள்

மேலும் சுப் அகர்வால் சர்க்கரையை அவரது உணவுமுறையில் இருந்து அகற்றிவிட்டாராம். டீ/காபியில் கூட சர்க்கரை போடுவதில்லையாம். அதேபோன்று, பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளையும், வறுத்த உணவுகளையும் தவிர்த்து வருகிறாராம். பசித்தால் மட்டுமே சாப்பிடுவாராம், சந்தோஷமாக இருந்தாலோ கவலையாக இருந்தாலோ உணர்ச்சிவசப்பட்டெல்லாம் சாப்பிடவே மாட்டாராம். 

இரவு 8 மணிக்கு பிறகு எதையும் சாப்பிட மாட்டாராம். அதேபோல் தினமும் இரவு 10-11 மணிக்கெல்லாம் தூங்கிவிடுவாராம். இவை மட்டுமின்றி காலை, மதியம், மாலை, இரவு என ஒவ்வொரு வேளையும் என்னென்ன உணவு உட்கொள்ளலாம் என்றும் என்னென்ன உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என்றும் சுப் அகர்வால் பரிந்துரைத்துள்ளார். கூடுதல் தகவல்களுக்கு அவரது இன்ஸ்டா பக்கத்தை அணுகவும். 

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பிட்னஸ் பயிற்சியாளரான சுப் அகர்வால் என்பவரின் பரிந்துரையாகும். இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் குறிப்பிட்டதை சுருக்கமாக வாசகர்களின் புரிதலுக்காக இங்கு எழுதி உள்ளோம். இருப்பினும் இதனை பின்பற்றும் முன் வாசகர்கள், உரிய மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை).

மேலும் படிக்க | 114 கிலோவில் இருந்த பெண்... 69 கிலோவுக்கு குறைய அவர் செய்த 4 பழக்கங்கள் இதோ!

மேலும் படிக்க | 15 நாட்களில் உடல் எடையை குறைக்க வேண்டுமா? பயிற்சியாளர் சொன்ன 7 டிப்ஸ்!

மேலும் படிக்க | 20 கிலோ உடல் எடையை குறைத்த பெண்.. உதவிய 6 விஷயங்கள்!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News