7 Tips for Weight Loss: உடல் எடை இழப்பு பயிற்சியாளர் நடாலியா குவேரா என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரைவான கொழுப்பு இழப்புக்கான நடைமுறை உத்திகளை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஜூலை 10ஆம் தேதி பயிற்சியாளர் நடாலியா குவேரா, 2 வாரங்களில் உடல் கொழுப்பை குறைக்க சில டிப்ஸ்களை பகிர்ந்துள்ளார். அவர் "அடுத்த 2 வாரங்களில் உடல் கொழுப்பைக் குறைக்க விரும்புகிறீர்களா? இதைச் செய்யுங்கள். நீங்கள் தொப்பை கொழுப்பைக் குறைக்கவும், தசை வரையறையை அதிகரிக்கவும் முயற்சிக்கும் ஒரு பிஸியான நிபுணராக இருந்தால், குறிப்பாக உங்கள் மையத்தைச் சுற்றி, இந்த 7 படிகள் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டவை அல்ல," என்று அந்த பதிவில் கூறியிருந்தார். பின்னர் உடல் இழப்புக்கு உதவும் 7 டிப்ஸ்களை பகிர்ந்தார்.
கலோரி பற்றாக்குறை
நீங்கள் குறைவான கலோரிகள் கொண்ட உணவை சாப்பிட வேண்டும். உங்கள் இலக்கை அடையும் வரை இதை பின்பற்றுங்கள். நீங்கள் உடற்பயிற்சி செய்து கலோரிகளை எரிப்பதற்கு பதிலாக, அதனை குறைவாக உட்கொள்வது சிறந்தது ஆகும்.
உணவு
உணவுகளை நீங்களே தயாரித்து கவனமுடன் சாப்பிடவும். வெளியே வாங்கி சாப்பிடுவதை விட நீங்களே சமைத்து சாப்பிடுவது சரியானதாக இருக்கும். வீட்டிலேயே நீங்கள் சமைக்கும்போது, எண்ணெய் போன்ற பொருட்களில் கவனம் செலுத்த முடியும். நீங்கள் உடல் எடை குறைப்பு பயணத்தில் இருந்தால், இதனை பின்பற்றுங்கள்.
அளவான உணவு
கீரைகள், பெர்ரி வகைகள், மெலிந்த புரதங்கள் போன்றவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். அவை உங்கள் கலோரிகளை அதிகப்படுத்தாமல் உங்கள் வயிற்றை நிரப்புகின்றன.
அதிக புரதம்
உடல் எடையில் ஒரு கிலோவிற்கு 2.2 கிராம் (அல்லது ஒரு பவுண்டுக்கு 1 கிராம்) என்ற அளவில் இருக்க வேண்டும். பெண்கள்: ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 100 கிராம். ஆண்கள்: ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 140 கிராம். இது தசை தக்கவைப்பு மற்றும் கொழுப்பு இழப்புக்கு முக்கியமாகும்.
தண்ணீர் vs. ஆல்கஹால்
நீரேற்றம் வயிற்று உப்புசம் மற்றும் பசியைக் குறைக்கிறது. மது தூக்கம், வளர்சிதை மாற்றம் மற்றும் முடிவெடுப்பதை சீர்குலைக்கிறது. ஒரு நாளைக்கு 2 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும், உடல் எடை பயனத்தில் இருப்பவர்கள் மதுவைத் தவிர்ப்பது நல்லதாகும்.
ஒருநாளைக்கு 7000 அடிகள்
தினமும் உங்களை உற்சாகமாக சோர்வடையாமல் வைத்துக்கொள்வது மிகவும் முக்கியமானது. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 7,000 அடிகள், எந்த சாக்குப்போக்கும் இல்லை. நடைபயிற்சி என்பது கொழுப்பைக் குறைப்பதற்கு மிகவும் முக்கியமான ஒன்று.
தூக்கம்
ஒருநாளுக்கு 7 முதல் 9 மணி நேரம் வரை கண்டிப்பாக தூங்க வேண்டும். நீங்கள் குறைவாக தூங்கும் பட்சத்தில் அது உங்கள் கவனத்தை சிதறடிக்கும். நல்ல தூக்கம் உங்களை ஒரு விஷயத்தில் நன்றாக கவனம் செலுத்த உதவுகிறது. உடல் எடை இழப்பு காலத்தில் மட்டுமல்லாமல், பொதுவாகவே நல்ல தூக்கம் என்பது அவசியம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிங்க: ஜிம் போகாமல்..பட்டுன்னு எடையை குறைக்க டிப்ஸ்! ‘இதை’ வீட்டில் செய்யுங்கள்..
மேலும் படிங்க: சம்மரில் சிம்பிளாய் எடை குறைக்க உதவும் டிப்ஸ்: ட்ரை பண்ணி பாருங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









