)
Weight Loss Tips: பொதுவாக உடல் எடையை குறைப்பது என்பது கடினமான விஷயமாகும். உடற்பயிற்சி, உணவுமுறை ஆகியவற்றில் நீங்கள் சரியாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், அனைத்தும் வீணாகிவிடும். இந்த நிலையில், உடல் இழப்பு பயணத்தில், ஒரு விஷயத்தை தவிர்த்தால், எடை இழப்பு என்பது கூடுதலாக 10 மடங்கு கடினமாகும் என எடை இழப்பு பயிற்சியாளர் ஆன் - மரியா டாம் கூறுகிறார்.
ஜூன் 24ஆம் தேதி ஆன் - மரியா டாம் இன்ஸ்டாகிராம் பதிவில், இது குறித்து தெரிவித்துள்ளார். அதாவது உணவுக்கு பின்னர் நீங்கள் நடக்காமல் இருப்பது, உங்கள் எடை எடை இழப்பு பயணத்தை கடினமாக்கும் என கூறினார். "நீங்கள் உணவுக்கு பின்னர் நடப்பதை தவிர்க்கிறீர்கள் என்றால், நீங்கள் உங்கள் எடை இழப்பு பயணத்தை 10 மடங்கு கடினம் ஆக்குகிறீர்கள் என்று அர்த்தம்.
உங்களுக்கு கடுமையான HIIT உடற்பயிற்சிகளோ அல்லது ஜிம்மில் மணிநேரமோ தேவையில்லை. ஒவ்வொரு உணவிற்கு பிறகும் சுமார் 1000 அடிகளை நீங்கள் எடுத்து வைக்க வேண்டும். அது தோராயமாக 10-15 நிமிட மென்மையான அசைவு, இது உங்கள் உடலின் இயற்கையான கொழுப்பை எரிக்கும் சுவிட்சை செயல்படுத்துகிறது.
சிறியதாக தொடங்குங்கள்
தொடக்கத்தில் இரவு உணவிற்கு பிறகு உங்கள் வீட்டை சுற்றி நடக்கவும். இதனை ஒரு 10 முதல் 15 நிமிடங்களுக்கு செய்யுங்கள். தீவிரத்தை விட நிலைத்தன்மையை நோக்கமாகக் கொள்ளுங்கள் என கூறினார்.
அடுத்ததாக வாரத்திற்கு இரண்டு முறை வெறும் வயிற்றில் காலை நடைப்பயிற்சியைச் சேர்க்குமாறு அவர் பரிந்துரைத்தார். "உங்கள் கிளைகோஜன் இயற்கையாகவே குறைவாக இருக்கும்போது சேமிக்கப்பட்ட கொழுப்பை இது குறிவைக்கிறது," என்று எடை இழப்பு பயிற்சியாளர் ஆன் - மரியா டாம் விளக்கினார்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ