34 கிலோவை குறைத்த நபர்... தாயின் கடைசி வார்த்தைக்காக எடையை குறைத்தது எப்படி?

Weight Loss Journey: சமூக வலைதள பிரபலம் ஒருவர் தாய் சொன்ன ஒரு வார்த்தைக்காக 34 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். அவரின் அனுபவத்தை இங்கு அறியலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 1, 2025, 02:50 PM IST
  • ஒரு வருடம் முயன்று 34 கிலோவை குறைத்துள்ளார்.
  • இன்னும் 9 கிலோவை குறைக்க திட்டமிட்டுள்ளார்.
  • எந்தவொரு குறுக்கு வழியையும் அவர் பின்பற்றவில்லையாம்.
34 கிலோவை குறைத்த நபர்... தாயின் கடைசி வார்த்தைக்காக எடையை குறைத்தது எப்படி?

Weight Loss Journey: பிரபல ஃபுட் பிளாகரான ராக்கி சிங் என்பவர் அவரது உடல் எடை குறைப்பு பயணம் குறித்து சமீபத்தில் அவரது X தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதாவது, ஓராண்டிலேயே அவர் 34 கிலோவை குறைத்துள்ளாராம். திட்டமிட்டபடி இன்னும் 9 கிலோவை அவர் குறைக்க இருப்பதாகவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Add Zee News as a Preferred Source

Weight Loss Journey: ராக்கி சிங் போட்ட X பதிவு

ராக்கி சிங் அந்த பதிவில் தனது இலக்கை நெருங்கி வருவது குறித்து பேசியிருந்தார். மேலும், அவர் அந்த பதிவில் இரண்டு புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார். ஒரே டி-ஷர்ட் உடன் அவர் கடந்தாண்டு எடுத்த புகைப்படத்தையும், தற்போது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதிலேயே அவர் அடைந்துள்ள மாற்றத்தை பார்க்க முடிகிறது.

கடந்த மார்ச் 29ஆம் தேதி பதிவிட்ட அந்த X பதவில்,"இன்று காலை கணக்குபடி 34 கிலோவை குறைத்துள்ளேன். "தொங்கும் தோலை வலுப்படுத்தும்" திட்டம் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. இன்னும் 9 கிலோ மட்டுமே உள்ளது... நான் முயற்சி செய்ய ஆரம்பித்து 12 மாதங்கள் ஆகின்றன... கடந்த வருடத்தின் இதே டி-ஷர்ட்" என குறிப்பிட்டுள்ளார்.

Weight Loss Journey: உடல் எடையை குறைக்க மருந்தா...?

இதை தொடர்ந்து, அந்த பதிவில் பலரும் அவரது உடல் எடை குறைப்பு முயற்சிக்கு தங்களின் வாழ்த்துகளை பகிர்ந்து வந்தனர். அதில் ஒரு சிலர் ராக்கி சிங்கிடம் கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பினர். அந்த வகையில், ஒரு பதிவர், ராக்கி சிங் Ozempic எனப்படும் உடல் எடை குறைப்பு மருந்தை பயன்படுத்தினாரா என கேள்வியெழுப்பியிருந்தார். அதற்கு ராக்கி சிங்கும் பதில் அளித்திருந்தார்.

Weight Loss Journey: தாயார் சொன்ன அந்த கடைசி வார்த்தை

அதில்,"இல்லவே இல்லை... குற்றஞ்சாட்டாமல், இதை ஒரு கேள்வியாக கேட்டதற்கு நன்றி... ட்விட்டரில் இன்னும் சில நல்ல உள்ளங்கள் இருக்கிறார்கள்... இன்னும் சிலரோ ஒருவரின் முயற்சிகளையும், உணர்ச்சிகளையும் காயப்படுத்துவதிலேயே இருக்கிறார்கள்" என்றார். மேலும், அதில்,"உடல் எடையை குறை என்பதுதான் எனது தாயார் என்னிடம் கூறிய கடைசி வார்த்தை. எனவே அதை நான் செய்கிறேன்" என பதிவிட்டிருந்தார்.

Weight Loss Journey: உடல்நிலை பிரச்னையா...?

"உடல் ஆரோக்கியத்தில் ஏதும் பிரச்னை வந்ததால், உடல் எடையை குறைத்துள்ளீர்களா..." என மற்றொரு பதிவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கும் ராக்கி சிங் பதில் அளித்தார்."எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை. நான் சாப்பிடுவதையும், மது அருந்துவதையும், புகை பிடிப்பதையும் கொண்டாடினேன். தற்போது சாப்பாட்டை குறைத்துள்ளேன். தற்சமயம் குடிப்பதையும் குறைத்துள்ளேன். நான் யாருக்காகவோ அல்லது எந்த உடல்நிலை பிரச்னைக்காகவோ இதை செய்யவில்லை. எனது தாயார் உயிரிழப்பதற்கு முன் அவர் என்னிடம் சொன்ன ஒரே காரணத்திற்காகவே உடல் எடையை குறைத்தேன்" என்றார்.

Weight Loss Journey: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சில டிப்ஸ்

மேலும், அவரது ஃபிட்னஸ் மற்றும் ஆரோக்கியம் குறித்த சில டிப்ஸ்களையும் நெட்டிசன்களுடன் பகிர்ந்துகொண்டார். "சிறுவயதில் ஊட்டச்சத்தான உணவுகளை சாப்பாட்டுடன் ஆரோக்கியமான வாழ்வு தொடங்கும். அதை தொடர்ந்து இளமையில் உடற்பயிற்சியும், ஆரோக்கியமான பழக்கவழக்கங்களும் தேவை. 25 வயதில் உங்களுக்கு பலமான அடிதளம் இருந்தாக வேண்டும், இல்லையெனில் அதற்கு பின் கஷ்டம்தான். அதிக உடல் இயக்கத்துடன் சுறுசுறுப்பான வாழ்க்கை முறை அவசியமாகும். உடல் பருமனுடன் இருந்தாலே அது ஆரோக்கியமற்றதாகிவிடாது, அதேபோல் ஒல்லியாக இருப்பதும் ஆரோக்கியமானது இல்லை" என்றார்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் ராக்கி சிங்கின் தனிப்பட்ட அனுபவமாகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | 38 வயதில் 45 கிலோவை குறைத்த பெண்... உடல் எடையை கரைக்க அவர் என்ன செய்தார்?

மேலும் படிக்க | 6 நாள்களில் 4 கிலோவை குறைத்த பெண்... கொழுப்பை கரைக்க உதவிய Switch On டயட்!

மேலும் படிக்க | 19 கிலோவை டக்குனு குறைத்த நபர்... 2025 நியூ இயர் சபதத்தில் வெற்றி - எப்படி செய்தார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News