இதய தமனிகள் சேரும் கொலஸ்ட்ராலை எரிக்க.... டயட்டில் சேர்க்க வேண்டிய உணவுகள்

உணவே மருந்து: உங்களுக்கு கொலஸ்ட்ரால் மற்றும் எல்டிஎல் அளவுகள் அதிகமாக இருந்தால், அதனை கட்டுப்படுத்த மருந்துகளை எடுத்துக்கொள்வதற்கு முன் உணவு முறைகளில் கவனம் செலுத்துவது நல்லது. இதனால் மருந்தை உட்கொள்ள வேண்டிய நிலையை தவிர்க்கலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 11, 2025, 09:02 PM IST
  • ட்ரைகிளிசரைடு மற்றும் HDL விகிதம் தொடர்பான சில விஷயங்கள்.
  • அழற்சி எதிர்ப்பு உணவுகளை சாப்பிட முயற்சி செய்யுங்கள்.
  • கொலஸ்ட்ரால் அளவுகள் மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும் உணவுகள்.
இதய தமனிகள் சேரும் கொலஸ்ட்ராலை எரிக்க.... டயட்டில் சேர்க்க வேண்டிய உணவுகள்

உணவே மருந்து: மருந்து சாப்பிடுவதன் மூலம் நோயிலிருந்து விடுபடுவது என்பது அனைவருக்கும் தெரியும். ஏனெனில் மருந்திற்கு நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் உண்டு. ஆனால் சமீபகாலமாக நோய்களுக்கு மட்டுமின்றி அனைத்திற்கும் மக்கள் மருத்துவத்தையே நம்பி வருகின்றனர். உங்கள் கொலஸ்ட்ரால் மற்றும் எல்டிஎல் அளவுகள் அதிகமாக இருந்தால், மருந்துகளை எடுத்துக்கொள்வதற்கு முன் உணவு முறைகளில் கவனம் செலுத்துவது நல்லது. இதனால் மருந்தை உட்கொள்ள வேண்டிய நிலையை தவிர்க்கலாம்.

Add Zee News as a Preferred Source

உங்கள் ட்ரைகிளிசரைடு மற்றும் கொலஸ்ட்ரால் விகிதம் 1.5 க்கும் குறைவாக இருந்தால், உங்களுக்கு நல்ல இதய ஆரோக்கியம் உள்ளது என்று அர்த்தம் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கு மருந்து தேவையில்லை. இந்த விகிதம் அதிகமாக இருந்தால், உங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் அதிகரிப்பதால் இதய தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு இரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இது மாரடைப்பு மற்றும் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும். இதனால் இதனை கட்டுக்குள் வைக்க வேண்டும். இதற்கு உதவும் சில ஊட்டச்சத்துக்களையும் சில உணவுகளையும் அறிந்து கொள்ளலாம்

கொலஸ்ட்ரால் மருந்தை உட்கொள்ளும் முன்  உங்கள் டயட்டில் கவனம் செலுத்தவும்

உணவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்

உங்கள் உணவில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதற்கு சியா விதைகள், வாதுமை பருப்புகள், தேங்காய் எண்ணெய் மற்றும் பசு நெய் ஆகியவற்றை குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும். 

அழற்சி எதிர்ப்பு உணவுகள்

முடிந்தவரை அழற்சி எதிர்ப்பு உணவுகளை சாப்பிட முயற்சி செய்யுங்கள். உதாரணமாக, கருமிளகு, இஞ்சி, பூண்டு மற்றும் மஞ்சள் போன்றவை.

நிறைவுற்ற கொழுப்பு உணவுகளை குறைக்க வேண்டும்

உங்கள் உணவில் இறைச்சி மற்றும் அதிக கொழுப்புள்ள பால் பொருட்களின் உட்கொள்ளலை முடிந்தவரை குறைக்கவும். இது உங்கள் ஒட்டுமொத்த கொலஸ்ட்ராலைக் குறைக்கும். நிறைவுற்ற கொழுப்பு உட்கொள்ளலைக் குறைப்பது உங்கள் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பு அல்லது எல்.டி.எல் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும்.

டிரான்ஸ் கொழுப்பை குறைக்க வேண்டும்

டிரான்ஸ் கொழுப்புகள் ஓரளவு ஹைட்ரஜனேற்றப்பட்ட தாவர எண்ணெய்களில் அதிக அளவில் காணப்படுகின்றன. பேக்கரிகளில் இருந்து வாங்கப்படும் குக்கீகள் மற்றும் கேக்குகள் இதில் அதிகம் இருப்பதால், உங்கள் ஒட்டுமொத்த கொலஸ்ட்ராலை அதிகரிக்கலாம். 

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உட்கொள்ளல்

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் தேவையற்ற கெட்ட கொழுப்பின் அளவை பாதிக்காது. ஆனால் இவை இதயத்திற்கு அதிக ஆரோக்கியத்தை அளிக்கும் குணம் கொண்டவை. இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி, வாதுமை பருப்புகள் மற்றும் ஆளி விதைகள் போன்ற நீங்கள் அதிகம் உண்ணும் உணவுகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன.

அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்

நார்சத்து அதிகம் கொண்ட ஓட்ஸ், ஆளி விதை, ஆப்பிள், பேரிக்காய் போன்ற உணவுகளை உண்பதன் மூலம் கொலஸ்ட்ரால் இரத்தத்தில் உறிஞ்சப்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கலாம். 

புரதம் நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்

புரதம் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இது கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் மொத்த கொலஸ்ட்ரால் அளவுகள் மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | மாரடைப்பு வராமல் தடுக்கும்... சில எளிய உடற்பயிற்சிகள்... கண்டிப்பா செய்யுங்க

மேலும் படிக்க | உடல் எடையைக் குறைக்க எதற்காக உணவை விட...கலோரிகளை குறைக்கச் சொல்கின்றனர் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News