இன்றைய வாழ்க்கை முறையும் உணவுப் பழக்கமும் 90 சதவீத உடல்நலப் பிரச்சினைகளுக்குக் காரணமாகின்றன. அதில் ஒன்று கொழுப்பு கல்லீரல். உடலில் இருந்து நச்சுப் பொருட்களை அகற்றவும், செரிமான நொதிகளை வெளியிடவும் செயல்படும் கல்லீரலை கொழுப்பு கல்லீரல் உள்ளிட்ட பிரச்சனை ஏற்படாமல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்வது அவசியம். கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேரும்போது இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது.
சில உணவுகள் கல்லீரல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும்
கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மது பழக்கம் பொதுவாகக் காரணமாகக் கருதப்படுகிறது. ஆனால் சில உணவுகளும் கல்லீரல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும். மது அருந்தாதவர்களின் கல்லீரலையும் பெரிதும் பாதிக்கச் செய்யும் சில ஆபத்தான உணவுகள் உள்ளன. இவற்றை தவிர்ப்பதால், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். தவறான உணவுப் பழக்கங்கள் கல்லீரல் தொடர்பான பல வகையான நோய்களை (Health Tips) ஏற்படுத்துகின்றன.
கொழுப்பு கல்லீரல் உள்ளிட்ட கல்லீரல் தொடர்பான நோயை ஏற்படுத்தும் சில உணவுகள்
சர்க்கரை பானங்கள்
சோடா, எனர்ஜி பானங்கள், பழச்சாறுகள் ஆகியவை கொழுப்பு கல்லீரலுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். அவற்றில் உள்ள அதிக அளவு சர்க்கரை மற்றும் பிரக்டோஸ் கல்லீரலில் கொழுப்பைச் சேரச் செய்கிறது. இதை தினமும் உட்கொண்டால், உங்களுக்கு உடல் பருமன் மட்டுமல்லாது கொழுப்பு கல்லீரல் நோய் வரலாம்.
சிப்ஸ், பிரஞ்சு ப்ரைஸ் மற்றும் துரித உணவு
பிரஞ்சு பொரியல், பர்கர், சிப்ஸ் போன்ற வறுத்த உணவுகள் கொழுப்பும் எக்கச்சக்க கலோரிகளும் நிறைந்தவை. இவற்றில் அதிக அளவு டிரான்ஸ் கொழுப்புகள் உள்ளன. மேலும் இவற்றில் உள்ள சோடியம் பெரும் பாதிப்பை தரக் கூடியது. அவை கல்லீரலில் சேர்ந்து .
மைதா பரோட்டா மற்றும் பாஸ்தா
மைதா மாவில் தயாரிக்கப்பட்ட பரோட்டா ரொட்டி, பாஸ்தா மற்றும் பிற உணவுகள் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்தவை. இவற்றில் ஊட்டச்சத்து என்பதே இல்லை. இதில் இருப்பதெல்லாம் கலோரிகள் மட்டுமே. இவை கொழுப்பு கல்லீரல் அபாயத்தை அதிகரிக்கின்றன. இந்த உணவுப் பொருட்களில் இதில் நிறைய சர்க்கரை உள்ளது. நார்ச்சத்தும் இல்லை. அமைதா உணவுகளை தினமும் சாப்பிடுவதன் காரணமாக, கல்லீரலில் கொழுப்பு வேகமாக அதிகரிக்கத் தொடங்குகிறது.
அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள்
பால் பொருட்கள் ஆரோக்கியமானது தான் என்றாலும், அதிக கொழுப்புள்ள பால், சீஸ் மற்றும் வெண்ணெய் போன்ற பால் பொருட்களை அதிக அளவில் சாப்பிடுவது கொழுப்பு கல்லீரலை ஏற்படுத்துகின்றன. இவற்றில் அதிக அளவில் நிறைவுற்ற கொழுப்புகள் உள்ளன. அவை கல்லீரலில் கொழிப்பௌ சேர்த்து கொழுப்பு கல்லீரல் ஏற்படக் காரணமாகின்றன.
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்
தொத்திறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் ஹாட் டாக் போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் அதிக அளவு கொழுப்பு மற்றும் சோடியம் உள்ளது. இந்தப் பொருட்கள் கல்லீரலில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தி, கொழுப்பு கல்லீரல் அபாயத்தை அதிகரிக்கும். பொதுவாக பதப்படுத்தப்பட்ட உணவுகள், ரெடி டு ஈட் வகை உணவுகள் அனைத்துமே கல்லீரலை காலி செய்யும் உணவுகள் தான்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | சாப்பாட்டில் கவனமாக இருந்து... 12 வாரங்களில் கொழுப்பை குறைத்த பெண்!
மேலும் படிக்க | கெட்ட கொழுப்பை இயற்கையான வழியில் காலி செய்யும் டாப் 9 உணவுகள்: லிஸ்ட் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ