உடலுக்கு சூட்டை கொடுக்கும் சில உணவுகள்... கோடை காலத்தில் நிச்சயம் தவிர்க்க வேண்டியவை

கடுமையான கோடை காலத்தில், சுட்டெரிக்கும் வெயில், கடுமையான வியர்வை, செரிமான பிரச்சனைகள், தலைவலி உள்ளிட்ட பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். எனவே, உடலுக்கு சூட்டை கொடுக்கக்கூடிய உணவுகளை தவிர்க்க வேண்டும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 27, 2025, 07:06 PM IST
  • கோடை காலத்தில் உடலுக்கு சூட்டை கொடுக்கக்கூடிய உணவுகளை தவிர்க்க வேண்டும்.
  • உடலைக் கூலாக வைத்திருக்க உதவும் உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பது நல்லது.
  • கோடை காலத்தில் தவிர்க்க வேண்டிய சில உணவுகள்.
உடலுக்கு சூட்டை கொடுக்கும் சில உணவுகள்... கோடை காலத்தில் நிச்சயம் தவிர்க்க வேண்டியவை

கடுமையான கோடை காலத்தில், சுட்டெரிக்கும் வெயில், கடுமையான வியர்வை, செரிமான பிரச்சனைகள், தலைவலி உள்ளிட்ட பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். எனவே, நமது டயட்டில் உடலைக் கூலாக வைத்திருக்க உதவும் உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பது நல்லது. அதே சமயத்தில், உடலுக்கு சூட்டை கொடுக்கக்கூடிய உணவுகளை தவிர்க்க வேண்டும்.

Add Zee News as a Preferred Source

கோடை காலத்தில் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் (Foods To Avoid In Summer)

கோடை காலத்தில், உடல்நிலை நீர்ச்சத்து குறையாமல் இருக்க, மோர், எலுமிச்சை ஜூஸ் உள்ளிட்ட பழச்சாறுகள், இளநீர் ஆகியவற்றை அருந்த வேண்டும் என்றும், ஜீரணிக்க கடினமான உணவுகளை தவிர்த்து, எளிதாக செரிமானம் ஆகும் உணவுகளை உண்ண வேண்டும் என்று உணவியல் நிபுணர்கள் பலர் வலியுறுத்தி கூறுவதை காணலாம். உடலுக்கு சூட்டை கொடுக்கும் உணவுகளை தவிர்ப்பதால், பல உடல்நல பிரச்சனைகளை (Health Tips) வராமல் தடுக்கலாம்.

அசைவ உணவுகள் (Non-Veg Food Side Effects)

இறைச்சி மற்றும் பிற அசைவ உணவுகள் உடலுக்கு சூட்டை கொடுக்க கூடியவை. அதிலும் குறிப்பாக சிவப்பு இறைச்சியை சாப்பிடுவது மூளையில் வெப்பத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர் உணவியல் நிபுணர்கள். பொதுவாகவே சிவப்பு இறைச்சி, கொலஸ்ட்ராலை எகிற வைக்கும் என்பதால், அதனை மிக அளவோடு சாப்பிடுவது நல்லது.

எண்ணெயில் பொரித்த உணவுகள் (Side Effects of Fried Foods)

எண்ணெயில் பொரித்த உணவுகள் வாய்க்கு ருசியானது தான் என்றாலும், உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு. எண்ணெயில் பொரித்த அல்லது அதிக எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்பதால் உடல் சூடு அதிகரிக்கும். நீர்ச்சத்து குறைபாட்டையும் ஏற்படுத்தும்.

தேநீர் மற்றும் காபி (Side Effects of Coffee and Tea)

கடும் கோடை காலத்திலும் காபி டீ கைவிடாத பலரை பார்க்கலாம். கொளுத்தும் வெயிலில் அதிக அளவில் காபி டீ குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவதோடு, சோர்வு தலைசுற்றல் போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம். அதோடு வாயு, வயிற்று உப்புசம் உள்ளிட்ட செரிமான பிரச்சனைகளும் ஏற்படும்.

காரமான மசாலா அதிகம் சேர்த்த உணவுகள் (Side Effects of Spicy Foods)

கடுமையான கோடை காலத்தில் அதிக காரம் கொண்ட உணவுகளை சாப்பிடுவதால் வயிற்றில் எரிச்சல் உள்ளிட்ட அஜீரண பிரச்சனைகள் ஏற்படலாம். உடலுக்கு சூட்டை கொடுத்து உங்களை நோய்வாய் படுத்தும் காரமான மசாலாக்கள் கலந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.

மது பானங்களை தவிர்க்க வேண்டும் (Alcohol Side Effects)

மது மற்றும் ஆல்கஹால் பானங்கள் உடலுக்கு சூட்டை கொடுக்கக் கூடியது. எனவே, கடுமையான வெயில் காலங்களில் மது அருந்துவதை தவிர்ப்பது நல்லது. நாள் தலை சுற்றல் மற்றும் தலைவலி ஏற்படலாம்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | மூட்டு வலி, கீல்வாதத்தை ஏற்படுத்தும்... யூரிக் அமிலத்தை ஒழித்துக் கட்டும் சில மேஜிக் உணவுகள்

மேலும் படிக்க | 30 நாளில் உடல் எடை குறைய உணவில் இவற்றை முற்றிலும் நீக்குங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News