எலும்புகள் வஜ்ரம் போல் வலுவாக இருக்க கால்சியம் மட்டுமல்ல... இந்த சத்துக்களும் அவசியம்
எலும்புகள் பலவீனமானால், மூட்டு வலிகளும், ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிதல் நோயும் தாக்கும் அபாயமும் அதிகரிக்கும். எலும்பு ஆரோக்கியமாக இருக்க கால்சியம் தவிர, வேறு சில ஊட்டச்சத்துக்களும் அவசியம்.
எலும்புகள் பலவீனமானால், மூட்டு வலிகளும், ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிதல் நோயும் தாக்கும் அபாயமும் அதிகரிக்கும். பொதுவாக, ஆரோக்கியமான எலும்புகளைப் பெற எலும்புகள் வஜ்ரம் போல் வலுவாக இருக்க, கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது நம்மில் பலர் அறிந்ததே. ஆனால், எலும்பு ஆரோக்கியமாக இருக்க கால்சியம் தவிர, வேறு சில ஊட்டச்சத்துக்களும் அவசியம். இதனை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்கவும், கீல்வாதம், மூட்டு வலி, ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க, கால்சியம் ஊட்டச்சத்தினை தவிர, பிற ஊட்டச்சத்துக்களுக்கும் சமமாக முக்கியத்துவம் உள்ளது. உங்கள் எலும்பு ஆலரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், எலும்பு அடர்த்தியை அதிகரிக்க தேவையான கால்சியம் ஊட்டச்சத்தினை தவிர முக்கியமாக தேவைப்படும் மற்ற ஊட்ட சத்துக்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
வைட்டமின் D (Vitamin D)
நாம் உண்ணும் உணவுகளில் உள்ள கால்ஷியம் உடலில் சேர வைட்டமின் டி அவசியம். சூரிய ஒளி மூலம் கிடைக்கும் மிக முக்கிய ஊட்டச்சத்தான வைட்டமின் டி, இரத்தத்தில் போதுமான அளவு ஊட்டச்சத்துக்களை பராமரிக்கவும் உதவுகிறது. சூரிய ஒளியைத் தவிர, கீரை, சோயாபீன் போன்ற உணவுகளிலிருந்தும் இந்த ஊட்டச்சத்துக்களைப் பெறலாம்.
புரத சத்து (Protein)
புரதச் சத்து நிறைந்த உணவுகள் எலும்பு மற்றும் தசையை பாதுகாக்கிறது. புரோட்டீன் உட்கொள்வது கால்சியம் சத்தை உடல் உறிஞ்சுவதற்கும் உதவுகிறது. புரத சத்து எலும்பு தாது அடர்த்தியை அதிகரிக்கும் என்றும், வயது காரணமாக எலும்புகள் தேயும் விகிதத்தை குறைக்கும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. எனவே, புரதத்தை போதுமான அளவு உட்கொள்வது எலும்பு முறிவு மற்றும் எலும்பு தேய்மான அபாயத்தையும் குறைக்கும்.
வைட்டமின் C (Vitamin C)
எலும்பு ஆரோக்கியத்தை பராமரிப்பதில் வைட்டமின் சி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வைட்டமின் சிட்ரஸ் பழங்களில் ஏராளமாக காணப்படுகிறது. ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படும் வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து, எலும்புகள் உடைவதைத் தடுக்கிறது. எலும்பு வளர்ச்சி, மறுஉருவாக்கம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் நோய் வராமல் தடுக்க வைட்டமின் சி மிகவும் உதவும்.
மெக்னீசியம் (Magnesium)
எலும்பு திசுக்களில் சுமார் 60% திச்சுக்களில் மெக்னீசியம் காணப்படுகிறது. எனவே, எலும்பு ஆரோக்கியத்திற்கு மெக்னீசியம் ஊட்டச்சத்து மிகவும் அவசியம். மெக்னீசியம் உணவை போதுமான உட்கொள்ளுபவர்களுக்கு எலும்பு அடர்த்தி அதிகம் உள்ளதாக பல ஆய்வுகள் காட்டுகின்றன. ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை குறைக்க இது மிகவும் அவசியம். பருப்பு வகைகள், விதைகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற உணவுகளை வழக்கமாக உட்கொள்வதன் மூலம் எலும்புகளை வலுவாக வைத்துக் கொள்ளலாம்.
வைட்டமின் K (Vitamin K)
உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்க வைட்டமின் வைட்டமின் கே அவசியம். தினசரி, பெண்களுக்கு 122 எம்சிஜி என்ற அளவிலும், ஆண்களுக்கு 138 எம்சிஜி என்ற அளவிலும் வைட்டமின் கே தேவை. ப்ரோக்கோலி, கீரை, முட்டைக்கோஸ் மற்றும் ஆகியவை வைட்டமின் கே அதிகம் உள்ள உணவுகளில் சில.
மேலும் படிக்க | தொப்பை கொழுப்புக்கு உடனடி தீர்வளிக்கும் சமையலறை மசாலாக்கள்: ட்ரை பண்ணி பாருங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ