பிட் ஆக இருக்க... உணவில் எண்ணெயை 10% குறையுங்கள்... பிரதமர் மோடியின் அட்வைஸ்

உணவில் எண்ணெய் சிறிது கூடுதலாக பயன்படுத்துவது, பல நோய்களுக்கு மூல காரணமாகிறது. டயட்டில் எண்ணெயின் அளவை சிறிது குறைப்பது கூட இதயம், கல்லீரல் மற்றும் செரிமான அமைப்பில் நல்ல விளைவை ஏற்படுத்தும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 21, 2025, 12:16 PM IST
  • நம் அன்றாட உணவில் 10% எண்ணெயைக் குறைத்தால், கலோரி உட்கொள்ளல் தானாகவே குறையும்.
  • அதிக எண்ணெய் கொண்ட உணவு கொழுப்பு நிறைந்த கல்லீரலை ஏற்படுத்துகிறது.
  • எண்ணெய் நிறைந்த உணவு ஜீரணிக்க கடினமாக இருக்கும்.
பிட் ஆக இருக்க... உணவில் எண்ணெயை 10% குறையுங்கள்... பிரதமர் மோடியின் அட்வைஸ்

இன்று, ஜூன் 21 ஆம் தேதி, நாடு முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் 11வது சர்வதேச யோகா தினம் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தில், பிரதமர் நரேந்திர மோடி விசாகப்பட்டினத்தில் இருந்தார். அங்கு அவர் யோகா பயிற்சியில் பங்கேற்று, பொதுமக்களுக்கு சுகாதார விழிப்புணர்வு பற்றிய செய்தியை வழங்கினார். இதன் போது, ​​உடல் பருமன் உலகிற்கு ஒரு கடுமையான சவால் என்றும், உணவில் எண்ணெயை 10% குறைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பொதுமக்களிடம் உரையாற்றிய பிரதமர், "நான் எனது உணவில் எண்ணெயை 10% குறைத்துள்ளேன். மேலும் இந்த சிறிய மாற்றம்,  ஆனால் பயனுள்ள மாற்றத்தை நாட்டு மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன்" என்றார். இப்போது 10% குறைவாக எண்ணெய் சாப்பிடுவது நம் ஆரோக்கியத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுகிறது? எனவே பதில் ஆம், நிச்சயமாக! அறிவியல் ஆராய்ச்சி மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் இதைத் தன் கூறுகிறார்கள். உணவில் எண்ணெய் சிறிது கூடுதலாக இருந்தாலும் கூட உடலில் கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் வீக்கம் அதிகரிக்கிறது. இது பல நோய்களுக்கு மூல காரணமாகிறது. அத்தகைய சூழ்நிலையில், எண்ணெயின் அளவை சிறிது குறைப்பது கூட இதயம், கல்லீரல் மற்றும் செரிமான அமைப்பில் நல்ல விளைவை (Health Tips) ஏற்படுத்தும்.

1. கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்

அதிக எண்ணெய் கொண்ட உணவு கொழுப்பு நிறைந்த கல்லீரலை ஏற்படுத்துகிறது. இது கல்லீரலின் செயல்பாட்டில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. சரியான நேரத்தில் கவனிக்கப்படாவிட்டால், இந்த நிலை கல்லீரல் சிரோசிஸ் அல்லது கல்லீரல் செயலிழப்புக்கு வழிவகுக்கும். எண்ணெயைக் குறைப்பதன் மூலம், கல்லீரலை தேவையற்ற கொழுப்பிலிருந்து பாதுகாக்கலாம் மற்றும் அதன் டீடாக்ஸ் திறனை அதிகரிக்கலாம்.

2. இதயம் ஆரோக்கியமாக இருக்கும்

எண்ணெயில் உள்ள நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் உடலில் LDL (கெட்ட கொழுப்பு) அளவை அதிகரிக்கின்றன. இது இதய நரம்புகளை சுருங்கச் செய்கிறது, மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. 10% குறைவாக எண்ணெய் சாப்பிடுவது கொழுப்பைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது மற்றும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

3. எடை இழப்புக்கு உதவும்

இன்று அனைத்து வயதினருக்கும் உடல் பருமன் ஒரு பிரச்சனையாகிவிட்டது. நம் அன்றாட உணவில் 10% எண்ணெயைக் குறைத்தால், கலோரி உட்கொள்ளல் தானாகவே குறையும். இது எடையைக் கட்டுப்படுத்த உதவும். குறிப்பாக டயட் இல்லாமல், ஜிம்மிற்குச் செல்லாமல் எடை குறைக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும்.

4. செரிமான அமைப்பு வலுப்பெறும்

எண்ணெய் நிறைந்த உணவு ஜீரணிக்க கடினமாக இருக்கும். இதனால், வாயு, அஜீரணம், அமிலத்தன்மை போன்ற பிரச்சினைகளை ஏற்படுகிறது. குறிப்பாக இரவு உணவில், அதிக எண்ணெய் செரிமான அமைப்பில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எண்ணெயை 10% குறைப்பதன் மூலம், உணவு இலகுவாக இருக்கும், ஆற்றல் நிலை சிறப்பாக இருக்கும், மேலும் மலச்சிக்கல் மற்றும் வீக்கம் போன்ற பிரச்சினைகள் குறையும்.

மேலும் படிக்க | மாதவிடாய் வயிற்று வலியை குறைக்கும் 7 யோகாசனங்கள்! ஈசியா செய்யலாம்..சிரமம் தெரியாது

மேலும் படிக்க |'மோதல்கள் நிறைந்த உலகில்... யோகாவே அமைதியை தரும்' - பிரதமர் மோடி பேச்சு!

மேலும் படிக்க | குடலில் நல்ல பாக்டீரியாக்கள் பல்கி பெருக உதவும்... 5 சிறந்த ப்ரீபயோடிக் உணவுகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News