மூட்டு வலிக்கு உடனடி நிவாரணம்: இப்படி செஞ்சி பாருங்க

Joint Pain Home Remedies: மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற உதவும் எண்ணெய் எது? இதை எப்படி தயார் செய்வது? இவற்றை பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 21, 2025, 10:23 PM IST
  • இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு போன்ற பல பண்புகள் நிறைந்துள்ளன.
  • இது மூட்டு வலியைக் குறைப்பதில் பெரிதும் உதவுகிறது.
  • மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற, தேங்காய் எண்ணெயில் இஞ்சி கலந்து தடவவும்.
மூட்டு வலிக்கு உடனடி நிவாரணம்: இப்படி செஞ்சி பாருங்க

Joint Pain Home Remedies: தரமற்ற உணவு மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக, இந்த காலத்தில் பெரும்பாலான மக்கள் சிறு வயதிலேயே மூட்டு வலியால் அவதிப்படுகிறார்கள். மாறிவரும் வானிலை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் மூட்டு வலி ஏற்படலாம். இதற்கு பலர் பல வித மருந்துகளை உட்கொள்கிறார்கள். இதனுடன் சில வீட்டு வைத்தியங்களும் வலியை குறைக்க உதவும். அப்படி ஒரு ஆரோக்கியமான வீட்டு வைத்தியம் பற்றி இந்த பதிவில் காணலாம். 

மூட்டு வலியை குறைக்க தேங்காய் எண்ணெய் பெரிய வகையில் உதவும். வீட்டில் குறிப்பிட்ட வகையில் தேங்காய் எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெறலாம். மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற உதவும் எண்ணெய் எது? இதை எப்படி தயார் செய்வது? இவற்றை பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.

தேங்காய் எண்ணெயில் பூண்டு

பூண்டில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது மூட்டு வலியைக் குறைக்க உதவுகிறது. இதற்கு, தேங்காய் எண்ணெயுடன் பூண்டை கலந்து தடவுவதால் மூட்டு வலி நீங்கும்.

தேங்காய் எண்ணெயில் இஞ்சி

இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு போன்ற பல பண்புகள் நிறைந்துள்ளன. இது மூட்டு வலியைக் குறைப்பதில் பெரிதும் உதவுகிறது. மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற, தேங்காய் எண்ணெயில் இஞ்சி கலந்து தடவவும். இதைச் செய்வதால், மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.

தேங்காய் எண்ணெயில் கருப்பு மிளகு

கருப்பு மிளகில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை மூட்டு வலியைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு, கருப்பு மிளகுடன் தேங்காய் எண்ணெயைக் கலந்து தடவி மூட்டு வலியைப் போக்கலாம்.

தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவும் முறை:

1. முதலில் தேங்காய் எண்ணெயை சூடாக்கவும்.
2. பின்னர் அதனுடன் பூண்டு, இஞ்சி மற்றும் கருப்பு மிளகு சேர்க்கவும்.
3. இப்போது இந்தக் கலவையை மூட்டுகளில் தடவி 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கொளுத்தும் கோடை வெயில்.. கட்டாயம் இந்த உணவுகளுக்கு 'NO' சொல்லுங்க

மேலும் படிக்க | கோடையில் பித்த தோஷத்தை சரி செய்ய உதவும் டயட் பிளான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News