நாள் முழுவதும் வாய் துர்நாற்றம் உள்ளதா? காரணங்கள், எளிய வீட்டு வைத்தியங்கள்

Mouth odor : நாள் முழுவதும் வாய் துர்நாற்றம் உள்ளவர்களுக்கான காரணம் மற்றும் வீட்டு வைத்தியம் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 18, 2025, 10:55 AM IST
  • வாய் துர்நாற்றம் அடிக்கிறதா?
  • உங்களுக்கு இப்பிரச்சனை இருக்கலாம்
  • வாய் துர்நாற்றத்தை போக்க டிப்ஸ்
நாள் முழுவதும் வாய் துர்நாற்றம் உள்ளதா? காரணங்கள், எளிய வீட்டு வைத்தியங்கள்

Natural remedies for mouth odor : வாய் துர்நாற்றம் என்பது ஒரு சங்கடமான பிரச்சசனை. அந்த வாய் துர்நாற்றம் உங்களை அருவருக்க வைக்கலாம். உங்கள் சுற்றத்தினருக்கு பெரிய தொந்தரவாகவும் இருக்கும். இது பல் மற்றும் ஈறுகளின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். கேவிட்டி, ஈறு நோய்கள் அல்லது பைரியா (Pyorrhoea) போன்ற பிரச்சினைகள் இருந்தால், துர்நாற்றம் வருவது இயற்கையானது. இதனை எப்படி சரி செய்யலாம், ஆங்கில மருத்துவத்தை நாடுவதற்கு முன்பு வீட்டு வைத்திய முறைகள் வழியாக எப்படி இதனை சரிசெய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்

வாய் துர்நாற்றம் காரணங்களும் விளக்கமும்

பற்களை சரியாக துலக்காமல் இருப்பது, நாக்கை சுத்தம் செய்யாதது, உணவுக் கழிவுகள் பற்களில் சிக்கி அழுகுதல் ஆகிய காரணங்களால் வாய் துர்நாற்றம் அடிக்கும். 2. பல் மற்றும் ஈறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருந்தால், அதாவது பல் சொத்தை (Cavities), ஈறு நோய்கள் (Gum disease), பைரியா (Pyorrhea), பல் குழிகள் (Dental abscess) ஆகிய பிரச்சனைகள் இருந்தால் வாய் துர்நாற்றம் அடிக்கும். சைனஸ் தொற்று (Sinus infection), டான்சில் பிரச்சினைகள், இரைப்பை அமிலம் (Acid reflux), சர்க்கரை நோய் (Diabetes), கல்லீரல்/சிறுநீரக பிரச்சினைகள் இருந்தாலும் வாய் துர்நாற்றம் அடிக்கும். 

வாய் துர்நாற்றத்தை அகற்ற எளிய வீட்டு வைத்திய முறைகள்

1. படிகாரம் (Alum)

ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறிது படிகாரத்தை கரைக்கவும். 20 நிமிடங்கள் விட்டுவிட்டு, பின்னர் பருத்தி துணியால் வடிகட்டவும். இந்த தண்ணீரை ஒரு பாட்டிலில் சேமித்து, தினமும் காலையில் பல் துலக்கிய பின் கழுவவும். இது பாக்டீரியாவைக் கொல்லும் மற்றும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தும்.

2. பேக்கிங் சோடா (Baking Soda)

ஒரு கிளாஸ் தண்ணீரில் அரை டீஸ்பூன் பேக்கிங் சோடாவை கலக்கவும். இதை நாளில் இரண்டு முறை (காலை மற்றும் இரவு) வாய் கொப்பளிக்க பயன்படுத்தவும். இது வாயின் அமிலத்தன்மையை சமநிலைப்படுத்தி, துர்நாற்றத்தை குறைக்கும்.

மேலும் படிக்க | Dolo 650: மிட்டாய் மாதிரி சாப்பிடாதீங்க... கிட்னி முதல் லிவர் வரை அனைத்தும் பாதிக்கும்

3. கிராம்பு (Clove)

கிராம்பு என்பது இயற்கையான ஆன்டிபாக்டீரியல் மற்றும் மணம் நீக்கும் பண்புகளைக் கொண்டது. நேரடியாக 1-2 கிராம்பை மெல்லுவதன் மூலம் வாய் தூய்மையாக இருக்கும். அல்லது, கிராம்பு பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து, குளிர்ந்த பின் பற்களை கழுவவும்.

கூடுதல் டிப்ஸ்:

தினமும் இரண்டு முறை பல் துலக்கவும். முக்கியமாக உணவுக்கு பின். நாக்கை சுத்தம் செய்யவும் (Tongue cleaner பயன்படுத்தவும்). தண்ணீர் அதிகம் குடிக்கவும். வாய் உலர்ந்தால் பாக்டீரியா வளரும். புகையிலை மற்றும் மது பழக்கத்தை தவிர்க்கவும்.

மேலும் படிக்க | நீரிழிவு முதல் செரிமானம் வரை.... பல பிரச்சனைகளின் ஒரே தீர்வு தனியா

மேலும் படிக்க | கோடையில் தோல் அரிப்பு, தடிப்பு பிரச்சனையா? இந்த 5 விஷயங்களில் கவனம் தேவை

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News