முகப்பருவை போக்க எளிய வீட்டு வைத்தியம்:-
இன்றைய இளஞர்களின் தலையாய பிரச்சனைகளில் முதலிடம் வகிப்பது இந்த முகப்பரு. பல மாணவ மாணவிகளின் மன உளைச்சலுக்கு காரனமாக இருப்பது இந்த முகப்பரு என்றால் அது மிகையாகாது. முகப்பரு பிரச்சனைகளை போக்க நிறைய வழிகள் இருந்தாலும் பெரும்பாலனோர் பயன்படுத்தும் முறை கடைகளில் விற்கும் கெமிக்கல் கலந்த க்ரீம்களை பயன்படுத்துவது தான். அவற்றால் நமது தோல்கள் பாதிக்கப்படும். மேலும் பக்க விளைவுகள் ஏற்பட வாய்பிருக்கிறது. எனவே இத்தகைய நிலைஏற்படாமல் இருக்க இயற்கை முறைகளை மேற்கொள்ள வேண்டும். வீட்டில் எளிதில் கிடைக்கும் வகையில் உள்ள பொருட்களை கொண்டு எப்படி முகப்பருக்களை போக்கலாம் என்று பார்ப்போமா !!!
சந்தனம்:
சந்தனம் முகப்பருக்கள் குணப்படுத்தும் ஒரு சிறந்த தேர்வு ஆகும். பெரும்பாலும் அனைவருடைய வீட்டில் சந்தனம் இருக்கும். சந்தனப் பொடியை முகத்தில் தடவி ஊற வைத்து கழுவினால் சருமம் பொலிவோடு காணப்படும். இதனால் முகப்பருக்கள் வருவதை தடுக்கலாம்.
ஆரஞ்சு தோல்:
இதில் வைட்டமின் டி இருப்பதால் தோலுக்கு நல்லது. முகத்தில் பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் இருந்தால் ஆரஞ்சு தோல் அரைத்து பருக்கள் வந்த இடத்தில் பூசுங்கள் பிறகு காய்ந்ததும் முகத்தை கழுவி விடுங்கள். இப்போது முகம் பிரகாசமாக ஜொலிக்கும்.
முல்தானி மிட்டி:
இயற்கையாக சருமத்தில் உள்ள கூடுதல் எண்ணெய்யை உறிஞ்சக்கூடிய தன்மையை கொண்டுள்ளதால் சருமத்தில் உள்ள கூடுதல் எண்ணெய்யை நீக்க முல்தானி மெட்டியை பயன்படுத்தலாம். எனவே முல்தானி மிட்டி பயன்படுத்தி வந்தால் முகப்பருக்கள் இல்லாமல் இருக்கலாம்.
எலுமிச்சை சாறு:-
இதில் வைட்டமின் சி இருக்கிறது. எலுமிச்சை சாரு இறந்த செல்கள் நீக்குகிறது உங்கள் தோல்கள் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க உதவுகிறது.
அலோவேரா(கற்றாலை):
கற்றாலையை தோல் உள்ளுறுப்புகள் மற்றும் பிற பகுதிகளில் ஏற்படும் கோளாறுகளை குணப்படுத்த பயன்படுத்தலாம். இதில் முகம் கழுவினால் சருமம் பொலிவோடு, மென்மையாகவும் காணப்படும்.