Weight Loss Journey: உடல் எடை குறைப்பில் ஈடுபடுவோர்கள் அதீத உடற்பயிற்சிகள், அதிக கட்டுப்பாடுகள் கொண்ட உணவுமுறை ஆகியவற்றை பின்பற்றுவார்கள். இதன்மூலம், உடல் எடையை விரைவாக குறைக்க வேண்டும் என நினைப்பார்கள்.
ஆனால் இது ஆரோக்கியமான முறை இல்லை. இதில் உடல் எடை வேகமாக குறைந்திருந்தாலும், எந்நேரத்திலும் இறங்கிய எடை மீண்டும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். உடல் எடையை குறைக்க முயல்பவர்கள் மருத்துவ ஆலோசனையின்படி, ஆரோக்கியமான செயல்முறையில் ஈடுபட வேண்டும். அதில் வெகு சிலரே நீண்ட காலத்திற்கான ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க முயல்வார்கள்.
Weight Loss Journey: ஆரோக்கியமான உடல் எடை குறைப்பு
அந்த வகையில், 77 வயதான பிரபல இந்திய எழுத்தாளர் ஷோபா தே-வின் மகளான ஆனந்திதா தே-வின் உடல் எடை குறைப்பு பயணம், ஆரோக்கியமான அனுபவத்தை நமக்குச் சொல்கிறது. இவரது ஒழுக்கம், தொடர்ச்சியான செயல்பாடு, கடின உழைப்பு ஆகியவற்றின் பலனாலேயே விரைவான பலனை பெற்றிருக்கிறார், குறுக்கு வழிகளில் அல்ல.
உடல் எடை குறைப்பு பயணம் குறித்து பேசும் ஆனந்திதா தே,"நான் உணவுமுறை கட்டுப்பாடு எதையும் பின்பற்றவில்லை. நான் உடல்நல நிபுணரையோ, ஊட்டச்சத்து நிபுணரையோ ஆலோசிக்கவில்லை. எனது பொது அறிவை பயன்படுத்தி, மிகுந்த தெளிவுடன் சாப்பிட்டேன்" என்கிறார். மேலும் அவரது எளிய மற்றும் முழுமையான உணவுமுறை குறித்து, "ஒருகட்டத்தில் ஒரு பாக்கெட் முழுமையான சாக்லேட் சிப்ஸ் பிஸ்கட்டை கூட காலை உணவாக சாப்பிட்டிருக்கிறேன், ஆனால், இப்போது காலையில் வெறும் காபி மட்டும்தான். அதோடு எதையும் சேர்த்து சாப்பிடுவதில்லை. பழைய பழக்கங்களில் இருந்து வெகு தூரம் வந்துவிட்டேன்" என்கிறார்.
Weight Loss Journey: உடல்நலப் பிரச்னைகளும் ஓடின...
ஆனந்திதா தேவுக்கு சில உடல்நல பிரச்னைகளும் இருந்திருக்கின்றன. டைப் 2 நீரிழிவு நோயில் இருந்து விடுபடவும் அவர் உடல் எடை குறைப்பில் ஈடுபட்டுள்ளார். இந்த பயணத்தின் முதல் 2 மாதங்களிலேயே அதன் பாதிப்பில் இருந்து வெளிவந்துள்ளார். அதேபோல், அவரது மாதவிடாய் பிரச்னையும் சீராகியுள்ளது."பல ஆண்டுகளாக என மாதவிடாய் சீரான நாள்களில் வந்ததில்லை, ஆனால் தற்போது அது சீராகி உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு கூறுவேன்" என்கிறார்.
Weight Loss Journey: ஆனந்திதா தே-வின் டயட் என்ன?
மேலும் உணவுமுறை குறித்து பேசும் அவர்,"நான் உடல் எடை குறைப்புக்கு பட்டினியாக பசியோடு கிடைப்பதை எப்போதுமே நம்பியது கிடையாது. எதை, எவ்வளவு சாப்பிடுகிறோம் என்ற தெளிவுடன் மட்டுமே சாப்பிட்டு வந்தேன். எனது உணவின் அளவையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தேன்" என்கிறார். வீட்டில் செய்த ஓட்ஸ், பழங்களையே காலை உணவாக சாப்பிட்டு வந்துள்ளார். எண்ணெய்யோ, வெண்ணெய்யோ சேர்க்காத சப்பாத்தி, அவல், இறைச்சி ஆகியவற்றை சாப்பிடுவாராம்.
மேலும் சிறுதானிய உணவு குறித்து பேசிய அவர்,"அவை எனக்கு பெரியளவு கைக்கொடுத்ததில்லை. அவற்றை சாப்பிட்டால் அதிகமாக சாப்பிட்ட உணர்வு எனது வயிற்றில் ஏற்படுகிறது. அதேநேரத்தில் வறுத்த உணவுகள், இனிப்பு பானங்கள், உருளைக்கிழங்கள், மதுபானம் ஆகியவற்றை தொடுவது கூட இல்லையாம். இனிப்பையும் தவிர்த்து வந்துள்ளார், தேவைப்பட்டால் பழங்கள் மற்றும் அவ்வப்போது பேரீட்சை பழங்களை சாப்பிடுவாராம். இயற்கையான இனிப்புகளே போதுமானது என்கிறார்.
Weight Loss Journey: ஆனந்திதா தே-வின் நடைப்பயிற்சி
மேலும் உணவு மட்டுமின்றி உடற்பயிற்சியும் முக்கியம் என கூறும் அவர்,"நான் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வேன். காலையில் ஒன்றரை மணிநேரமும், மாலையில் 1 மணிநேரமும் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வேன், தவறவிடாமல்..." அவரது தூக்க பிரச்னை குறித்து பேசிய அவர்,"2018ஆம் ஆண்டில் இருந்து பதற்றத்திற்காகவும், தூக்கமின்மைக்காகவும் நான் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறேன். 2024ஆம் ஆண்டு முதல் தற்போது வரை எனது மனம் 100% மாறிவிட்டது" என்கிறார்.
Weight Loss Journey: ஆனந்திதா தே-வின் அறிவுரை
ஆனந்திதா தே, அவரது உடல் எடை குறைப்பு பயணத்தில் அதாவது 8 மாதங்களில் 42 கிலோவை குறைத்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு அவர் கூறும் அறிவுரை என்னவென்றால், எதையும் உடனே எதிர்பார்க்காமல் தினந்தோறும் தொடர்ச்சியாக செயல்பட்டு வந்தால் மட்டுமே நினைத்த இலக்கையும், நினைத்த பலனையும் பெற முடியும் என்கிறார்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் ஆனந்திதா தே-வின் தனிப்பட்ட உடல் எடை குறைப்பு அனுபவமாகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை செய்ய வேண்டும். ஆனந்திதா தே-வின் கருத்துகளுக்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது)
மேலும் படிக்க | 179 கிலோவில் இருந்த நபர்... 4 மாதங்களில் 24 கிலோவை குறைக்க என்ன சாப்பிட்டார்?
மேலும் படிக்க | 10 வயதில் 200 கிலோ... போராடி இப்போ 77 கிலோவுக்கு உடல் எடையை குறைத்தது எப்படி?
மேலும் படிக்க | படிக்கட்டை கூட ஏற முடியாத பெண்... இப்போ எப்படி இருக்காங்க பாருங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









