பிறந்த குழந்தை ஒன்றுக்கு கொரோனா வைரஸ் ஆன்டிபாடிகள் இருப்பதாக தெரிய வந்த செய்திகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்பெயினில் இபிசா தீவில் கடந்த வாரம் பிறந்த ஒரு குழந்தை கொரோனா வைரசுடன் பிறந்துள்ளது. இதன் மூலம் உலகிலேயே கொரோனா வைரஸ் நோயெதிர்ப்பு சக்தியுடன் பிறந்த முதல் குழந்தையாக அந்தக் குழந்தை மாறியுள்ளது. அந்த குழந்தைக்கு புருனோ (Bruno) என்று பெயரிடப்பட்டுள்ளது.


குழந்தையின் தாய் கருவுற்றிருந்தபோது,  கர்ப்பத்தின் கடைசி மூன்று மாதங்களில் கோவிட் -19 தடுப்பூசி (Covid-19 vaccine) போட்டுக் கொண்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


Also Read | Kim Jong Unக்கு எதிராக US, Japan, Seoul 3 நாடுகளும் ஒன்றிணைந்த காரணம் என்ன?


மல்லோர்காவில் உள்ள சன் எஸ்பேஸில் (Son Espases) மருத்துவமனையில் குழந்தையின் தொப்புள் கொடியிலிருந்து (umbilical cord) மாதிரி எடுத்து பரிசோதிக்கப்பட்டது. அப்போது அந்த ஆண் குழந்தைக்கு கோவிட் -19 க்கு எதிராக எதிர்ப்பு சக்தி கொண்ட ஆண்டிபாடிகள் (antibodies) உருவாக்கியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இது பற்றி பேசிய மாட்ரிட் மருத்துவமனை இயக்குநரகத்தின் (Madrid Hospital Directorate) துணை இயக்குநர் மானுவல் கிராண்டல் மார்ட்டின் ,குழந்தைக்கு இருக்கும் நோயெதிர்ப்பு சக்தியானது, தடுப்பூசி போடப்பட்ட ஒருவருக்கு சமமான அளவில் இருப்பதாக தெரிவித்தார் என சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


கர்ப்பிணிப் பெண்களுக்கு கோவிட் -19 இன் தாக்கம் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கர்ப்ப காலத்தில் கோவிட் -19 பாதிப்பு ஏற்பட்ட 88 கர்ப்பிணிப் பெண்களை இந்த ஆய்வு கண்காணிக்கிறது. இதில் அறிகுறியே இல்லாமல் கொரோனா நோய் தொற்று ஏற்பட்ட கர்ப்பிணிகளுடம் அடங்குவர்.


Also Read | சவப்பெட்டியில் உயிருடன் புதைக்கப்பட்டு 50 மணி நேரம் இருந்த வீடியோவுக்கு 50 மில்லியன் views


கர்ப்பமாக இருக்கும் தாய்க்கு தடுப்பூசி போடுவதன் மூலம் குழந்தையும் நோயெதிர்ப்பு சக்தியை பெறுகிறது என்பதை இந்த சம்பவம் உணர்த்துவதாக நம்பப்படுகிறது.


ஆன்டிபாடிகளைப் பெறும் கர்ப்பிணிப் பெண்கள், தங்கள் குழந்தைகளுக்கும் தொப்புல்கொடி மூலம் அதை கடத்தலாம் என்பதும், நோய்த்தடுப்பு ஊசிகள் கர்ப்பிணிகளுக்கு போடலாம் என்பதற்கு ஆதரவாகவும் இந்த ஆய்வின் வெளிவந்த தகவல்கள் நம்பிக்கையை கொடுக்கின்றன.


எனவே, கர்ப்பிணி பெண்களுக்கு கோவிட் தடுப்பூசி போடுவது, கருவில் இருக்கும் குழந்தையின் நோயெதிர்ப்புத் திறனை அதிகரிப்பதோடு, கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்கிறது என்பது நல்ல செய்தியாக உள்ளது.


Also Read | April Fool: முட்டாள்கள் தினம்! ஏப்ரல் ஃபூல்; ஏமாந்த ஃபூல்- எப்படி உருவானது?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR