)
Morning Foods for Diabetes Control: நீரிழிவு நோயாளியா நீங்கள்? அப்படியென்றால், இந்த பதிவு உங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க, உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் உணவில் அலட்சியமாக இருந்தால், சர்க்கரை அளவு அதிகரிக்கும். குறிப்பாக ஃபாஸ்டிங்க் சுகர் லெவலை கட்டுக்குள் வைக்க உணவில் அதிகப்படியான கவனம் தேவை. இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க காலையில் எழுந்தவுடன் உட்கொள்ள வேண்டிய சில உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Curry Leaves: கறிவேப்பிலை
காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலைகளை மென்று சாப்பிடுவது நல்லது. ஏனெனில் கறிவேப்பிலை ஃபாஸ்டிங் இரத்த சர்க்கரையைக் குறைக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கறிவேப்பிலை சாறு குடிப்பதும் நன்மை பயக்கும்.
Cinnamon: இலவங்கப்பட்டை
நீரிழிவு நோயாளிகள் காலையில் வெறும் வயிற்றில் 1 கிளாஸ் தண்ணீரில் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை மற்றும் சிறிது எலுமிச்சை சேர்த்து குடிப்பதால் நன்மை பயக்கும். இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதை எளிதாக்குகிறது. மேலும் ஒது நீரிழிவு அபாயத்தைக் குறைக்கிறது.
Fenugreek: வெந்தயம் மற்றும் சீரகம்
நீரிழிவு நோயாளிகள் வெந்தய நீரையும் சீரக நீரையும் மாறி மாறி குடிக்கலாம். சீரக நீர் நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக அளவில் நன்மை பயக்கும். வெந்தயம் மற்றும் சீரக நீரை உட்கொள்வது ஃபாஸ்டிங்க் சுகர் அளவை வெகுவாக குறைக்க உதவுகிறது. இவற்றில் உள்ள நார்ச்சத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றது.
Amla: நெல்லிக்காய்
நீரிழிவு நோயாளிகள் 100 மில்லி தண்ணீரில் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகருடன் சுமார் 30 மில்லி நெல்லிக்காய் சாறு அல்லது எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். இந்த கலவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
Eggs: முட்டைகள்
நீரிழிவு நோயாளிகளுக்கு முட்டை சிறந்த காலை உணவாக பார்க்கப்படுகின்றது. இதில் புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகமாக உள்ளன. இது உடலின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது. மேலும் இது வயிற்றுக்கு நிரம்பிய உணர்வை அளிக்கின்றது. ஆகையால் தேவையற்ற ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது.
Protein, Fiber: புரதச்சத்து, நார்ச்சத்து நிறைந்த உணவுகள்
மேலே உள்ள உணவுகளைத் தவிர, நீரிழிவு நோயாளிகள் காலை உணவில் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதில் முட்டை, தயிர், பழங்கள் மற்றும் முழு தானியங்கள் ஆகியவையும் அடங்கும். இது உங்கள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ