எச்சரிக்கை! கல்லீரலில் பிரச்சனை இருப்பதை உணர்த்தும்... சில ஆரம்ப அறிகுறிகள் இவை தான்

Liver Health: கல்லீரல் தொடர்பான நோயை சரியான நேரத்தில் அடையாளம் காண்பதன் மூலம், சிகிச்சை எளிதாகும். இதனால் எதிர்கால பிரச்சினைகள் தவிர்க்கப்படலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 23, 2025, 04:38 PM IST
  • கல்லீரலை சரியாக கவனித்துக் கொள்ளாவிட்டால், பல நோய்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
  • ஆரோக்கியமற்ற கல்லீரலின் ஆரம்ப கால அறிகுறிகள்.
  • கல்லீரல் நோய் உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
எச்சரிக்கை! கல்லீரலில் பிரச்சனை இருப்பதை உணர்த்தும்... சில ஆரம்ப அறிகுறிகள் இவை தான்

கல்லீரல் என்பது நமது உடலின் மிக முக்கியமான உறுப்பு ஆகும். இது உணவை ஜீரணிப்பது, உடலில் இருந்து கழிவுகளை அகற்றுவது, பித்த சாற்றை உற்பத்தி செய்வது மற்றும் நச்சுகளை வடிகட்டுவது போன்ற பல முக்கிய செயல்பாடுகளை மேற்கொள்கிறது. கல்லீரலை சரியாக கவனித்துக் கொள்ளாவிட்டால், பல நோய்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கல்லீரல் தொடர்பான நோயை சரியான நேரத்தில் அடையாளம் காண்பதன் மூலம், சிகிச்சை எளிதாகும். இதனால் எதிர்கால பிரச்சினைகள் தவிர்க்கப்படலாம். பிரச்சனையை சரியான நேரத்தில் கண்டறிந்து, கட்டுப்படுத்தப்பட்டால், இது கல்லீரல் ஈரல் அழற்சி போன்ற பல கடுமையான நோய்களையும் உண்டாக்கலாம்.

Add Zee News as a Preferred Source

ஆரோக்கியமற்ற கல்லீரலின் அறிகுறிகள்

1. மஞ்சள் நிற சருமம்

உங்கள் சருமம் மஞ்சள் நிறத்தில் தோன்றத் தொடங்கினால், அது ஆரோக்கியமற்ற கல்லீரலின் அறிகுறியாகக் கருதப்படுகிறது. இருப்பினும் உங்களுக்கு மஞ்சள் காமாலை இருப்பதன் அறிகுறியாகவும் இருக்கலாம்.

2. சருமத்தில் அரிப்பு

சருமம் மஞ்சள் நிறத்தில் ஏற்படும் மாற்றத்தைத் தவிர, நீங்கள் மற்றொரு வகை சரும பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பொதுவாக, கல்லீரல் நோய் காரணமாக சருமத்தில் அரிப்பு ஏற்படலாம்.

3. தூக்கமின்மை

கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை இருக்கும். எப்போதும் சோம்பேறித்தனமும் இருக்கும். எந்த வேலையும் செய்ய விருப்பம் இல்லாமல் இருக்கலாம்.

4. மனநல பிரச்சனை

கல்லீரல் நோய் உடல் ஆரோக்கியத்தை (Health Tips) மட்டுமல்ல, மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும். கல்லீரல்  பாதிப்பு இருந்தால், மனநலப் பிரச்சனைகள் ஏற்படும். ஞாபக மறதி பிரச்சனை உள்ளிட்ட சில பிரச்சனைகள் பொதுவான பிரச்சனையாக கருதப்படுகிறது. 

5. பசியின்மை

கல்லீரல் செயல்பாடு பாதிக்கப்படும்போது, நமது உணவை உடல் ஜீரணிப்பது கடினமாகிவிடும். இதன் காரணமாக உங்களுக்கு பசி குறைய ஆரம்பிக்கும். எனவே பசியின்மை கல்லீரல் பிரச்சனை உள்ளதை உணர்த்தும் அறிகுறியாக இருக்கலாம்.

6. குமட்டல் உணர்வு

கல்லீரல் பலவீனம் செரிமானத்தை பாதிப்பதால், அடிக்கடி, வாந்தி எடுப்பது போல் உணரலாம். குமட்டல் அதிகமாக இருக்கலாம். இந்த நிலையும் கல்லீரல் பிரச்சனையின் அறிகுறியாகும். இதுபோன்ற சூழ்நிலையில் நீங்கள் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

7. இரத்தம் உறைவதில் சிக்கல்

கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் காயமடைந்தால், இரத்தம் உறைவது சீக்கிரம் நிகழாமல், அதிக இரத்த போக்கு உண்டாகலாம். ஏனெனில் கல்லீரல் பலவீனமாக இருந்தால்,  இரத்தம் உறைய வைக்கும் வேலையை அது  சரியாக செய்யாமல் போகலாம்.

8. அதிகப்படியான சோர்வு

நீங்கள் சோர்வாக உணருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம் என்றாலும், கல்லீரல் நோய் இருப்பதற்கான சாத்தியத்தையும் அது உணர்த்துகிறது. கல்லீரல் சரியாக வேலை செய்யாத போது, செரிமானம் சிறப்பாக இல்லாமல், உடலுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்காத போது இது நிகழ்கிறது.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க |  தொடர்ந்த வயிறு வலி – சாதாரணமா? அல்லது எச்சரிக்கையா? மறைந்துள்ள ஆபத்துகள்..

மேலும் படிக்க | தசைகளுக்கு வலிமை தரும் உணவுப் பட்டியலில் வாழைக்காய் முதன்மை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News