நீரிழிவு நோயாளிகளின் கவனத்திற்கு; இந்த மருந்தினால் பிறப்புறுப்பில் தொற்று ஏற்படலாம்
நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்படுத்த பயன்படுத்தும் மருந்துகளால் பக்க விளைவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்
புதுடெல்லி: சர்க்கரை நோய்க்கான மருந்தால் பிறப்புறுப்பில் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக இத்தகைய தொற்று பதிப்புகள் ஏற்கனவே அமெரிக்காவிலும் கனடாவிலும் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இப்போது இந்தியாவில் டைப்-2 நீரிழிவு நோயாளிகளுக்கு இதுபோன்ற தீவிர நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நோய்த்தொற்று உடலின் பிறப்புறுப்புகளிலும் அதைச் சுற்றியும் ஏற்படுகிறது. இது 'ஃபோர்னியர்ஸ் கேங்க்ரீன்' அல்லது 'பெரினியத்தின் நெக்ரோடைசிங் ஃபாசிடிஸ்' என்று அழைக்கப்படுகிறது.
மருந்தில் எச்சரிக்கை அச்சிடப்பட வேண்டும்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நோய்த்தொற்றுக்கு காரணமானதாகக் கருதப்படும், சோடியம் குளுக்கோஸ் கோட்ரான்ஸ்போர்ட்டர் 2 மருந்து பாக்கெட்டுகளில் இது தொடர்பான எச்சரிக்கையை அச்சிடுமாறு அனைத்து மாநில மருந்துக் கட்டுப்பாட்டாளர்களுக்கும் இந்திய மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவிட்டுள்ளது. எஸ்ஜிஎல்டி2 சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட மருந்துகள் கேனகிளிப்ளோசின், டபாகிளிப்ளோசின் மற்றும் எம்பாகிளிப்ளோசின் ஆகியவை ஆகும்.
மேலும் படிக்க | சர்க்கரை கொல்லியாக நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும் சிறுகுறிஞ்சான்!
எஸ்ஜிஎல்டி2 மருந்தின் பங்கு
ஜெர்மனியில் வசிக்கும் மருத்துவர் சதீஷ் ரஞ்சன் இது குறித்து கூறுகையில், 2013 ஆம் ஆண்டு எஸ்ஜிஎல்டி2 மருந்தைப் பயன்படுத்த அமெரிக்க மருந்து முகமை எஃப்டிஏ அனுமதி அளித்ததாகவும், தற்போது, மெட்ஃபோர்மினுக்குப் பிறகு நீரிழிவு நோய்க்கான இரண்டாவது மருந்தாக இது பயன்படுத்தப்படுகிறது எனவும் கூறினார். இதய நோய் மற்றும் சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு இந்த மருந்து வழங்கப்படுகிறது. இரத்த அழுத்தமும் இந்த மருந்தினால் கட்டுப்படுத்தப்படுகிறது.
மருந்து புரதத்தின் அளவை அதிகரிக்கிறது
டாக்டர் சதீஷ் ரஞ்சன் மேலும் கூறுகையில், 'இந்த மருந்து சோடியம்-குளுக்கோஸ் டிரான்ஸ்போர்ட் புரோட்டீனின் அளவை அதிகரிக்கிறது, இதன் காரணமாக சிறுநீரகத்தில் குளுக்கோஸ் மீண்டும் உறிஞ்சப்படாமல் உடலில் இருந்து அதிக குளுக்கோஸ் சிறுநீர் வழியாக வெளியேறுகிறது. இது நீரிழிவு நோயாளிகளின் உடலில் குளுக்கோஸின் அளவைக் குறைக்கிறது.
மேலும் படிக்க | Guava Leaves: எடை இழப்புக்கு உதவும் கொய்யா இலையின் மேஜிக் பானம்
மருந்தின் பக்க விளைவுகள்
சதீஷ் ரஞ்சன் மேலும் கூறுகையில், 'படிப்படியாக இந்த மருந்தில் சில மோசமான பக்க விளைவுகளும் வெளிவருகின்றன, இதனால் சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. எலும்புகள் பலவீனமடையும் ஆபத்துகளும் உள்ளன. இது புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என எச்சரிக்கிறார். ஆனால் எந்த நோயாளிகளுக்கு இந்த பிரச்சனை உள்ளது என்பது பற்றிய தகவல்கள் இன்னும் ஆராயப்படுகின்றன.
சுகாதார அமைச்சகம் அளித்த தகவல்
இந்நிலையில், இந்திய சுகாதார அமைச்சகம் சார்பில் நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட பதிலில், ஹெல்த் கனடா கம்யூனிகேஷன் எஸ்ஜிஎல்டி 2 பாதுகாப்பு தொடர்பான ஆய்வில் குடல் எரிச்சலால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. இருக்கிறது. அதே நேரத்தில், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகமும், மருந்து பாதுகாப்பு தகவல் அறிப்பில் இந்த மருந்தினால் ஏற்படும் தொற்று பாதிப்பி குறித்து எச்சரித்துள்ளது.
இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள்
இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை என இந்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் சர்வதேச நீரிழிவு சம்மேளனத்தின் 10வது பதிப்பான 2021ம் ஆண்டிற்கான நீரிழிவு அட்லஸ் இதழில் வெளியான தகவலில், 20 முதல் 79 வயதுக்குட்பட்ட நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 7.5 கோடி என்றும், இந்த எண்ணிக்கை 2045 ஆம் ஆண்டுக்குள் 12.5 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | மதிய உணவுக்குப் பிறகு இந்த 3 தவறுகளைச் செய்யக்கூடாது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR