முதியவர்களை விட, இளைஞர்கள் தான் மாரடைப்பினால் அதிகம் இறக்கிறார்கள். சமீபத்திய சில சம்பவங்கள், குழந்தைகளை கூட மாரடைப்பு விட்டு வைக்கவில்லை என்பதை காட்டுகிறது. கவலை அளிக்கும் விஷயமாகும்.

இன்றைய பரபரப்பான காலகட்டத்தில், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், அதிகரிக்கும் வேலை சுமைகள் பொறுப்புகள் உள்ளிட்ட பல காரணங்களால், உடல்நலம் புறக்கணிக்கப்பட்டு, உடல் பலவித நோய்களின் கூடாரமாக மாறிவிட்டது. அதிலும் இதய நோய் மற்றும் மாரடைப்பு சம்பவங்கள் முன் எப்போதும் இல்லாத அளவில் அதிகமாக காணப்படுகின்றன. முதியவர்களை விட, இளைஞர்கள் தான் மாரடைப்பினால் அதிகம் இறக்கிறார்கள். சமீபத்திய சில சம்பவங்கள், குழந்தைகளை கூட மாரடைப்பு விட்டு வைக்கவில்லை என்பதை காட்டுகிறது. கவலை அளிக்கும் விஷயமாகும்.
மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படுவதற்கான சில ஆரம்ப கால அறிகுறிகளை அறிந்து கொண்டால், பல உயிர்களை காப்பாற்றலாம். தூக்கமின்மை, மன அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் ஆகியவை படிப்படியாக இதயத்தை பாதித்து, மாரடைப்பு போன்ற கடுமையான விளைவுகளை (Health Tips) ஏற்படுத்துகிறது. இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனிகள், அடைபடும்போது ஆக்ஸிஜன் இதய தசைகளை அடைய முடியாமல் மாரடைப்பு ஏற்படுகிறது.
மாரடைப்பு ஏற்படுவதற்கான சில அறிகுறிகள்
மார்பு பகுதியில் லேசான அல்லது கடுமையான வலி
மார்பு பகுதியில் அழுத்தம் எரிச்சல் அல்லது இருக்கும் ஏற்படுவது போன்ற ஒரு உணர்வு ஏற்படக்கூடும். இந்த உணர்வு கைகள் தாடை முதுகு அல்லது கழுத்துக்கு பரவக்கூடும். இந்த அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதித்து கொள்வது நல்லது.
அளவுக்கு அதிக சோர்வு
காரணம் ஏதும் இல்லாமல் கடுமையான சோர்வு இருப்பது நல்லதல்ல. கொலஸ்ட்ரால் அதிகரிப்பதன் காரணமாக, ரத்த ஓட்டம் தடைபட்டு, உடலுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காத நிலையில், அதீத சோர்வு ஏற்படக்கூடும்.
மூச்சு திணறல்
ஓய்வெடுக்கும் போது கூட சுவாசிப்பதில் சிரமம் இருந்தால் அது இதய பாதிப்பிற்கான அறிகுறியாக இருக்கலாம். இதயத்திற்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காத போது, மூச்சு திணறல் ஏற்படுகிறது.
திடீர் வியர்வை
திடீரென ஏற்படும் வியர்வை, மாரடைப்பு ஏற்படுவதும் எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். இதனைக் கோல்ட் ஸ்வெட் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். அதீத வெப்பம் இல்லாத நிலையிலும், காரணம் இல்லாமல் வியர்த்தால் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
தலைசுற்றல் அல்லது மயக்கம்
ரத்த ஓட்டத்தில் ஏற்படும் அடைப்பு காரணமாக, ஏற்படும் திடீர் தலைசுற்றல் அல்லது மயக்கம், மாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறி.
குமட்டல் அல்லது வாந்தி
சில நேரங்களில், மாரடைப்பு, வயிற்று வலி அல்லது வாந்தி போன்ற அறிகுறிகளுடன் தொடங்கும். இதனைப் பெரும்பாலும் வாயு அல்லது அஜீரணக் கோளாறு என்று நாம் புறக்கணித்து விடுவோம்.
தசை பிடிப்பு
திடீரென ஏற்படும் தசை பிடிப்பு, மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம். குறிப்பாக கால் தசைகளில் ஏற்படும் தசை பிடிப்பு மாரடைப்புக்கு முன்னதாக ஏற்படும் எச்சரிக்கை அறிகுறி.
மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்னால், உடல் காட்டும் சமிக்ஞைகளை அடையாளம் கண்டு, தாமதிக்காமல் உடனடி சிகிச்சையை தொடங்கினால், உயிரிழப்பு ஏற்படாமல் காப்பாற்றலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ