அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!
ஆசிட் ரிஃப்ளக்ஸ் (acid reflux), அதாவது வயிற்றில் உள்ள ஆசிட், உணவுக் குழாய்க்கு மேலே செல்லும்போது, மார்பின் கீழ் பகுதியில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது.
ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் பெப்சின் ஆகியவை செரிமானத்திற்காக வயிற்றில் உற்பத்தியாகின்றன. ஆசிட் ரிஃப்ளக்ஸ் (acid reflux), அதாவது வயிற்றில் உள்ள ஆசிட், உணவுக் குழாய்க்கு மேலே செல்லும்போது, மார்பின் கீழ் பகுதியில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது. இதனால் நெஞ்சு எரிதல், வயிற்றில் எரிச்சல் உணர்வு, வயிற்றுவலி, புளிப்பு ஏப்பம், வாயு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
தவறான உணவுப் பழக்கம் இதற்குக் காரணமாக இருக்கலாம். அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட உணவு பழக்கங்களில் சில மாற்றுதல்கள் செய்வது நல்ல பலன தரும் என்கின்றனர் மருத்துவர்கள்.
அசிடிட்டி ஏற்படுவதற்கான காரணங்கள்
நீண்ட நேரம் பசியுடன் இருப்பது அசிடிட்டிக்கு முக்கிய காரணம். ஜீரணிக்க எதுவும் இல்லாத போது, வயிற்றின் அமிலம் வயிற்றின் உட்புறப் சுவர்களை தாக்கி அதனை மெலியச் செய்கிறது. மேலும் சாப்பிட்ட பிறகு தூங்கவோ, படுக்கவோ கூடாது. சூடான காரமான உணவுகள், வறுத்த உணவுகள், ஜங்க் ஃபுட், மது, டீ-காபி, புகைபிடித்தல், குளிர் பானங்கள் ஆகியவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும். வினிகர், சிட்ரஸ் பழங்கள், தக்காளி, அன்னாசி, திராட்சை, எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள் போன்ற அமிலத்தன்மை கொண்டவை என்று பொருள்படும் குறைந்த pH உள்ள அனைத்து பொருட்களையும் மிகக் குறைந்த அளவிலேயே எடுத்துக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | வெறும் வயிற்றில் ‘இந்த’ உணவுகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு..!!
ஆசிடிட்டியை போக்க உதவும் உணவுகள்
பழம் - வாழைப்பழம் pH ஐ சமன் செய்கிறது. இதில் பொட்டாசியம், கால்சியம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. மேலும், இது உணவுக்குழாய் முதல் வயிற்றில் உள்ள ம்யூகஸ் வரை, ஒரு பூச்சு போல செயல்பட்டு பாதுகாக்கிறது. இதன் காரணமாக அமிலத்தன்மை நீக்கப்படுகிறது. இது தவிர ஆப்பிள், தர்பூசணி, மாதுளை, பப்பாளி போன்றவையும் நன்மை பயக்கும். பழைய அரிசி, கோதுமை, பார்லி,மாதுளை, நெல்லிக்காய், வெள்ளரி, வெள்ளரிக்காய், கீரை, ஆகியவை அமிலத்தன்மையைக் குறைக்கும். இளநீர், மோர் ஆகியவையும் இயற்கையான ஆன்டாக்சிட்கள். அவை உடனடி நிவாரணம் தரும்.
மேலும் படிக்க | மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும் கொலஸ்ட்ரால்; கட்டுப்படுத்துவது எப்படி!
கற்றாழை சாறு- பிரச்சனை அதிகமாக இருந்தால், உணவு உண்பதற்கு முன்பும் பின்பும் நான்கு ஸ்பூன் கற்றாழை சாறு குடிக்கவும். இது அசிடிட்டி பிரச்சனையை குணப்படுத்துகிறது.
நெல்லிக்காய்- வைட்டமின்-சி இதில் அதிக அளவில் உள்ளது. புளிப்பாக இருந்தாலும், அமிலத்தன்மையைக் கட்டுப்படுத்துகிறது. 5-10 கிராம் நெல்லிக்காய் தூளை தினமும் இரண்டு முறை எடுத்துக் கொண்டால் அமிலத்தன்மையை நீங்கும்.
கிராம்பு மற்றும் துளசி இலைகள் - மெதுவாக மென்று சாப்பிடுவது குமட்டல், வாந்தி, அமிலத்தன்மை ஆகியவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
ஆன்டாசிட் மருந்துகளை பழக்கப்படுத்தாதீர்கள், அதிக நேரம் மற்றும் அளவு எடுத்துக்கொண்டால், அவை பக்கவிளைவுகளில் வயிற்றின் ம்யூக்கல்களை மெலிய செய்து புண்களை உண்டாக்குகின்றன.
சரியான நேரத்தில் உணவை உண்ணுங்கள், வயிற்றில் மூன்றில் ஒரு பகுதியை காலியாக வைத்திருங்கள். இருப்பினும், நிவாரணம் பெறவில்லை என்றால், சரியான மருத்துவ ஆலோசனையைப் பெறவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைகளுக்கும் மாற்றானது இல்லை. இது பொதுவான விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது)
மேலும் படிக்க | Weight loss Tips: உடல் எடை குறைய தினசரி பழக்கத்தில் ‘சில’ சிறிய மாற்றங்களே போதும்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR