HDL என்னும் நல்ல கொலஸ்ட்ரால் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அதே நேரத்தில், அதிக அளவில் LDL என்னும்கெட்ட கொல்ஸ்ட்ரால் இருப்பது ஆபத்தை தருகிறது. உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது நரம்புகளில் அடைப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.

இன்றைய காலகட்டத்தில், மாரடைப்பு காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இளையவர்கள் தான் இந்தப் பிரச்சினையை அதிகம் எதிர்கொள்கின்றனர். சாதாரண மாரடைப்பு மட்டுமல்லாது, இப்போது ஸைலண்ட் ஹார் அட்டாக் என்னும் புதிய வகை மாரடைப்பும் மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று கொலஸ்ட்ரால். ஆனால், நல்ல கொலஸ்ட்ரால் கெட்ட கொலஸ்ட்ரால் என இரு வகை உள்ளது.
உடலுக்கு நல்ல கொலஸ்ட்ரால் அவசியம்
கொலஸ்ட்ரால் உடலின் ஒரு முக்கிய அங்கம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். நமது உடலே கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்கிறது. கொலஸ்ட்ரால் எல்லாமே கெட்டது அல்ல. HDL என்னும் நல்ல கொலஸ்ட்ரால் உடல் ஆரோக்கியத்திற்கு (Health Tips) தேவையான அதே நேரத்தில், அதிக அளவில் LDL என்னும்கெட்ட கொல்ஸ்ட்ரால் இருப்பது ஆபத்தை தருகிறது. உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது நரம்புகளில் அடைப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இதனால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்தும் அதிகரிக்கும்.
கெட்ட கொலஸ்ட்ரால் குறைக்க உதவும் சமையல் எண்ணெய்கள்
இதயம் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கவும், கெட்ட கொலஸ்ட்ரால் குறைக்கவும் உதவும் எண்ணெய்களை பயன்படுத்த வேண்டும். எனினும் அவையும் அளவிற்கு மிஞ்சாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு, உணவில் பயன்படுத்தப்படும் எண்ணெயில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். உடலில் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் ஆரோக்கியமான சமையல் எண்ணெய்கள் பற்றி மருத்துவர் கூறும் ஆலோசனைகள் இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
திடக் கொழுப்பை விட திரவக் கொழுப்பு சிறந்தது
கொலஸ்ட்ரால் அளவுக்கு அதிகமாக இல்லாவிட்டால், எந்த பிரச்சனையும் இல்லை. உடலே கொழுப்பை உற்பத்தி செய்து உட்கொள்கிறது. கொழுப்பின் அளவை பராமரிக்க, உங்கள் உணவை மாற்றலாம். உடலுக்கு எண்ணெய் சத்தும் அவசியம், எனினும் அவையும் அளவிற்கு மிஞ்சாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, உணவில் பயன்படுத்தப்படும் எண்ணெயில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் கெட்ட கொலஸ்ட்ரால் தமனி அடைப்பை ஏற்படுத்துகிறது. இது இரத்த ஓட்டத்தைக் தடுத்து இது மாரடைப்பு அல்லது பக்கவாதத்திற்கு வழிவகுக்கும். திடக் கொழுப்பை விட திரவக் கொழுப்பு சிறந்தது. ஏனெனில் திரவத்தில் ஒற்றை நிறைவுற்ற கொழுப்பும், திடப்பொருளில் பல் நிறைவுற்ற கொழுப்பும் உள்ளன.
நல்லலெண்ணெய் (Sesame Oil)
எள்ளில் இருந்து எடுக்கப்படும் நல்லலெண்ணெய் இதயத்திற்கு இதமானது . நல்லெண்ணெயில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் நிறைவுறாத கொழுப்புகள், பாலிஅன்சாச்சுரேட்டட் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன. 1 டீஸ்பூன் நல்லெண்ணெயில் 5 கிராமுக்கும் அதிகமாக மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு, 2 கிராம் நல்ல கொழுப்பு உள்ளதாக உணவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்
தேங்காய் எண்ணெய் (Coconut Oil)
தென்னிந்திய சமையலில் தேங்காய் எண்ணெய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெயில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றல் உள்ளதோடு, அல்சைமர் போன்ற மூளை - நினைவாற்றல் தொடர்பான பிரச்சனைகள் போக்கவும் உதவுகிறது. முதௌமை தடுக்கும் ஆற்றல் கொண்ட தேங்காய் எண்ணெய் கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் வியக்கத்தக்க நன்மை அளிக்கும்.
கடலை எண்ணெய் (Groundnut Oil)
ஏழைகளின் பாதாம் என அழைக்கப்படும் வேர்கடலையில் இருந்து பெறப்படும் கடலை எண்ணெய் மிகவும் நல்லது. இந்த எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்தலாம். கடலை எண்ணெய் ஹெச்டிஎல் என்னும் நல்ல கொழுப்பை அதிகரிக்கவும், எல்டிஎல் என்னும் கெட்ட கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது. கடலை எண்ணெய் இதயத்திற்கும் நல்லது என்று கருதப்படுகிறது. வறுக்கவும் பயன்படுத்தலாம்.
கடுகு எண்ணெய் (Mustard Oil)
வட இந்திய உணவு வகைளில் அதிகம் பயன்படுத்தப்படும் கடுகு எண்ணெயில் ஆரோக்கியமான கொழுப்புகளான, மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. இவை இரண்டுமே இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடியவை. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. கடுகு எண்ணெய் இதயத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
ஆலிவ் எண்ணெய் (Olive Oil)
ஆரோக்கியமான எண்ணெயாகக் கருதப்படும் ஆலிவ் எண்ணெயில் இருப்பது நல்ல கொலஸ்ட்ரால். இதில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. எனினும் ஆலிவ் எண்ணெய், பச்சையாக பயன்படுத்துவதற்கும் குறைந்த தீயில் சமைப்பதற்கு மட்டுமே ஏற்றது. சாலட் செய்வதற்கு இதைப் பயன்படுத்தலாம். சூடுபடுத்துவதால் இதில் உள்ள சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ