உடல் ஆரோக்கியம் சிறக்க.... டீ, காபிக்கு பதிலாக இவற்றை குடித்து பாருங்கள்

Healthy Alternatives For Tea, Coffee: தேநீர் மற்றும் காபிக்கு பதிலாக, சில மாற்று பானங்களை உட்கொள்ளலாம். இவை நம் உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியை அளிப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பிற ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கின்றன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 8, 2025, 06:14 PM IST
  • கிரீன் டீயை தினசரி உணவுமுறையில் சேர்ப்பது அன்றாட வாழ்வில் ஆரோக்கியத்தை உறுதி செய்யும்.
  • இது உடலுக்கு ஆண்டிஆக்சிடெண்டுகளை வழங்குகிறது.
  • இந்த தேநீர் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை பலப்படுத்துவதோடு எடை குறைப்பிற்கும் உதவுகிறது.
உடல் ஆரோக்கியம் சிறக்க.... டீ, காபிக்கு பதிலாக இவற்றை குடித்து பாருங்கள்

Healthy Drinks For Winter: குளிர்காலத்தில் நாம் பெரும்பாலும் அதிகமாக தேநீர் மற்றும் காபி உட்கொள்கிறோம். ஆனால் இந்த பானங்களை அதிகமாக குடிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது பலருக்குத் தெரிவதில்லை. நாம் நம் வீட்டில் தயாரிக்கும் தேநீர் பால், தேயிலை இலைகள் மற்றும் சர்க்கரை ஆகியவற்றின் உதவியுடன் தயாரிக்கப்படுகிறது. அவற்றை அதிகமாக உட்கொள்வது செரிமான சக்தியை பலவீனப்படுத்துவதோடு, உடலில் ஊட்டச்சத்து குறைபாட்டையும் ஏற்படுத்தும். 

Add Zee News as a Preferred Source

ஆகையால், தேநீர் மற்றும் காபிக்கு பதிலாக, சில மாற்று பானங்களை உட்கொள்ளலாம். இவை நம் உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியை அளிப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பிற ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கின்றன. உடலுக்கு நன்மை பயக்கும் ஆரோக்கியமான மூலிகை தேநீர் வகைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Tulsi Tea: துளசி தேநீர்

பால் மற்றும் சர்க்கரை கலந்த தேநீருக்குப் பதிலாக, துளசி தேநீர் அருந்தலாம். துளசியில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதை தயார் செய்வது மிகவும் எளிது. துளசி தேநீர் குடிப்பது நுரையீரலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

Ginger Tea: இஞ்சி தேநீர்

உடலில் ஏற்படும் பொதுவான காய்ச்சல், இருமல், சளி மற்றும் வீக்கத்திலிருந்து நிவாரணம் பெற இஞ்சி டீயை உட்கொள்ள வேண்டும். இஞ்சி தேநீர் தயாரிக்க, அரை அங்குல இஞ்சியை நசுக்கி, 1 கப் தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதை வடிகட்டி குடிக்கலாம்.

Turmeric Tea: மஞ்சள் தேநீர்

குளிர்காலத்தில் மஞ்சள் கட்டி போட்டு தேநீர் குடிப்பது, மஞ்சள் தூள் தேநீர் குடிப்பதை விட மிகவும் சிறந்தது. பச்சை மஞ்சள் தேநீர் குடிப்பது உடலை பல நோய்களிலிருந்து காக்கின்றது. இது ஒரு பாக்டீரியா எதிர்ப்பு தேநீர் ஆகும். இது தொற்றுநோய்களிலிருந்து நம்மை காக்கின்றது.

Green Tea: பச்சை தேநீர்

கிரீன் டீயை தினசரி உணவுமுறையில் சேர்ப்பது அன்றாட வாழ்வில் ஆரோக்கியத்தை உறுதி செய்யும். இது உடலுக்கு ஆண்டிஆக்சிடெண்டுகளை வழங்குகிறது. இந்த தேநீர் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை பலப்படுத்துவதோடு எடை குறைப்பிற்கும் உதவுகிறது.

Apple Tea: ஆப்பிள் டீ

ஆப்பிள் டீ குடிப்பதால் கொலஸ்ட்ரால் குறையும். ஆப்பிள் டீ குடிப்பதால் உடலுக்கு நார்ச்சத்து மற்றும் ஆண்டி-ஆக்சிடெண்டுகள் கிடைக்கின்றன. இந்த தேநீர் குடிப்பதால் எடை இழப்பும் ஏற்படுகிறது. ஆப்பிள் டீ தயாரிக்க, 1 ஆப்பிளை வெட்டி தண்ணீரில் போட்டு, இலவங்கப்பட்டை தூள், கிராம்பு, எலுமிச்சை சாறு மற்றும் தேநீர் பை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

Fenugreek Tea: வெந்தய தேநீர்

குளிர்காலத்தில் ஏற்படும் வயிற்றுப் பிரச்சினைகளில் இருந்து காக்க வெந்தய டீ குடிப்பது நிவாரணம் அளிக்கிறது. இது செரிமானத்தை மேம்படுத்தவும், உடலை உள்ளிருந்து சூடாக வைத்திருக்கவும் உதவுகிறது. சோம்பல் மற்றும் அதிக தூக்கத்தால் அவதிப்படுபவர்களுக்கு இந்த தேநீர் நன்மை பயக்கும்.

Lemongrass Tea: லெமங்கிராஸ் தேநீர்

இந்த தேநீர் குடிப்பது பதட்டம், மனச்சோர்வு முதல் தூக்கமின்மை வரையிலான பிரச்சினைகளைப் போக்க உதவுகிறது. குளிர்காலத்தில் இந்த தேநீர் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதைச் செய்ய, நீங்கள் புதிய லெமன்கிராஸ் இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து பின்னர் குடிக்க வேண்டும். இந்த தேநீர் செரிமானத்தையும் பலப்படுத்துகிறது.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மன அழுத்தம் முதல் கொலஸ்ட்ரால் வரை... ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்த பிரிஞ்சி இலை கை கொடுக்கும்

மேலும் படிக்க | புகைபிடிக்காதவர்களுக்கும் வரும் நுரையீரல் புற்றுநோய்... முக்கிய எச்சரிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News