கொழுப்புச்சத்து பொதுவாக உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் வில்லனாக கருதப்படுகிறது. ஆனால் எல்லா கொழுப்புகளும், உடலுக்கு தீமை தரக்கூடியவை அல்ல. சில கொழுப்புகள் மிகவும் ஆரோக்கியமானவை. இதயம் ஆரோக்கியம் முதல் மூளை ஆரோக்கியம், சருமத்தை இளமையாக பராமரித்தல், வளர்ச்சி, ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் உடலின் திறன் மேம்படுதல், போன்றவற்றுக்கு நல்ல கொழுப்புகள் பெரிதும் உதவுகின்றன.
ஆரோக்கிய கொழுப்புகள் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள்
கொழுப்புகளில் நிறைவுறா கொழுப்புகள், மோனோசர் கொழுப்புகள் ஆகியவை உடல் ஆரோக்கியத்திற்கு தேவையானவை. அதேபோன்று ஒமேகாத்திரி கொழுப்பு அமிலங்களும், உடலுக்கு எண்ணற்ற வகையில் நன்மை பயக்கும். ஆனால், நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் உடல் ஆரோக்கியத்தை (Health Tips) பாதிக்க கூடியவை.
ஆரோக்கிய கொழுப்புகள் உடலுக்கு ஏன் அவசியம்?
மூளை முதல் இதயம் வரை உடலில் அனைத்தும் ஃபிட்டாக இருக்க ஆரோக்கிய கொழுப்புகள் மிக அவசியம்.
மூளை ஆரோக்கியம்
மூளை மற்றும் நரம்புகள் ஆரோக்கியமாக இருக்க, ஆரோக்கியமான கொழுப்புகள் மிக அவசியம். அதிலும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், மூளையின் செயல்பாட்டிற்கு மிகவும் அத்தியாவசியம். அவை நினைவாற்றல் கவனம் செலுத்தும் திறன் ஆகியவற்றை மேம்படுத்த உதவுகின்றன.
இதய ஆரோக்கியம்
ரத்த நாளங்களில் நல்ல கொழுப்பின் அளவு அதிகரிக்கும் போது, மாரடைப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம் இதய நோய் போன்ற அபாயம் பெருமளவு குறையும். எனவே நிறைவுற்ற கொழுப்பை குறைத்து, நிறைவுறா கொழுப்புகளையும், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகளையும், டயட்டில் தினம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கண் ஆரோக்கியம்
இன்றைய தினத்தில் மொபைல் போன் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. அதோடு, கணினி சார்ந்த வேலைகள் அதிகமாக உள்ள நிலையில், கண் தொடர்பான பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மிக முக்கியம். இவை முதுமை காரணமாக ஏற்படும் கண் பாதிப்புகளையும் தடுக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
நோய் எதிர்ப்பு சக்தி சிறப்பாக இருக்கு ஆரோக்கியமான கொழுப்புகள் மிக அவசியம். உடல் முழுவதும் உள்ள செல் சவ்வுகள் ஒருங்கிணைந்து வேலை செய்ய ஆரோக்கிய கொழுப்புகள் உதவி புரிகின்றன.
நிறைவுறா கொழுப்புகள் நிறைந்த உணவுகள்
தேங்காய் எண்ணெய் நல்லெண்ணெய், நட்ஸ் மற்றும் விதைகள் நிறைவுறா கொழுப்புகள் நிறைந்துள்ளது.
மோனோசேச்சுரேடட் கொழுப்புகள்
ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய் பாதாம் வேர்க்கடலை போன்ற உணவுகளில் மோனோ சாட்சுலேட்டட் கொழுப்புகள் அதிகம் உள்ளன.
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்
அதிக கொழுப்புள்ள கடல் உணவுகள், சியா விதைகள், ஆளி விதைகள், பாதாம், வாதுமை பருப்பு ஆகியவற்றை ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், மருத்துவரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | இரத்ததானத்திற்கு பின் உண்ண வேண்டிய சத்தான உணவுகள்!
மேலும் படிக்க | பிபி - சுகர் இரண்டும் கட்டுக்குள் இருக்க... காலையில் சாப்பிட வேண்டிய சூப்பர் உணவுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ