மாரடைப்பை தடுக்கவும்... உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கவும்... உதவும் சில பழக்கங்கள்

இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மோசமான உணவுப் பழக்கம் ஆகியவை காரணமாக ஏற்படும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்று உயர் ரத்த அழுத்தம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 23, 2025, 07:40 PM IST
  • இளைஞர்கள் அதிக அளவில் மாரடைப்பால் இறப்பதை கேள்விப்படுகிறோம்.
  • உயர் இரத்த அழுத்தம், மாரடைப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது.
  • சிறுநீரக பாதிப்பு போன்ற கடுமையான பிரச்சனைகளையும் ஹை பிபி ஏற்படுத்துகிறது.
மாரடைப்பை தடுக்கவும்... உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கவும்... உதவும் சில பழக்கங்கள்

இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மோசமான உணவுப் பழக்கம் ஆகியவை காரணமாக ஏற்படும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்று உயர் ரத்த அழுத்தம். ஹை பிபி என்னும் உயர் இரத்த அழுத்தம், மாரடைப்புக்கு முக்கிய காரணமாக இருப்பதோடு, சிறுநீரக பாதிப்பு போன்ற கடுமையான பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது. 

முதுமையில் இருப்பவர்கள் மட்டுமல்லாது, இளைஞர்களும் இன்றைய காலகட்டத்தில் அதிக அளவில், உயர் ரத்த அழுத்த பிரச்சனைக்கு ஆளாகின்றனர் என்பது வருந்தத்தக்க விஷயமாகும். சமீப காலங்களாக, இளைஞர்கள் அதிக அளவில் மாரடைப்பால் இறப்பதை கேள்விப்படுகிறோம். இதற்கு முக்கிய காரணம் உயர் ரத்த அழுத்தமும், மன அழுத்தமும் தான். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால், கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு அதிகரிப்பதால், மாரடைப்பு ஏற்படும் அபாயம் பன்மடங்கு அதிகரிக்கிறது.

உயர் ரத்த அழுத்தம் என்றால் என்ன

பொதுவாக ஆரோக்கியமான ஒருவருக்கு, இரத்த அழுத்தம் என்பது 120/ 80 மி.மீட்டர் பாதரச அளவு இருந்தால், இயல்பான அளவாக கருதப்படுகிறது. இதில் 120 என்ற எண் நமது இதயம் சுருங்கி ரத்தத்தை உடலுக்கு தள்ளும் போது ஏற்படும் அழுத்தத்தின் அளவு. 80 என்பது, ரத்தத்தை வெளியேற்றிய பிறகு, இதயம் விரிந்து, இரத்தத்தைப் பெற்றுக் கொள்ளும் போது ஏற்படும் அழுத்தத்தின் அளவு. இரத்த அழுத்தம் 140/90 மில்லி மீட்டருக்கு மேல் இருந்தால் அது உயர் ரத்த அழுத்தம் என்று கூறப்படுகிறது. உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள், ரத்த அழுத்த அளவை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும்.

உயர் ரத்த அழுத்த பிரச்சனையை கட்டுக்குள் வைத்திருக்க கடைபிடிக்க வேண்டிய உணவுகளும் பழக்கங்களும்.

1. உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க, சமச்சீரான உணவை உண்ண வேண்டும். ஊட்டச்சத்து மிக்க காயங்கள் பழங்கள் தவறாமல் டயட்டில் இடம் பெற வேண்டும். அதோடு துரித உணவுகள், பொறித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு நோ சொல்வது நல்லது.

2. பொட்டாசியம் சத்து நிறைந்த உணவுகளை தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்வதால், ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கலாம். இதயத்துடிப்பை சீராக்கவும் பொட்டாசியம் அவசியம். வாழைப்பழம், கொய்யா ஆரஞ்சு போன்ற பழங்களும், உருளைக்கிழங்கு தக்காளி போன்ற காய்கறிகளும், பீன்ஸ் பருப்பு வகைகளும், மீன் போன்ற உணவுகளும், பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகளில் சில.

3. மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவது, உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்த வைக்க மிக அவசியம். எனவே, ஆரோக்கியமான உணவு பழக்கத்துடன் கூடவே, உடற்பயிற்சி தவறாமல் மேற்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உதவுவதோடு, மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் உடற்பயிற்சிகள் மற்றும் நடை பயிற்சிகள், உடலில் உள்ள ஹாப்பி ஹார்மோன்களை தூண்டி, நமக்கு நல்ல உணர்வை கொடுக்கின்றன.

4. உடற்பயிற்சியுடன், தியானம் மற்றும் யோகா ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடிப்பதும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். ஏனெனில் இவை மனதிற்கு அமைதி அளித்து, மன அழுத்தத்தையும் கவலையையும் விரட்ட உதவுகின்றன.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | கெட்ட கொலஸ்ட்ராலை விரட்டி அடிக்கும் 7 டாப் உணவுகள்: கொழுப்புக்கு குட் பை

மேலும் படிக்க | நாற்பதிலிருந்து 20 வயதிற்கு இளமையை மீட்க விரும்புகிறீர்களா? இந்த உணவை மறக்காதீர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News