)
மூட்டு வலி மற்றும் முழங்கால் வலி என்பது, முதியவர்கள் முதல் இளையவர்கள் வரை அனைவரும் அனுபவிக்கும் ஒரு பிரச்சனையாக மாறிவிட்டது. இதற்கு மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வது ஓரளவுக்கு நிவாரணம் தரும் என்றாலும், உணவு முறை மூலம் தீர்வு காண்பது இயற்கையான தீர்வாக அமையும். இதன் மூலம் எலும்புகள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நிரந்திரமான தீர்வையும் பெறலாம். முழங்கால் வலியை அலட்சியப்படுத்துவது சரியல்ல. ஏனெனில் இது இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் அளவு பிரச்சனையை கொடுக்கக்கூடியது. படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது மிகவும் சிரமத்தை கொடுப்பதாக இருக்கும். பிரச்சனை தீவிரமானால் நடப்பது கூட கடினமாகலாம்.
மூட்டு வலி முழங்கால் வலி ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்
மூட்டு வலி அல்லது முழங்கால் வலி ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று ஊட்டச்சத்து குறைபாடு. அதோடு முழங்கால்களில் ஏற்படும் குருத்தெலும்பு வளர்ச்சியும், மூட்டுகள் தேய்மான பிரச்சனையும், முழங்கால்களில் மற்றும் மூட்டுகளில் எண்ணெய் பசை மிகவும் குறைந்து வறட்சி மற்றும் இறுக்கம் ஏற்படுவதும் முக்கிய (Health Tips) காரணங்களாக உள்ளன.
முழங்கால்களில் எண்ணெய் பசை குறைவாக இருப்பதற்கான அறிகுறிகள்
முழங்கால்களில் எண்ணெய் பசை குறையாமல் இருந்தால் அதன் இயக்கம் எளிதாக இருக்கும். இல்லை என்றால் உட்கார்ந்து எழுவதில் சிரமம், நிற்கும் போது முழங்காலில் கடுமையான வலி ஆகியவை ஏற்படலாம். முழங்கால்களில் ஏற்படும் வீக்கம் அல்லது முழங்கால்கள் சிவந்து போவது. எண்ணெய் பசை மிக குறைவாக இருப்பதற்கான அறிகுறிகள். பிரச்சினையை தீர்க்க மருத்துவரை கலந்தாலோசிப்பது அவசியம். அதோடு சில உணவுகளை கண்டிப்பாக டயட்டில் சேர்த்துக் கொள்வது பலன் தரும்.
மூட்டு முழங்கால்களில் எண்ணெய் பசை குறையாமல் இருக்க டயட்டில் சேர்த்து கொள்ள வேண்டிய சில உணவுகள்
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்
பாதாம் பருப்பு, வாதுமை பருப்பு உள்ளிட்ட நட்ஸ் வகைகள், மீன் உணவுகள் குறிப்பாக கடல் மீன்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்தவை. இவை முழங்கால்களில் எண்ணெய் பசையை கொடுத்து அதன் இயக்கத்தை எளிதாக்குகிறது. அதேபோன்று தேங்காய் எண்ணெயையும் தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை கூடுதலாக நரம்புகளுக்கும் பலிவூட்டுகிறது.
வைட்டமின் டி நிறைந்த உணவுகள்
வைட்டமின் டி பெற சூரிய ஒளி மிக எளிதான மற்றும் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய ஒரு எளிய வழிமுறை. தினமும் அரை மணி நேரம் உடலில் சூரிய ஒளி படும்படி பார்த்துக் கொள்வது நல்லது. அது தவிர உணவின் மூலம் வைட்டமின் டி யை பெற பால் மீன், முட்டை ஆகியவற்றை தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இளநீர்
எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்த இளநீர் அல்லது தேங்காய் நீர், உடலுக்கு ஆற்றலை அள்ளிக் கொடுக்கும் அதே வேலையில், முழங்கால்களில் ஏற்படும் வறட்சியை போக்க உதவும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ