Diabetes Control Tips: நமது சமையலறையில் இருக்கும் சில எளிதான மற்றும் நாம் தினமும் பயன்படுத்தும் உணவுப்பொருட்களே சர்க்கரை அளவை குறைக்க உதவுவதாக ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Healthy Foods for Diabetes Control: நீரிழிவு நோய் உலகம் முழுதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காத உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டியது மிக அவசியமாகும்.
நாம் சாப்பிடும் உணவுகளும் உட்கொள்ளும் பானங்களும் நமது உடலின் இரத்த சர்க்கரை அளவை நேரடியாக பாதிக்கின்றன. ஆகையால், உணவில் சிறப்பு கவனம் செலுத்துவது மிக முக்கியம். நமது சமையலறையில் இருக்கும் சில எளிதான மற்றும் நாம் தினமும் பயன்படுத்தும் உணவுப்பொருட்களே சர்க்கரை அளவை குறைக்க உதவுவதாக ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகிறார்கள். இவை இரத்த சர்க்கரையைக் குறைப்பது மட்டுமல்லாமல், நாள் முழுவதும் சோர்வு மற்றும் பசியையும் கட்டுப்படுத்துகின்றன. இந்த பொருட்களை தினசரி உணவுகளில் சேர்ப்பது நன்மை தரும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவுகள்
Amla: நெல்லிக்காய்
சோர்வான உணர்வு இருந்தாலோ, அல்லது இரத்த சர்க்கரை மீண்டும் மீண்டும் அதிகமாகினாலோ, உணவில் நெல்லிக்காயை சேர்க்கலாம் என்று ஆயுர்வேத நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது உடலுக்கு புத்துணர்ச்சியை அளிப்பதோடு சர்க்கரை அளவையும் குறைக்கிறது. இதை அப்படியே பழமாகவோ அல்லது அதன் சாறு அல்லது பொடியையோ உட்கொள்ளலாம். நெல்லிக்காய் சாப்பிடுவது ஆற்றலைப் பராமரிப்பது மட்டுமல்லாமல் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும்.
Moong Dal: பாசிப்பருப்பு
நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலும் அதிக பசியை உணர்கிறார்கள். அவர்களுக்கு அவ்வப்போது சாப்பிட வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகின்றது. பாசிப்பருப்பு இந்தப் பிரச்சினைக்கு எளிதான மற்றும் ஆரோக்கியமான தீர்வாகும். இது இலகுவானதாக இருப்பதால், விரைவாக ஜீரணமாகும். உடலுக்கு அத்தியாவசிய புரதத்தையும் இது வழங்குகிறது. பாசிப் பருப்பு இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது, மேலும், இது அடிக்கடி ஏற்படும் பசியையும் கட்டுப்படுத்துகிறது.
Curry Leaves: கறிவேப்பிலை
பெரும்பாலும் நாம் கறிவேப்பிலையை சுவையூட்டுவதற்கு மட்டுமே பயன்படுத்துகிறோம், ஆனால் அதன் நன்மைகள் மிக அதிகம் என்பது பலருக்குத் தெரிவதில்லை. கறிவேப்பிலை உடலில் சர்க்கரை அளவைக் குறைக்கவும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இதை பல்வேறு உணவு வகைகளில் சேர்க்கலாம், அல்லது மூலிகை தேநீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். இதில் அதிக சுவை இல்லை என்றாலும், இதில் பல அரோக்கிய நன்மைகள் உள்ளன.
Moringa: முருங்கை
முருங்கை ஆயுர்வேதத்தில் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. நீரிழிவு நோய்க்கு இது ஒரு சூப்பர்ஃபுட் ஆக இருக்கும். இது உடலில் இன்சுலின் ரெசிஸ்டன்சை மேம்படுத்துகிறது, இதன் காரணமாக இரத்த சர்க்கரை அளவு தானாகவே கட்டுக்குள் இருக்கும். முருங்கைக்காய், முருங்கை கீரை என அனைத்திலும் ஊட்டச்சத்து அதிகமாக உள்ளது.
Jamun: நாவல் பழம்
நீரிழிவு நோயாளிகளுக்கு இனிப்புகள் மீது அதிக ஏக்கம் இருந்தால், நாவல் பழம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். நாவல் பழம் சுவையானதாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தவும் உதவுகிறது. இது பருவகால பழமாக இருந்தாலும், நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக இதை தங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
Jowar: சோளம்
கோதுமையிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் சில நேரங்களில் நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். சுகர் நோயாளிகளுக்கு சோளம் ஒரு நல்ல மாற்றாக கருதப்படுகின்றது. இது பசையம் இல்லாதது, இரத்த சர்க்கரையை நிலையாக வைத்திருக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் சுவையான, எளிய வழியில் செய்யக்கூடிய சோள ரொட்டி செய்து சாப்பிடலாம். இதை தினசரி உணவில் சேர்ப்பதால் சர்க்கரை அளவு எளிதாக கட்டுக்குள் இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ