)
நமது உடலில் செரிமானம் சிறப்பாக இருந்தாலே, உச்சி முதல் பாதம் வரை பலவிதமான நோய்களைத் தவிர்த்து விடலாம். எனவே செரிமான பிரச்சனை தானே என்று அலட்சியமாக இருப்பது நல்லதல்ல. இது ஊட்டச்சத்து குறைபாடு முதல், மூளை இதயம் ஆரோக்கியம் வரை பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். செரிமான பிரச்சனைகளில், வயிற்று உப்புசம் அசிடிட்டி, நெஞ்செரிச்சல் ஆகியவை பொதுவான பிரச்சனைகளாக உள்ளது.
செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதற்கான சில பொதுவான காரணங்கள்
உணவு சரியாக ஜீரணம் ஆகவில்லை என்றால், அல்லது சரியான நேரத்தில் உணவு சாப்பிடவில்லை என்றால், ஆசிடிட்டி, வாயு, வயிற்று உப்புசம் உள்ளிட்ட செரிமான பிரச்சனைகள் ஏற்படும். சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பதும், அவசரம் அவசரமாக சாப்பிடுவதும், குடல் ஆரோக்கியத்தை (Health Tips) பெருமளவு பாதிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய சில ஆரோக்கியமான பழக்கங்கள்
உணவை நிதானமாக நன்றாக மென்று சாப்பிடும் பழக்கம்
உணவை நன்றாக மென்று சாப்பிடுவதன் மூலம், உமிழ்நீர் நன்றாக சுரந்து, செரிமானம் சிறப்பாக நடைபெறும். அவசரம் அவசரமாக சாப்பிடுவது மிகவும் தவறு. நிதானமாக சாப்பிடுவதால், செரிமானம் சிறப்பாக இருப்பதோடு, உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை முழுமையாக பெறலாம்.
தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கும் பழக்கம்
செரிமானம் சிறப்பாக இருக்க, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால், உடலில் இருந்து கூடுதலாக உள்ள சோடியம் வெளியேற்றப்பட்டு, உடலில் நீர் தேங்காமல் இருக்கும். இந்த நாள் குடல் இயக்கம் சிறப்பாக இருக்கும்.
நேரம் தவறாமல் உண்ணும் பழக்கம்
தினமும் உங்கள் டயட்டை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வது அவசியம். உங்களுக்கு பசி எடுக்கும் போது தான் சாப்பிட வேண்டும். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது சாப்பிடுவது என்பது சரியல்ல. தினமும் ஒரே நேரத்தில் சாப்பிடும் பழக்கத்தை கடைபிடிப்பது, செரிமான ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உதவும்.
டயட்டில் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை கட்டாயம் சேர்த்தல்
டயட்டில் எப்போதும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் கட்டாயம் இருக்க வேண்டும். இவை கொழுப்பை எரித்து, உடல் பருமனை குறைக்க உதவுவதோடு, செரிமானத்தை மேம்படுத்தி, குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
உணவு உண்ட பின் சிறிது நேரம் நடை பயிற்சி செய்தல்
சாப்பிட்டபின், சிறிது நேரம் நடப்பது, செரிமானம் சிறப்பாக இருக்க உதவும். உடலில் ரத்த ஓட்டம் மேம்பட்டு, உடலும் மனதும் புத்துணர்ச்சி பெறும். சிறிது நேரம் நடப்பதால், உடல் உள்ள கூடுதல் வாயு வெளியேறும். 10 நிமிடம் மென்மையான அசைவுகள் கூட, சாப்பிட்ட பின் ஏற்படும் கனமான உணர்வை குறைக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
குளிர்பானங்களை தவிர்த்தல்
சோடியம் மற்றும் சர்க்கரை அதிகமாக உள்ள சோடா சேர்த்த குளிர் பானங்கள் செரிமானத்தின் எதிரி. இவை உடலில் நீரை தக்க வைத்து, வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தலாம். அதோடு இவற்றில், ஊட்டச்சத்து என்பது மருந்துக்கும் இல்லை. இதனை குடிப்பதால் எந்தவித பயனும் இல்லை.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், மருத்துவரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ