மூட்டு வலிக்கு குட்பை சொல்ல... நீங்கள் செய்ய வேண்டியவையும் செய்யக்கூடாதவையும்

மழைக்காலத்திலும் குளிர் காலத்திலும், கீல்வாதம் முடக்குவாதம் போன்ற அழற்சி நிலைகள் தீவிரம் அடைவதால், மூட்டு வலி அதிகரிக்கிறது. இந்நிலையில்,மூட்டு வலிக்கு முடிவு கட்ட நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில பழக்கங்களை அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 13, 2025, 12:56 PM IST
  • கீல்வாதம் முடக்குவாதம் போன்ற அழற்சி நிலைகள் தீவிரம் அடைவதால், மூட்டு வலி அதிகரிக்கிறது.
  • மூட்டு வலிக்கு முடிவு கட்ட நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில பழக்கங்கள்.
  • மழைக்காலம் மற்றும் குளிர் காலத்தில் மட்டுமல்ல எல்லா காலத்திற்கும் பொருந்தக்கூடிய ஒன்று.
மூட்டு வலிக்கு குட்பை சொல்ல... நீங்கள் செய்ய வேண்டியவையும் செய்யக்கூடாதவையும்

இன்றைய மோசமான உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக, இளைஞர்களுக்கு கூட மூட்டு வலி பிரச்சனைகள் இருப்பதை காண முடிகிறது. பொதுவாக மூட்டு வலி பிரச்சனைகள் மழைக்காலத்திலும் குளிர் காலத்திலும் அதிகரிக்கும். குளிரான காலநிலையில் மூட்டுகளில் வீக்கம் அல்லது விறைப்பு ஏற்படுவது இதற்கு முக்கிய காரணம்.

Add Zee News as a Preferred Source

மழைக்காலத்திலும் குளிர் காலத்திலும், கீல்வாதம் முடக்குவாதம் போன்ற அழற்சி நிலைகள் தீவிரம் அடைவதால், மூட்டு வலி அதிகரிக்கிறது. காற்றில் உள்ள ஈரப்பதம் மூட்டுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நரம்புகள் மற்றும் தசைகளை பாதித்து வலியை அதிகரிக்கிறது. இந்நிலையில், மூட்டு வலிக்கு முடிவு கட்ட நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில பழக்கங்களை (Health Tips) அறிந்து கொள்ளலாம்.

தினமும் மேற்கொள்ள வேண்டிய உடற்பயிற்சி மற்றும் மூட்டுகளுக்கான பயிற்சிகள்

உடற்பயிற்சி மற்றும் நடை பயிற்சியை தவறாமல் மேற்கொள்வதால், மூட்டு வலியை பெருமளவு குறைக்கலாம். உங்களுடைய உடல் நிலையை பொறுத்து, மருத்துவர் பரிந்துரைத்த படி, உடற்பயிற்சிகள், மூட்டு மற்றும் தசைகளுக்கான நீட்சி பயிற்சிகள், நடைபயிற்சிகள் ஆகியவற்றை விடாமல் தொடர்வதால், மூட்டுகளில் ஏற்படும் விறைப்பு மற்றும் வீக்கத்தை பெருமளவு குறைக்கலாம்.

மூட்டுகளுக்கு இதமளிக்கும் வகையில் ஆடை அணிதல்

குளிர் மற்றும் ஈரப்பதம் மூட்டுகளை பாதிக்காத வண்ணம் ஆடைகளை அணிவது வேண்டும். மூட்டு பகுதிகளை கதகதப்பாக வைத்திருக்கும் வகையிலான பிரத்தியேக பொருட்கள் பல சந்தைகளில் கிடைக்கின்றன. இவை வீக்கத்தையும் அழற்சியையும் கட்டுப்படுத்த உதவும்.

ஆரோக்கியமான உடல் எடையை பராமரித்தல்

மூட்டு வலி அதிகரிப்பதற்கான மிக முக்கிய காரணங்களில் ஒன்று உடல் பருமன். இவை முழங்கால்கள் மற்றும் மூட்டுகளுக்கு அதிக அழுத்தத்தை கொடுக்கிறது. எனவே சிறந்த டயட் மற்றும் உடற்பயிற்சி மூலம் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இது மழைக்காலம் மற்றும் குளிர் காலத்தில் மட்டுமல்ல எல்லா காலத்திற்கும் பொருந்தக்கூடிய ஒன்று.

ஆரோக்கியமான உணவு முறையை கடைப்பிடித்தல்

எலும்புகளுக்கு வலுவூட்டும் கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதோடு, உடலில் ஏற்படும் அழற்சி மற்றும் வீக்கத்தை கட்டுப்படுத்தும் உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மூட்டு வலிக்கு இதமான எண்ணெய் மசாஜ்

மூட்டு வலிகளுக்கு கடுகு எண்ணெய் மசாஜ் நல்ல பலனை கொடுக்கும். இது தவிர தேங்காய் எண்ணெய் நல்லெண்ணெய் ஆகியவையும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி தசைகளை தளர்த்தி, மூட்டு வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும். எண்ணெய் மசாஜ் மூட்டுகளின் இயக்கத்தை மேம்படுத்தி வலுவாக்கவும் உதவுகிறது.

போதுமான அளவு தண்ணீர் குடித்தல்

பொதுவாக குளிர்காலம் மற்றும் மழைக்காலங்களில் தண்ணீர் குறைவாக குடிக்கும் பழக்கம் பலருக்கு இருக்கும். அவ்வாறு அல்லாமல் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால், உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும். அதோடு மூலிகை நீர் போன்றவற்றையும் தவறாமல் எடுத்துக் கொள்வது நல்லது.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிங்க |15 கிலோவை குறைக்கும்..எளிமையான டயட்! இதை ஃபாலோ பண்ணுங்க போதும்

மேலும் படிங்க | முதுகு வலியை முற்றிலும் நீக்கும் சிம்பிள் உடற்பயிற்சிகள்! என்னென்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News