Leaves for Cholesterol Control: உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும் போது, கைகள் மரத்துப் போதல், கால்களில் வலி, மார்பு வலி, குமட்டல், பார்வை மங்கலாகுதல், கரும்புள்ளிகள், கண்களில் வலி, கண்களைச் சுற்றியுள்ள தோல் மஞ்சள் நிறமாக மாறுதல் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. கெட்ட கொலஸ்ட்ரால் பொதுவாக மோசமான வாழ்க்கை முறையின் விளைவால் ஏற்படுவதாக கருதப்படுகின்றது. ஆகையால், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை மூலமாகவும் அதைக் கட்டுப்படுத்த முடியும்.
கெட்ட கொழுப்பின் அளவு அதிகமாகும் போது, கடுமையான சந்தர்ப்பங்களில், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் இதயத்தின் அழுத்தத்தைக் குறைக்கவும் மருத்துவர்கள் மருந்துகளை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தலாம். ஆனால் ஆரம்ப கட்டத்தில், வீட்டு வைத்தியம் மூலம் அதைக் கட்டுப்படுத்தலாம். கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க உதவும் சில பச்சை இலைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Curry Leaves: கறிவேப்பிலை
உடலில் கெட்ட கொழுப்பைக் குறைப்பதில் கறிவேப்பிலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதில் உள்ள ஆண்டிஆக்சிடெண்டுகள், நல்ல கொழுப்பை அதிகரிக்க அவசியம். கறிவேப்பிலையின் நன்மைகளைப் பெற, தினமும் 8-10 இலைகளை சமையலில் பயன்படுத்தலாம். மேலும், கறிவேப்பிலை சாற்றை குடிப்பதும் நன்மை பயக்கும். எனினும், இதை தினமும் சாப்பிடும் முன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
Coriander Leaves: கொத்தமல்லி இலைகள்
கொத்தமல்லி இலைகள் அனைத்து வீடுகளிலும் சமையலில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இது உணவில் சுவையை அதிகரிப்பதோடு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் மிகவும் நன்மை பயக்கும் என்பது தெரியாது. இதை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம், அதிக கொழுப்பின் பிரச்சனையை குணப்படுத்தலாம். கொத்தமல்லி இலைகளை உணவு வகைகளில் சேர்ப்பதோடு, அதை சட்னி செய்தும் உட்கொள்ளலாம்.
Jamun Leaves: நாவல் பழ இலைகள்
கொழுப்பைக் குறைக்க நாவல் பழ இலைகள் சிறந்த வீட்டு வைத்தியமாக கருதப்படுகின்றன. இதில் ஆண்டிஆக்சிடெண்டுகள் மற்றும் அந்தோசயினின்கள் போன்ற பண்புகள் உள்ளன. அவை நரம்புகளில் படிந்துள்ள கொழுப்பைக் குறைக்கும் பணியை செய்கின்றன. நாவல் பழ இலைகளை தூள் வடிவிலும் உட்கொள்ளலாம். அல்லது அதன் தேநீர் அல்லது கஷாயத்தை ஒரு நாளைக்கு 1-2 முறை குடிக்கலாம்.
Fenugreek: வெந்தயக்கீரை
வெந்தய இலைகளில் உள்ள மருத்துவ பண்புகள் உடலில் படிந்துள்ள அழுக்கு கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைட்டின் ஆரோக்கியமான அளவுகளை பராமரிப்பதில் உதவுவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஆகையால், கெட்ட கொழுப்பை குறைக்க வெந்தயக்கீரையை அவ்வப்போது உட்கொள்ளலாம்.
Tulsi: துளசி இலைகள்
கொழுப்பு அளவை குறைப்பத்தில் துளசி இலைகளும் அதிக நன்மை பயக்கும். அதில் உள்ள பண்புகள் வளர்சிதை மாற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. இது உடல் எடை மற்றும் கொழுப்பைப் பராமரிக்கிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் துளசி இலைகளை உட்கொள்ளலாம். 5-6 இலைகளை நன்கு கழுவி துடைத்து பின் உட்கொள்வது நல்லது. அல்லது துளசி தேநீரும் குடிக்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | காலில் அதிக வலியா? சிறுநீரக பாதிப்பாக இருக்கலாம்! ஜாக்கிரதை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ